வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்!

வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்!

தமிழக அரசியலில் ஒரு வெளிப்படைதன்மையை இந்த மாநில அரசு கொண்டு வந்து இருக்கிறது.சட்டியில் என்ன இருக்கிறது!அகப்பையில் என்ன வரும் என்று தெளிவாக வரையறுத்து சொல்லி இருக்கிறார்கள்.இந்த வெள்ளை அறிக்கையை பொறுத்தவரை கடந்த கால ஆட்சியினரை குறை சொல்வதாக எடுத்து கொள்ள கூடாது என்பது என் பார்வை இது முழுக்க முழுக்க மாநிலத்தின் நலன் சாரந்த வெள்ளை அறிக்கை இப்பொழது நாம் எங்கு இருக்கிறோம் எதனை நோக்கி போகிறோம் என்பதை தெளிவபடுத்த வேண்டியதைதான் வெள்ளை அறிக்கை சொல்கிறது.

இதனை வைத்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவார்களா?இந்த அறிக்கை கடந்த கால அரசை குறை சொல்கிறார்களா?என்றெல்லாம் நாம் பார்க்க தேவையில்லை!இன்றைய தமிழகத்தின் நல்ல வளர்ச்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் கிடைப்பதற்கு 1920 களில் இருந்து நீதிகட்சி ஆட்சியில் தொடங்கி காங்கிரஸின் அய்யா காமராஜர் செயல்படுத்தி நிறையை கொள்கை திட்டங்களை தமிழகத்தின் நீண்ட கால நோக்கில் கலைஞர் கருணாநிதி வகுத்து செயல்பட்டு அதனை புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயல்லிதா அம்மையார் ஆகியோர் வரை செயல் படுத்தி இருக்கிறார்கள்

எல்லா நிர்வாகத்திலும் பிழைகளும் குறைகளும் இருக்கிறது.imperfect is perfect என்று சொல்லுவார்கள்.ஏனென்றால் perfect ஆக இருந்தால் அங்குவளர்ச்சி என்பது இருக்காது.எல்லா நல்ல வளரச்சியும் கோணல் மாணலாகதான் போகும்!வளராதா perfect வேண்டுமா கோணலான வெற்றி வேண்டுமா என்றால் (shabby success )கோணலனா வெற்றா தான் வேண்டும் என்பேன்!

எனவே கடந்த ஆட்சியில் கோணல் ஆகிவிட்டது என்று புகார் சொல்வதை விட கோணலும் ஒரு வளர்ச்சி தான் நம்முடைய கடந்தகால பாதையை சரி பார்த்து கொள்வதற்கும் திருத்தி கொள்வதற்கும் எதிர்பாராத பேரிடர்பகளை தாண்டி நீடித
து நிலைத்த வளர்ச்சி பெறுவதற்கும் கடந்த கால கோணல்கள் உதவும்!

சரி இதுவரை நடந்த இழப்புகளை எல்லாம் எப்படி சரிசெய்யலாம் என்று என்று நிதி அமைச்சரே சொல்கிறார்.வருகிற வருமானம் மாநில அரசின் நேரடி வரிவருமானம்,அடுத்து முத்திரைதாள்கள் போன்ற வரியில்லா வருமானம்,ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய வரிபங்கு,மற்றும் ஒன்றிய அரசின். மானியங்கள் என்று பட்டியல் இடுகறார் இவற்றில் ஒன்றிய அரசில் இருந்து நமக்கு வர வேண்டியது தற்பொழுது வரவில்லை இதுபோல் வராமல் போனாலும் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலம் நிச்சயம் தன்னை தானே நிலை நிறுத்திகொள்ள கூடிய அளவுக்கு சக்தி இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்!

ஆங்கிலத்தில Hopeful optimism என்று சொல்லுவார
கள் ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு சொல்வார்கள் !அந்த தன்னம்பிக்கை பேச்சுகள் இந்திய பிரதமரின் வாயில் நிறைய கேட்டு விட்டோம் .அதுபோல் வடை சுடுவது போல் இல்லாமல் அதாவது . நிதி அமைச்சர் நாம் பேசுவது hopefull optimism ஆக இல்லாமல் தெளிவான வரையுறுக்க பட்ட திட்டங்களின் அடிப்பையில் சிறந்த தரவுகளை கையில் வைத்து பேச வேண்டும்

