வருவாய் துறையையும் நில தீர்வை தொகையையும் கொஞ்சம் அதிகப்படுத்தலாமே

b7f419ee7f7fc33e3a9eb0bcda032e09

ஆங்கிலேய காலத்தில் நிலத்தின் மூலமாக வந்த வருவாயே அரசிற்கு மிகப்பெரிய வருவாயக இருந்தது. அதனால் தான் நில நிர்வாகத்தினை வருவாய்த்துறை என்று அழைத்தனர்.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, டாஸ்மார்க், கனிம வளத்துறை, ஏற்றுமதி, இறக்குமதி, பன்னாட்டு வணிகம், என்று நாட்டிற்கு அதிக அளவில் வருவாய் வருகிறது. அதனால் வருவாய் துறையில் வரும் வருமானத்தைப் பற்றிய கவலை பெருமளவில் அரசிற்கு இல்லை. இன்றும் பட்டாவை எடுத்து பார்த்தால் தீர்வை என்ற இடத்தில் 1 ரூபாய் 2 ரூபாய் மற்றும் அதற்கு கீழேயே இருக்கிறது. ஒரு கிராமத்தில் ஒட்டுமொத்த ஒரு வருட தீர்வை தொகை சில இலட்சங்கள் கூட வராது, பெரும்பாலும் அந்த தீர்வை தொகையை மக்கள் கட்டுவதே இல்லை.

என் அனுபவத்தில் நான் பார்த்தவரை நிலம் வைத்திருக்கின்ற மக்கள் பட்டாவில் குறிப்பிடுகின்ற தீர்வை தொகையை எடுத்து சென்று கட்டியதாக தெரியவில்லை. ஆனால் ஆண்டு தோறும் அவர்கள் கட்டி முடித்ததாகவே கணக்கு வழக்குகள் முடிக்கப்படுகிறது.

மேலும் பத்திரப்பதிவு துறையின் வழிகாட்டி மதிப்பின் மூலமாக வெளிப்படும் நிலத்தின் மதிப்பு வருவாய் துறையின் தீர்வை மூலமாக வெளிப்படும் நிலத்தின் மதிப்பும் ஒன்னுக்கொன்று முரண்பாடாகவே இருக்கிறது.

ஒருவர் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 ரூபாய் தீர்வை என்று இருப்பதை ரூபாய்.1000 என்று கட்ட சொன்னாலும் அவர் கட்ட தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் தீர்வை 5 ரூபாயை கூட கட்டாமல் கணக்கு முடித்துவிட்டு ரூபாய்.1000 வரை இலஞ்சம் பெறுவது தான் வருவாய் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு ஏக்கர் 2 ஏக்கர் என 5 ஏக்கருக்கு கீழ் வைத்திருக்கும் குறு விவசாயிகள் 5 ஏக்கருக்கு மேலே வைத்திருக்கின்ற சிறு விவசாயிகள் அனைவருமே தீர்வையை தற்கால மதிப்பிற்கேற்றார்போல் உயர்த்துவதால் பாதிப்படையமாட்டார்கள்.

ஒருவேலை ஆயிரக்கணக்கில் நிலங்கள் வைத்திருக்கின்ற கோவில்கள், மடங்கள். ஆதினங்கள் போன்றவற்றையும் தான் இந்த தீர்வை உயர்வால் கொஞ்சமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் கருத்துகளுக்கு காத்திருக்காமல் தற்போதைய ரூபாய் மதிப்பிற்கேற்றவாறு நிலத்தின் தீர்வையை ஏற்றிக்கொள்வது என்பது நாம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அப்டேட் ஆகி இருக்கின்றோம் என்ற நிர்வாக பெருமையை வருவாய் துறை அடையும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்