கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர்!!

கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர்

ஒரு பாக்டீரியா படாத இடத்தில் பட்டு விட்டால் ஒரு மனிதனின் தோல்களில் உள்ள திசுக்களை சாப்பிட ஆரம்பித்து விடும்.அந்த கெடுதி செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை நிறுத்த நிறைய நரம்பூசிகள் போட்டால்தான்அ பாக்டீரியா கட்டுபடும் என்று டாக்டர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.இந்த பாக்டீரியாவில் நல்லது செய்யும் பாக்டீரியா கெடுதி செய்யும் பாக்டீரியா என்று இரண்டு இருக்கிறது!நமது வயிற்றில் இருக்கும் GUT பாக்டீரீயா நல்ல வகையிலானவை நமக்கு நோய்களை விளைவிப்பவை கெட்ட பாக்டீரியாவாகும்.
இந்த பாக்டீரியாக்களை பற்றி நமக்கு அறிவியல் பூர்வமாக உலகத்திற்கு அறிவித்தவர் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் லூயி பாஸ்டர் அவர்கள் ஆகும்.இவரை பாக்டீரியாவின் தந்தை என்று சொல்வார்கள்.

ஒயின் தயாரிப்பது பீர் தயாரிப்பது தயிர் தயாரிப்பது போன்றவற்றில் எல்லாம் பாக்டீரியாக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்!அதேபோல. பால் மிகபெரிய வணிகமாக காரணம் பச்சைபாலில் உள்ள கிருமிகளை அழிக்க பாலை சூடாக்கி ஆறவைத்து அதில் இருக்கும் பாக்டீரியாவை சாகவைத்தபிறகைதான் பாக்கெட்டில் பாட்டிலில் பால் அடைக்கபடுகிறது.இந்த நடைமுறைக்கு பாஸ்ட்ரைசேசன் என்று லூயி பாஸ்டர் பெயரே வைத்து இருக்கிறார்கள்!

இந்த உலகத்தில் போரால் மரணித்தவர்களை விட புயல் மழை வெள்ளம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் மரணித்தவர்களை விட கிருமிகளால் நோய்தொற்றுகளால் பாக்டிரியா வைரஸ்களால் மாண்டவர்கள்தான் அதிகம் பேர்அதிலிருந்நு மக்களை காப்பாற்றிய மருத்தவர்களில் லூயி பாஸ்டர் அவர்ரகளும் ஒருவர்!

சாதாரண தோல் பதபடுத்தி தோல் பொருட்களை குடிசை தொழிலாக செய்த குடும்பத்தில் பிறந்த லூயி பாஸ்டர் கடும் உழைப்பையும் விடாமுயற்சியையும் விதைத்து பெரிய வெற்றியை பெற்றார்!இந்த லூயி பாஸ்டர் சிலை குன்னுரில். மத்திய சுகாதார துறை லூயி பாஸ்டர் பெயரில் ஆய்வகம் நடத்தி வருகறது!நாய்கடியால் வரும் ரேபிஸ் க்கு மருந்து இங்கு தயாரிக்கிறார்கள்!இந்த ரேபிஸ் நோய் தடுப்பு மருந்தும் பாஸ்டர் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-நொழில் முனைவர்

#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்