ஆனால் நிதி அமைச்ச்ர் இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்ரை மேலும் அடிமட்ட லெவலில் என்ன நடக்கிறது என்று வெளப்படைதன்மை்இல்லை,முறைகேட்டில் பயன்பட்டு கொண்டு இருக்கற மக்கள் (vested intreated) மக்கள் இதனை எல்லாம் எதிர்ப்பார்கள்,அதற்கு political will administrative skill எல்லாம் வேண்டும் என்று சொல்கிறார்.இன்னும் நிறைய வல்லுனர்களை ஆலோசகராக போட்டு இருக்கறோம் என்றெல்லாம் சொல்கிறார்.அதனால் இன்னும் தெளிவான திட்டங்களை நோக்கி போக முடிவு எடுக்கவில்லை இன்னும் தகவல்களை எதிர்பார்கிறார்கள் அதனையெல்லாம் விரைவில் பெற்றுவிடலாம்

ஆனால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கொண்டு உருவாக்க போகிற புதிய கொள்கை திட்டங்களை நடைமுறைபடுத்தாமல் இருக்கிற vested interested மனிதர்களை எதிர்ப்பதற்கு administrative skill நிதி அமைச்சருக்கும் முதல்வருக்கும் அமைச்சரவைக்கும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

சமூக நீதியோடு அனைத்து வளர்ச்சியும் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார்!ஒரு காலத்தில் பெரியார் அம்கேத்கார் மார்க்ஸ் என்று அடிதட்டு நடுத்தர இளைஞனின் மனதை அரசியல் பக்குவபடுத்தினார்கள் அவையெல்லாம் வலதுசாரிகளுக்கு எதிரானது அதனை உணர்ந்த வலதுசாரி vested intrested மாஸ்டர் மைண்ட்கள் ஆண்டபரம்பரை ,சாதி பெருமை,இராமன் சிவன் என்று கிராமதோறும் இளைஞர்கள் மனதில் வலது சாரி விதைகளை விதைக்க ஆரம்பத்தில் புரட்சி பேசிய தலைவர்களை விலைக்கு வாங்கி சமூகநீதக்கு எதிராக மக்கள சக்த்தியை திரட்டுகிறார்கள்.இந்த வலதுசாரகள் நீங்கள் செய்ய போகும் சீர்திருதங்களுக்கு மாற்றத்திற்கு உதவிட மாட்டார்கள் அதனை எதிர்ப்பார்கள்

ஏற்கனவே 1979 களின் கலைஞர் கருணாநிதி இப்படி பல்வேறு சீர்தருத்தங்களை செய்ததால் அனைத்து vested intrest நபர்களும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரை உரிவாக்கினார்கள்.நிறைய சமூக நீதி நடவடிக்கைகளை dilute(நீர்த்துபோக) செய்தனர்.அதன்பிறகு கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான் அதிமுகவுக்கு அரசியல் ஆனது.இப்பொழது அவரும் ஜீவதிசை அடைந்து விட்டார் இப்பொழது அதிமுகவிக்கு் ஒரே வாய்பபு தான் வலதுசாரி கட்சியாக மாற வேண்டும் அதனைதான் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்,ஏற்கனவே அண்ணாவை கொடியில் இருந்து எடுக்க சொல்லி கூக்குரல் வருவதை அறிவோம்
இதனையெல்லாம் இந்த ஆட்சியனர் நினைவில் வைத்து கொண்டு நீங்கள் வெளியட்ட வெள்ளை அறிக்கை இழப்புகளை சரிகட்டவும் தமிழகத்தை நிலைத்த நீடித்த வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் அரசியல் மன உறுதியும் நிர்வாக திறமையும் தெளிவான திட்டமிடுதல
இருந்தால் கீழ்கண்ட பகுதகளில் சரி செய்ய வேண்டியவை நிறைய இருக்கறது

 

1)தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமாக நிறைய நிலங்கள் இருக்கிறது.அவற்றில் சில இலட்சம் ஹெக்டேர் ஆக்கிரமிபில் இருக்கறது.அதேபோல் 5000ஏக்கர் 3000ஏக்கர் போன்ற நில வங்கி ஏர்போர்ட் போன்று உள் கட்டமைப்பு கட்டுவதற்கு நிலமல்லை என்று எல்லாம் சொல்லி இருக்கிறார்.

