மைனர் சொத்தும் கார்டியன் நிலையும் – 24 உண்மைகள்!!!

92fb7a6c36c18dcdf0d2d6270a2b78aa
1. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மேஜர் வயதை அடைந்தவர். என்று சட்டம் சொல்கிறது. அதற்கு கீழ் உள்ளவர்கள் அனைவரையும் மைனர் என்று சொல்லாம்.

2. சொத்து வாங்குவது, விற்பது, உடன் படிக்கைகள் ஏற்படுத்தி கொள்வது, கோர்டில் வழக்கு போடுவது போன்ற விசயங்களுக்கு கட்டாயம் 18 வயது ஆகி இருக்க வேண்டும்.

3. 18 வயது நிரம்பியவர் மட்டும் தான் தனியாக செயல் பட முடியும். அதற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியனோ ( பாதுகாவலர் ) வேண்டும்.

4. பாதுகாவலர் (கார்டியன்) என்றால் மைனரின் உடலையும் அவரின் சொத்துக்களையும் பாதுகாப்பாளர் ஆவார். இரண்டுக்கும் சேர்த்து ஒரு பாதுகாவலர் இருக்கலாம். அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராக இருக்கலாம்.

5. மைனருக்கு, சொத்து இரண்டு வகைகளில் கிடைக்கும். ஒன்று பூர்வீக சொத்துக்கள், மற்றொன்று மைனரின் பெயரில் வாங்கப்பட்ட தனிப்பட்ட சொத்துக்கள்.

6.மைனரை பாதுகாப்பது என்பது, படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது நோய்களில் இருந்து காப்பது போன்றவை.

7. மைனர் சொத்தை பாதுகாப்பது என்பது சொத்து எப்படி பாராமரிப்பது, எப்படி வாங்குவது, எப்படி விற்பது போன்ற நடைமுறைகள் ஆகும்.
8. கார்டியன்கள் மூன்று வகைப்படும். இயற்கை கார்டியன் , உயில் கார்டியன், கோர்ட் நியமிக்கும் கார்டியன் ஆகும்
.
9. இயற்கை கார்டியன் என்பவர் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த தாய் ஆகிய இருவரையும் குறிக்கும்.

10. உயில் கார்டியன் என்பது இயற்கை கார்டியன் இல்லாத போது அவர்கள் உயில் எழுதி ஒரு பாதுகாவலரை நியமித்து மைனரையும் அவரது சொத்துக்களை பாதுகாத்து மேஜர் வயது அடைந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கும் படி இருப்பது உயில் கார்டியன் ஆகும்.

11. நீதிமன்றம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கார்டியனை நியமித்தால் கோர்ட் நியமிக்கும் கார்டியன் என்பர்.

12. அண்ணன், பெரியப்பா, தாத்தா, பாட்டன், மாமா, சித்தப்பா போன்றோர் மைனரின் உடலுக்கு
மட்டும் கார்டியனாக இருந்தார்கள். ஆனால் சொத்துக்கு கார்டியன் இருக்க முடியாது. இது டி- பேக்டோ (DE-facto) கார்டியன் ஆகும். இந்த கார்டியன் முறை இப்போது செல்லாது. யாரையும் கோர்ட் இப்போ நம்புறாத இல்லை.

13. இயற்கை கார்டியனில் தாயை விட தந்தை தான் முன் உரிமை . தந்தை வெளிநாட்டில் இருக்கும் போதோ, துறவி ஆனாலோ அல்லது உயிருடன் இல்லை என்ற நிலையில் தான் தாய் கார்டியன்.

14. வளர்ப்பு குழந்தைக்கும், வளர்ப்பு தந்தை, இயற்கை கார்டியன் அவருக்கு பிறகு, வளர்ப்பு தாய் இற்கை கார்டியன் ஆகும். சட்ட பூர்வமற்று குழந்தை பிறந்து இருந்தால் அதற்கு தாய் தான் இயற்கைகார்டியன்.

15. மைனரின் தனிப்பட்ட சொத்துக்களை இயற்கை கார்டியன் என்பவர் ஆதாவது அந்த மைனரின் தந்தையே ஆனாலும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, 5 வருஷத்துக்கு மேல் நீண்ட கால லீசுக்கோ விட முடியாது.
16. மைனரின் சொத்தை சட்ட கட்டுப்பாட்டை மீறி விற்றால் அதை மைனர் நினைத்தால் ரத்து செய்யலாம்.

17. மைனரின் சொத்தை மைனருக்காக நல்ல காரணத்துக்காக விற்க வேண்டி இருந்தால், அந்த சொத்து இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி இல்லை என்றால் அப்பீல் போகலாம். அப்பீலிலும் அனுமதி கொடுக்கவில்லை என்றால் விற்க முடியாது.அனுமதி கொடுத்தால் விற்கலாம்.

18. பூர்வீக சொத்தில் அதில் உள்ள மைனரின் பங்கு சொத்தை மைனரின் கார்டியன் விற்கலாம். அடமானம் செய்யலாம். கோர்ட் உத்தரவு பெற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டு குடும்ப உரிமை சொத்தில் கோர்ட் தலையிடாது.

19. நீதிமன்ற அனுமதியை பெறாமல் மைனரின் சொத்தை , தந்தை கார்டியனாக இருந்து விற்று இருந்தால் அந்த கிரையத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன் 21 வயதுக்குள் அந்த கிரயம் செல்லாது என மனு செய்து தீர்ப்பும் வாங்கலாம்.

20. மைனரின் நன்மைக்காக மைனர் சொத்து விற்கபட வில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அந்த கிரைய பத்திரம் செல்லாது.
21. மைனர் தனது மைனர் சொத்தை மீட்க வேண்டும் என்றால் தான் மேஜர் ஆகி 18 வயதாகி 3 வருடத்திற்குள் 21 வயதுக்குள் வழக்கு போட வேண்டும். அதற்கு அடுத்து வழக்கு போட வாய்ப்பு இல்லை.

22. பல மைனர்கள் இருந்து அவர்கள் எல்லாரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் கூட்டாக வழக்கு போட வேண்டும். இதில் மூத்த மைனருக்கு 21 வயது ஆகிவிட்டு இருந்தால் வழக்கு போட முடியாது. இளைய மைனருக்கு 21 வயது முடியவில்லை என்றால் அவர் தனியே தன் பாகத்திற்கு போடாலாம்.

23. ஆனால் சொத்து கூட்டு குடும்ப சொத்தாக இருந்து, மூத்த மைனர் 21 வயது ஆகி, இளைய மைனர் 21 வயது ஆகவில்லை என்றாலும் அனைவருமே வழக்கு போடும் உரிமையை இழந்து விடுவார்கள்.

24. கூட்டு குடும்ப சொத்தில் மூத்தவரின் உரிமை பறிபோனால் கூடவே இளையவரின் உரிமையும் பறிபோய் விடும். ஏன்னென்றால் கூட்டு குடும்ப சொத்து ஒரு கூட்டான உரிமை ஆகும்.

குறிப்பு:
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#minor #asset #gardian #land

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்