முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 14-வது பாகம்)
உதாரணமாக 31.07.2011ஆம் ஆண்டு 39812 பத்திரங்கள் நிலுவை, அதற்கு மதிப்பு நிர்ணயிக்கப்படாமல் 924 கோடி ரூபாய் முடங்கி இருந்தது, அதில் 125 கோடி “CASH FLOW” எடுக்க வேண்டும் என்று லட்சியம் வைத்து, தொலைகாட்சி, உள்ளூர் செய்தி தாள்கள், நேரில் சென்று வீட்டு வீடாக பிரச்சாரம் என்று பதிவுதுறை 39 கோடி வரை வசூல் செய்தார்கள், இப்படி சமாதன திட்டம் வைத்து நஷ்டத்தில் வசூல் செய்வதற்கு பதிலாக முரண்பாடு இல்லாத MVG யை மெனக்கெட்டு நிர்ணயித்தால் பதிவு துறையும் சிறப்பாக இருக்கும் அரசும் நலத்திட்டங்களை செயலாற்றுவதற்கு வசதியாக இருக்கும்.
அதற்கு அடுத்ததாக 47(A) யின் கீழ் வரும் பத்திரங்களை சட்ட விரோத ஆதாயம் பெற்று கொண்டு பத்திரம் பதிந்த சம்சாரிகளுக்கு சாதகமாக பத்திரங்களை விடுவிக்க இறுதியானை பிறப்பிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது அது உண்மையாக இருந்தால் பதிவு துறைக்கு வருவாய் கசிவு நிச்சயம் அதே போல் 47A(3) யின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய பத்திரங்கள் கால வரையறை சட்டத்தின் படி விரைந்து முடிக்க வேண்டும் நீண்ட காலம் நிலுவையில் வைத்து விட்டு கால வரைவு சட்டம் நெருக்கும் பொழுது அவசர அவசரமாக பத்திரத்தை திரும்ப கொடுக்கின்ற நிலை பதிவு துறைக்கு வருகிறது அதனால் நிறைய இழப்புகளுடன் தான் இறுதியாணை கொடுக்கிறார்கள் சில நேரங்களில் கட்டணமே வாங்காமல் பத்திரத்தை திருப்பி கொடுத்ததை கேள்வி பட்டு இருக்கிறேன் இப்படி பதிவு துறையின் 47(A) நடவடிக்கையை செய்யும் அதிகார மையமான மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) தனி துணை ஆட்சியர் (முத்திரை) என்று சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் எல்லாம் நியமித்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து நிர்வாக செலவுகள் செய்து நிறைய வருவாயை பெருக்காமல் இழப்புகளை தான் உருவாக்கி கொண்டு வருகிறார்கள். ஏறக்குறைய பதிவு துறையில் 47(A) வில் பணியாற்றும் அதிகாரிகள் பதிவு துறைக்கே மூட்டைகளாகி (baggage) ஆகி போனார்கள் என்பது தான் பரிதாபம்
எனவே இனி வருகின்ற காலங்களில் MVG யை நிர்ணயிக்கும் பொழுது மெனெக்கெட்டு சிரத்தை எடுத்துக் கொண்டு முரண்பாடுகள் இல்லாமல் நிர்ணயிக்க வேண்டும்.
நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…