2)நில சீர்திருத்த துறை(Land Reform)என்ற துறை அதன் ஆவணங்கள் முழுதும் ஆன்லைன் செய்யங்கள் .எந்த நிலம் உச்சவரம்பு சட்டத்தில் உள்ளது எவற்றை அரசு கைபற்றி விட்டது இன்னும் எவற்றை கைபற்ற முடியவில்லை.கைபற்றிய நிலங்கள் நிலமற்றவர்களகு்கு வழங்கி அவர்கள் அதனை விதி மீறி இருக்கிறார்களா ?என்ற பரிசோதனை எதுவும் இதுவரை நடக்க வில்லை! அவற்றை எல்லாம் முறை படுத்தி செயல் படுத்துங்கள்

சுமார் 2 ஏக்கர் இலட்சம் நிலங்களை வழங்கியதாக நிலசீர்திருத்ததுறை சொல்கிறது ஆனால் அதில்
போகஸ் டிரஸ்ட்,பினாமி நில கைபற்றுதார்ர,நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நிலுவையிலே வைத்தல்,நிலசீர்திருத் சட்டம் போட்டபிறகு கேரளாவில் சென்று பத்திரம் செய்தல்,நிலத்தின் எல்லைகளை சுற்றி மரம் நட்டு வைத்துவிட்டு தோப்பு என்று விதிவிலக்கு பெறுதல் ,சீதனம் என்று விதிவில்கு பெறுதல்,பல துண்டு நிலஙலகளாக அப்பாவி மக்களுக்கு விற்றுவிடுதல் ,நிர்வாக பலமின்மை,மோதுமான ஆவண பராமரிப்பினமை,,லஞ்சம் ஊழல்,37 பிரிவின் கீழ் நில்ஙகள் வழங்குதல் போன்றவற்றில் எல்லாம் நிறைய முறைகேடுகள் செய்து இருக்கிறார்கள். உபரிநில உரிமையாளர்களுக்கு நிலத்தை எடுக்காமல் இருக்க நிறைய அப்பீல் வாய்ப்புகள் கொடுத்து
சீலிங்கில் இருந்து தப்பிக்க வழி வகுத்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்
உபரிநில உரிமையாளரின் ஒரே தாத்தாவை புதைத்துவிட்டோ புதைக்காமலொ நிலத்தை குடும்ப சுடுகாடு என்று சொல்லி சீலிங்கில் விலக்கு பெறுதுல்.நஞ்சையை புஞ்சை என்றும் புஞ்சையை நஞ்சை என்றும் கணக்கு மாற்றி எழுதி சீலங்கில் இருந்து விலக்கு பெறுதல்,மைனரை மேஜர் என்று கணக்கு காட்டுதல்,குடும்ப உறுப்பினர்களை கூட்டி காட்டுதல் ,சீர்திருத்தம் சட்டம் போட்டவுடன் புதிய சமய நிறுவனங்களை உருவாக்குதல் அதற்கு நிலம் எழுதுதல் உதாரணமாக ஒரிவ்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2962 போகஸ் டிரஸ்டுகள் சாமி பேரில் உருவாக்கி பத்தொன்பது இலட்சத்து எண்பத்துஇரண்டாயரத்து எழுபது ஏக்கர் நிலங்கள் இருக்கிறது.இப்படிபல்வேறு வகையில் கொங்குபகுதியில் தொண்டைமண்டலத்தில் மதுரை மற்றும் நெல்லை பகுதியில் பலவேறு வகையான மோசடி செய்து நிலசீர்திருத்த துறையை ஒட்டு மொத்தாக தோல்வி அடைய வைத்து இருக்கன்றனர்.அன்றைய பெரும் நில கிழார்கள்!அது மட்டும் அல்லாமல் எல்லா நில கிழார்களும் நில சீர்திருத்த சட்டம் இறுக்கமாக போட்டு நடைமுறைபடுத்திய கலைஞர் கருணாநிதிக்கு எதிராக தீயசக்தி என்று அவர்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்கால் மக்கள் மனதில் பதித்தனர்.அதனால் கலைஞரும் அதன்பிறகு நிலசீர்திருத்த துறை பக்கம் 1990 களுக்கு பிறகு போகவே இல்லை அதனை தொடவே இல்லை மீண்டும் பெரிய நில கிழார்களை பகைக்கும் எண்ணமல்லாமல் போய்விட்டார்

