முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 11-வது பாகம்)
இப்படி பதிவு சுழற்சியை அதிகரிக்காமல் அதிக 47(A) பத்திரங்களை பதிந்து அந்த பத்திரங்களை சீக்கிரம் விசாரித்து சம்சாரிக்கு திருப்பி கொடுக்காமல் ஆண்டாண்டு காலமாக இழுத்தடித்து பதிவு நடவடிக்கை இயங்கியல் (REGISTRATION DYNAMICS) சிதைப்பதையே பதிவு துறை செய்து கொண்டு இருக்கிறது
ஏன் பதிவு துறை மேல் குறை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள் என்று என்னை கேட்க கூடும் 47(A) அதிகமாக சம்சாரிகள் தானே தாக்கல் செய்கிறார்கள் அவர்களை தானே குற்றம் சொல்ல வேண்டும் இருக்கின்ற வேலை பளுவில் 47(A) கோப்புகளை நகர்த்துவது பதிவுத்துறை பணியாளர்களுக்கு அதிக சுமை அல்லவா ? என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இதெற்கெல்லாம் உண்மையான காரணம் 2012 ஆம் ஆண்டு MVG யை நிர்ணயிக்கும்பொழுது முரண்பாடுகள் இல்லாமல் குழப்பங்கள் இல்லாமல் அள்ளி தெளித்த அவசர கோலம் இல்லாமல் நின்று நிதானமாய் பொறுமையுடன் ஆழமான களப்பணி மெனெக்கெட்டு செய்தால் இப்படி அதிகமான 47(A) பத்திரங்களை சம்சாரிகள் தாக்கல் செய்ய போவது இல்லை! எனவே முரண்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் கால் சதவீதம் அரை சதவீதம் அளவிற்குத்தான் 47(A) பதிவு நடவடிக்கை தாக்கல் என்று கட்டுக்குள் வரும் எனவே எவ்வளவுக்கு முரண்பாடுகளை கலைகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு 47(A) தாக்கல் சம்சாரிகளால் செய்வது குறைந்து விடும் அதன் மூலம் பதிவு சுழற்சி அதிகமாகும் பதிவுத்துறை நிலைத்த நீடித்த வளர்ச்சியை நோக்கி நகரும்.
47(A) தாக்கல் குறைய வேண்டும் என்றால் MVG யில் முரண்பாடுகள் களைய வேண்டும் என்று நான் சொல்கிறேன் ஆனால் தற்பொழுது எல்லாம் எந்த சம்சாரியாவது முரண்பாடுகள் இருக்கிறது நான் 47(A) யில் பதிவு செய்கிறேன் என்று சொன்னால் அந்த பதிவினை சார்பதிவாளர்கள் பதிவதே இல்லை! எங்களுக்கு வாய்மொழி உத்தரவு 47(A) பத்திரங்கள் பதிய கூடாது என்று உயர் பொறுப்பில் உள்ளவர்கள் சொல்லி இறக்கிறார்கள் என்று 47(A) தாக்கலை தடுத்து நிறுத்துகிறார்கள் இப்படி MVGயிலும் முரண்பாடுகள் வைத்துக் கொண்டு 47(A) யை சம்சாரிகள் தாக்கல் செய்ய விடாமல் பதிவு சுழற்சியை சக்கரத்தின் தடிமனான கட்டையை குறுக்கே விட்டு பதிவு சுழற்சி சக்கரத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.

(நாளை தொடரும்....

இப்படிக்கு,

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…