முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 10-வது பாகம்)
பல கிராமங்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து இடங்களிலும் சர்வே எண்களுக்கு தெரு மதிப்பு காண்க என்று MVG யில் பதிவு செய்து இருப்பார்கள் ஆனால் அந்த சர்வே எண் எந்த தெருவிலும் இல்லாத நிலமாக இருக்கும் இந்த நிலையில் ஒரு சம்சாரி வழிகாட்டி மதிப்பை குறைவாக மதிப்பிட்டு பதிவுக்கு 47(A) யின் கீழ் தாக்கல் செய்வார்கள் இதனை பதிவுத்துறை DIG நேரில் வந்து தலத்தை ஆய்வு செய்து இதற்கு MVG நிர்ணயம் செய்ய வேண்டும் இந்த பத்திரத்தை திரும்ப பெறுவது “கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்தது போல” பாடாய் பட வேண்டும் இப்படி நிலத்தை மனையாக மதிப்பிடுவது மனைப்பிரிவாக மாற்றப்படாத நிலங்களுக்கு மனை மதிப்பு நிர்ணயிப்பத்து மனைபிரிவை அங்கீகாரம் பெற்றவைக்கும், அங்கீகாரம் பெறாதவைக்கும் வித்தியாசம் இல்லாமல் MVG நிர்ணயிப்பது விவசாய நிலங்களில் உள்ள பத்து வகைப்பாடுகளையும் மாற்றி மாற்றி நிர்ணயிப்பது மனை மதிப்பில் உள்ள 5 வகைப்பாடுகளை மாற்றி மாற்றி நிர்ணயிப்பது என்று எல்லா குழப்பங்களும் பழைய MVG யில் செய்து வைத்து இருக்கிறார்கள் இவற்றால் எல்லாம் பாதிக்கப்படும் சம்சாரி 47(A) யின் கீழ் பத்திரங்களை பதிய தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி தாக்கல் செய்தால் பத்திரம் திரும்ப பெறுவது அதிக தாமதம் ஆகின்றது இப்படி பத்திரம் பதிவுத்துறையில் அதிக காலம் நிலுவையில் இருந்தால் பதிவு சுழற்சி பாதிக்கப்படுகிறது ஒரு வணிக நிறுவனத்தில் லாபத்தை விட பண சுழற்சி (cash) அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அனைத்து தொழில் முனைவர்கள் அறிந்த ஒன்றாகும் ஆனால் பதிவு துறை மட்டும் நிறைய பத்திரங்களை அதிக காலம் 47(A) யின் கீழ் நிலுவையில் வைத்து இருக்கிறது இப்படி நிலுவையில் வைத்து இருப்பது பதிவு துறையின் பதிவு சுழற்சியை குறைக்கும் ஒரு சம்சாரியின் பத்திரம் பதிந்து பதிவுதுறையை விட்டு வெளியே போனால் தான் அந்த சம்சாரி வித்தொத்திதானதிவிநிமைய விக்கிரயங்களுக்கு அந்த பத்திரங்களை உற்படுத்துவார்கள் அதன் மூலம் ஆண்டு தோறும் பதிவு சுழற்சி அதிகரித்து கொண்டே இருக்கும்

(நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…