அதேபோல் விடோபாவின் பூமிதான போர்டும் எந்தவி ஆன்லைனிம் ஆகாமல் ஆகாமல் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது அதில் 27 ஆயிரம் ஏக்கர் கணக்கில் இருக்கிறது அதில் 7 ஆயிரம் ஏக்கர் வழங்கபடாமலேயே இருக்கறது.இருக்கின்ற 20 ஆயிரம் ஏக்கர் என்ன நிலையில் இருக்கறது என்ற கண்காணிப்பும் இல்லை!உரிய நபரிடம் அல்லது உரிய வாரசுதார்ரடம் இருக்கிறாதா?என்று இன்னும் ஊர்ஜிதம் செய யாமலேய்யே இருக்கறார்கள் பூமிதான நிரவாகத்தினர்!அவர்ரகளிக்கு என்று நேரடி களபணியாளர் சரவேயர் தாலுகா அளவில் ஒருவர் கூட இல்லாத்தால் இந்த நில்ங்கள் ஆக்கிர்மிப்பில் போகின்றன .பூமிதான போர்டு நிலஙலகள் விவசாயம் காலநடை சார்ந்த வணிக பயன்பாட்டுக்கும் விவசாயம் காலநடை சாரந்த தொழிற்கூடத்திற்கும் விவசாய கூட
டுறவு சொசைட்டிகளுக்கும் ஒப்படைக்க வேண்டும்.ஆனால் இந்த பணியை செய்ய தலைமைத்துவத்திடன் செயல்பட குழுக்கள் வேண்டும்.

அதே போல நகர்புற நில உச்சவர்ம்பு நிலத்தில் அறியாத கிரயதார்ர என்று தெரியாமல் வாங்கிவட்ட மக்களுக்கு வரன்முறை பணுத்துதல் படி மனு செய்தால் முறையான கட்டணம் மட்டும் கட்ட சொன்னால் அதற்கு தவணை தொகையும் கொடுத்தால் அதற்கான வேலைகளை எல்லாம் ஆனலைனிலே செய்துவிட ஏற்பாடு செய்தால் அரசிற்கு நேரடியாக வருமானம் வரும்.எதற்காக நேரடியாக ஜாரஜ் கோட்டைக்கு வர சொல்கிறார்கள் எதற்காக வரன்முறை படுத்துதல் மனுவை நிலுவையில் வைத்து இருக்கிறார்கள் என்பது ஜாரஜ் கோட்டை மியூசியத்தில் நிற்கும் வெல்லஸ்ஸி பிரபுக்குதான் வெளிச்சம்.

அடித்து வருவாய் துறையில் நிறைய ஒப்படை பட்டாக்கள் பயனாளிகள் இருக்கிறார்கள்!Fபட்டா,டி கார்டு பட்டா,டி நமுனா பட்டா,ஏடி பட்டா,டிகேடி பட்டா,எச்எஸ்டி பட்டா ,அசைனமெண்ட் பட்டா இப்படி பல பட்டாநார்ர்கள் இருகரகிறார்கள் இந்த பட்டாக்களை தூயபட்டா ஆக்க அடுத்து எப்பொழுது சர்வே வருகறதோ அப்பொழது செய்து கொள்ளலாம் என்று தள்ளிபோட்டு கொண்டே வருகிறார்கள்.இவர்களுக்கு எல்லாம் பட்டா வழங்க ஒரு ஆன்லைன் போர்டடல் உருவாக்கி சரவே செலவும் மக்களிடமே பெற்று கொண்டு புலதணிக்கையும் பயனாளி தணிக்கையும் செய்து கட்டணம் வாங்கலாம்.இதன் மூலம் நல்ல வருமானம் அரசுக்கு வலும்.மக்களுக்கும் தூயபட்டா வந்துவிட்டது என்ற மனநிறைவு வந்துவிடும்.இதே போல ந்த்தம் நிலவரி திட்டம் நடக்காத கிராமங்களில் ஆன்லைனில் நில உடைமையாளர்களை மனு செய்ய சொல்லி மக்களிடமே பணம் வசூலித்து சரவே செய்யலாம்.ந்த்நம் கணக்கை ஆன்லைனில் ஏற்ற தனியாக தக்களினமே பணத்தை வசூலித்து கொள்ளலாம்.பணம் வசூலித்து ந்த்தம் பட்டா ஆன்லைனில கொடுப்பதால் எந்தவித தவறுத் இல்லை ஆன் லைன் ந்த்தம் கணக்கை ஏத்தாமல் மக்கள் படும் சிக்கல்கள் தான் அதிகம் அதனால் மக்கள் பணம செலுத்துவார்கள்

