தேவை : தமிழகம் முழுவதற்குமான ஒரு மாஸ்டர் பிளான்



அங்கீகாரமும் நீதிமன்ற தடையும்:
கடந்த 2௦16 செப்டம்பர் 9-ம் தேதி அங்கீகாரம் இல்லாத, பஞ்சாயத்து அங்கீகாரம், என்.ஓ.சி மனைகள் பத்திரப்பதிவை தடைசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுகள் நடக்காமல் இருக்கின்றது. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஒரு பக்கம், திருமணம், வீடுகட்டுதல் போன்ற சொந்த செலவுகளுக்கு பணத்தை புறட்ட கையிலிருக்கும் நிலங்களை விற்க அக்ரிமெண்ட் போட்டவர்களும், குடும்பத்திற்குள்ளேயே பாகப்பிரிவினை பத்திரம், உயில், போன்ற பத்திரங்கள் செய்ய முடியாமலும் பொதுமக்கள் அவதி படுகின்றனர்,

இது தற்காலிகமானது என்றாலும் இந்த தடை உத்தரவால் வீடு, வீட்டு மனை உருவாக்கும் நிறுவனங்கள் அரசின் அங்கீகார அமைப்புகள் மற்றும் பத்திரப்பதிவுதுறை, வருவாய் துறை, ஆகியவைகள் தொலைநோக்கு அடிப்படையில் புதிய கொள்கை முடிவினை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்,

தற்பொழுது இருக்கின்ற வீடு, அடுக்ககம், மற்றும் வீட்டு மனைகள் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவு இல்லாததாகவும் முழுமையாக அனைத்து தரப்பு மக்களுக்கானதாகவும் வரையறுக்கப்படவில்லை.
சென்னை மாநகருக்கு CMDA என்ற அங்கீகார அமைப்பும் பிற தமிழக நகரங்களுக்கு DTCP என்ற அங்கீகார அமைப்பும் தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறது, CMDA-ல் சென்னை மாநகர எல்லை மற்றும் எதிர்காலத்தில் சென்னை இவ்வளவு தூரம் வளரும் என்ற தொலைநோக்கு (மாஸ்டர் பிளான்) அடிப்படையில் எல்லையை வரையறுத்துள்ளது.

WhatsApp Image 2019-09-30 at 4.18.15 PM
சென்னை மாஸ்டர் பிளான்
அதில் சென்னை மாநகராட்சி உட்பட பல நகராட்சி மற்றும் ஊராட்சிகள் இருக்கின்றது. அதேபோல் மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், சேலம் மற்றும் பிற நகரங்களுக்கு DTCP என்ற அங்கீகார அமைப்பால் கட்டுபடுத்தப்படுகிறது.

இந்த நகரங்களிலும் நகர எல்லை மற்றும் எதிர்காலத்தில் வளர்ச்சி பெறும் எல்லை என்ற கருத்தில் புறநகர் மற்றும் கிராமங்கள் இதனுடைய மாஸ்டர் பிளானில் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர மீதமுள்ள தமிழகம் முழுவதும் DTCP என்ற அமைப்பும் இருக்கிறது என்ற நிலை இருந்தாலும் சென்னை தவிர்த்து ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் DTCP யே அங்கீகார அமைப்பாகும் ஆனால் அவர்களிடம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கான மாஸ்டர் பிளான் கிடையாது.

தமிழகத்தில் இருக்கின்ற பெருநகரங்கள் மற்றும் சுற்றி இருக்கின்ற பகுதிகளுக்கு மட்டும் தான் மாஸ்டர் பிளான் இருக்கிறது. மாஸ்டர் பிளான் இல்லாத பகுதிகளை NON SCHEME AREA என்று சொல்வோம், மாஸ்டர் பிளானில் நிலங்கள் HOUSING, INDUSTRIAL, EDUCATION, AGRICULTURE என்று வகைபடுத்தப்பட்டிருக்கும் மாஸ்டர் பிளானில் HOUSING என்று வகைபடுத்தப்பட்டிருக்கும் இடமானது வருவாய் ஆவணங்களில் நஞ்சை (அ) புஞ்சை என விவசாய நிலங்களாகவே இருக்கின்றன.

தற்போதைய விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாவது தவறு என்று உணரும் பட்சத்தில் மாஸ்டர் பிளான்களே தவறாகும். இரண்டு அமைப்பின் மாஸ்டர் பிளான்களே விவசாய நிலங்களை அழித்து நகரங்களை உருவாக்குவதற்கு உருவாக்கப்பட்டதுதான்.

ஆனால் எதிர்காலத்தில் நகரங்கள் சீரான கட்டமைப்புடன் வளருவதற்கு இந்த மாஸ்டர் பிளானில் இல்லாத NON SCHEME AREA என்று அழைக்கப்படுகின்ற ரூரல் பகுதிகளுக்கு வீடு மற்றும் வீட்டு மனை உருவாக்க DTCP – ல் அனுமதி பெறவேண்டும் என்பதுதான் தற்போது இருக்கின்ற நிலைமை, இது எப்படி இருக்கின்றது என்றால் கண் தெரியாதவன் வழிகாட்டியாக இருப்பது போல் இருக்கின்றது.

WhatsApp Image 2019-09-30 at 4.20.17 PM
NON SCHEME AREA – வையும் RESIDENSIAL, AGRICUTURE என்று தெளிவாக வரையறுத்து மாஸ்டர் பிளானில் அமைத்திருந்தால் அவர்களால் சரியாக அங்கீகாரம் வழங்க முடியும்,

NON SCHEME AREA- விலேயே விவசாய நிலங்களுக்கு அங்கீகாரம் கேட்டால் அவர்கள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள், விவசாய நிலங்களை பாதுகாப்பது என்பதற்கு ஒரு தெளிவான நெறிமுறைகள் அங்கீகார அமைப்பிலேயே இல்லாத காரணத்தினால்தான் NON SCHEME AREA – க்களில் அங்கீகாரம் பெற்று விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற முடியும்.
எனவே தமிழகம் முழுவதும் ஒரு முழுமையான மாஸ்டர் பிளான் தயாரிப்பது என்பது அவசியமானதாகும் அதற்கு தொலைநோக்குள்ள விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் மற்றும் நகரங்கள் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறந்த தலைவர்களால் உருவாக்கப்பட வேண்டும்.

எப்படி மக்கள் தொகை மற்றும் எந்த பகுதியில் எந்த சமுதாய மக்கள் வசிக்கின்றனர் என்பதெல்லாம் கருத்தில் கொண்டு அடிக்கடி MP, MLA தொகுதிகளின் மாஸ்டர் பிளான்களை உருவாக்குகிறார்களோ அதேபோல் விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதற்குமான ஒரு மாஸ்டர் பிளான்னை உருவாக்கி அந்த மாஸ்டர் பிளானில் பத்திரப்பதிவு துறை மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் ஒருங்கிணைத்தால் மட்டுமே நகர மயமாதலை சீர்படுத்தவும் விவசாயத்தை பாதுகாக்கவும் முடியும். 

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#பஞ்சாயத்து #அங்கீகாரம் #recedential #agriculture #industrial #education #நஞ்சை #புஞ்சை #வருவாய்துறை #பத்திரப்பதிவு #revenue registration #panjayat #chennai #tamilnadu #approved #agreement #master #plan

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்