அரசு நிலங்களை காட்டு நிலங்களை,மலைகளை நீர்நிலைகளை கடைசியாக நாம் சர்வே செய்து இருப்பது தியோடலைட் கருவி செயின் மலைபகுதிகளல் காம்பஸ் போன்ற கருவிகளை வைத்து மூலைவிட்ட செங்குத்தளவு முறையில் அள்க்கை செய்து இருக்கிறோம்.இந்த தொழில்நுடபம் எல்லாம் 1960 களின் நொழிலநிட்பம் இன்னும் நம்முடைய கணக்குகளை அதிலேயே பராமரிக்கிறோம்.இப்பொழது GPS சர்வே வந்துவிட்டது ஒட்டு மொத்த தமிழநாட்டை GPS இல் அளந்தால் அளவு பிழைகள் இல்லாத துல்லியமாக ஒரு கிராமத்திற்கு 10 இலருந்து 50 ஏக்கர் வரைகூட மிச்சம
வரும்.நிலத்தின் உருவ பிழை என்று ஒன்று GPS சரவேயால் வராது.இனி வருகின்ற கிரய பத்திரங்களில் சொத்துவிஒரத்தில் GPS புள்ளிவிவரங்களையும் போட்டு பதிய ஆரம்பார்ககள் ஆக்கிரமிப்பு நாவாக்கள் நிலசிக்கலஙள் என்று எதிவிமே வராது.மக்களுக்கும் போலி ஆவண சிக்கல் பத்திரம் வேறு அனுபோகம் வேறு சிக்கலகள் வராது!பெரும்பாலனா நீதிமன்ற வழக்குள் குறையும்!

தமிழகம் முழுவதும. கூட்டு முதலீட்டு திட்ட நிலங்கள் என்று PACL ,கலைமகள் சபா,ஸ்டெர்லிங்,அனுபவ் போன்ற பல்வேறு நலங்கள் நீதிமன்றத்தன் கட்டுபாட்டில் சில இலட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கறது.அரசு அதனைஎல்லாம் ஏலத்தில் எடுத்து பொது திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.மக்களிடம் நிலார்ஜிதம் செய்து மக்களுக்கு நஷட ஈடு கொடுக்கும் பணத்தைவிட குறைவாகத்தான் இருக்கும்.நில ஆர்ஜித சிக்கல்கள் இருக்காது pacl மோன்ற நிறுவனங்கள் எல்லாம்ஒவ்வொரு மாவட்டத்திலும் சிப்காட் நடத்நும் அளவுக்குநிலங்களை வைமத்து இருக்கிறார்கள்.அதனால் நிலவங்கி இல்லை என்று யோசித்து கொண்டு இருக்க வேண்டாம்

எனவே நமது தமிழக அரசு செய்யவேண்டியதாவது

1)பழைய நில உச்சவர்மபு சட்டத்தில் அரசை ஏமாற்றி நிலத்தை வைத்து இருப்பவர்கள் கோப்புகளை மீண்டும் மறுதிறப்பு செய்து முறைகேடானவற்றை இரத்து செய்து அரசுக்கு நிலத்தை கொண்டு வாருங்கள்

2)தமிழகம் முழுவதும் இருக்கின்ற கூட்டு முதலீட்டு திட்ட நிலங்களை அரசின் தொழிபேட்டைகளுக்கு நீதிமன்றத்தில் இருந்து வாங்கிங்கள்!ஒரு துண்டு நிலத்தையும் தனியாரிக்கு கொடுக்காதீர்கள்

3)நகர்புற உச்சவரம்பு ஒழுங்குபடுத்த பட்டா பெறுதல் ஒப்படைபட்டா அயன் பட்டா ஆக்குதல் அதற்கான சர்வே செலவுகள்,ந்த்தம் ஆன்லைன் ஆக்குதல் ந்த்தம. சரவே செய்தல் ஆகும் செலவுகள் என அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களிடமே பணத்தை பெற்று கொண்டு செய்து கொடுங்கள்

4)பூமிதான போர்டை ஒரு ஆன்லைன் போர்டலாக்கி அது சம்மந்தமான விஷயங்களை அங்கேயே பணம் கட்டி செய்து கொள்ளுமாறும் அதில் இருக்கும் நில வங்கியை புத்திசாலிதனமாக பயன்படுத்தவும் செய்ய வேண்டுகறேன்

ஆக நிலம் தான் வளம்!நில நிரவாகம் தான் சீரானால் அனைத்து நிரவாகமும் அதன் மேலதான் கட்டபட்டு இரிக்கறது.அதனால் நிலவங்கியை பாதுகாத்தல் மக்களுக்கு அளித்த வீட்டுமனை விவசாய நிலங்களுக்கு பணம் பெற்று கொண்டு சர்வே செய்தல் பட்டா தருதல் என்று ஆன்லைன் மூலமே செய்ய முற்படும்பொழுது இந்த வெள்ளை அறிக்கை இழப்பு மட்டும் அல்ல இனி இழப்பே வராத உபரியாக தமிழ் மாநிலம் இருக்கும்

அனைத்து தரப்பு மக்களிக்கும் நிலத்தின் பயன் சேரவேண்டும் என்ற இலட்சிய பயணத்தில்

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

நூலாசிரியர்-நிலம் உங்கள் எதிர்காலம் 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்