இந்திய வங்கிகள் ஜமீன் கலாசாரத்திலிருந்து வெளியே வருதல் வேண்டும்!!

குழந்தைகள் உட்பட குடும்பமே பரிதாபமான, மனம் பதறுகின்ற திருநெல்வேலி கலெக்டர் வளாக தீக்குளிப்புக்கு கந்து வட்டிகாரர்கள் காரணம், அவர்களை தண்டிப்பது என்பது நுனிபுல் மேயும் தீர்வு.

உண்மையான பிரச்சனை அடி தட்டு மக்களின் அவசர சிறுகடன் தேவையை நிறைவு செய்ய வங்கிகளிடம் பிராடக்டகள் இல்லை. வங்கிகள் தங்களை அடிதட்டு மக்களிடம் காெண்டு சேர்க்க என்ட்ரப்ரனோரியல் திறன் இல்லை.

வங்கிகள் ஜமீன் கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்து அடித்தட்டு மக்களுக்கு சேவை அளித்திட வேண்டும்.


(படத்தில் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில்
கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம். )
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்கள் ரொக்க பொருளாதாரத்திலேயே (Cash Economic) தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .

இவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ,தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள், மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறி மற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடை வியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரை முழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான் பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது.

இந்த பரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள் கணக்கில் வராமலும் , வங்கிக்குள் வராமலும், அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்கு வராமலும் , சுழன்று கொண்டே இருக்கிறது. இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் நியாயமாக சம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்தை மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்து மேலும் தங்களுடைய பணத்தை பெருக்கி கொண்டு இருக்கின்றனர்.

மேலும் நியாயமற்ற வகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம், அரசியல் வாதிகளின் ஊழல், கல்வி தந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்கு எதிரான வியாபாரங்கள் மூலமாக வருகின்ற பணங்களும் மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் முதலீடு செய்து பாதுகாக்கப்படுகிறது.

அமைப்பு சாரா மற்றும் அடித்தட்டு தொழிளாலர்கள் நியாயமாக சம்பாதிப்பவர்களின் , கணக்கில் வராத பணத்தையும் முறைகேடாக சம்பாதிப்பவர்களின் பணத்தையும், பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும், பெருக்குகின்ற ஒரு முதலீட்டு வியாபார வாய்ப்பாகவும் இருக்கின்றது.
“அரசு வங்கி துறைகள் அமைப்பு சாரா தொழில்களுக்கு நிதி உதவி செய்து தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தவறிவிட்டதன் விளைவே சிறிய அளவில் இருந்த இந்த கருப்பு சந்தை இன்று மலை முழுங்கி மகாதேவன்களின் கூடாரமாக மாறிவிட்டது.”

அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் திறமையற்ற நிர்வாகமும் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாததும் நாட்டு பற்றும் , அடிதட்டு மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக போய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வமின்மையும், அதற்காக உழைத்திட வேண்டுமென்ற அர்பணிப்பும், வங்கி நிர்வாகத்தில் கீழிருந்து மேல்வரை இல்லாததனால் அரசு வங்கி மற்றும் இதர துறைகளில் அமைப்பு சாரா தொழில்கள் பொருளாதாரத்தில் இன்றுவரை மையப்படுத்தப்படாமல் இருக்கிறது.

இருக்கிறதிலேயே ரொம்ப என் மனசுக்கு வேதனையா இருக்கிறது என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தி இருக்கும் தபால்துறை மூலம் அடிதட்டு மக்களின் பொருளாதாரத பரவலுக்கு எவ்வளவோ விஷயங்களை செய்யாலாம்.

எல்லா இடத்திலும் மங்குனி மேனேஜர்களாக போட்டு அந்த துறையையே கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதே போல அரசு வங்கிதுறை LIC போன்ற நிறுவனங்கள் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாத Accounts பார்க்கும் கிளர்க்குகளையே நிர்வாகிகளாக போட்டு ரிஸ்க்கே எடுக்காமல் பணத்தை வேறுவேறு வங்கிகளுக்குள்ளேயே வட்டிக்கு விடுவது அல்லது மலைமுழுங்கி மகாதேவன்களுக்கு மட்டுமே வட்டிக்கு கொடுத்து திருதிருவென்று முழிப்பது, என உறுதி எடுத்திருக்கின்றனர் போலும்.

வங்கி வாராக்கடனில் வைத்துள்ள விஜய மல்லையாவின் 9ஆயிரம் கோடியை என்னிடம் கொடுத்தால் தமிழகத்தில் 3 தாலுக்காக்களை Business Cluster ஆக மாற்றி 14 ஆயிரம் கோடிகளாக 10 ஆண்டுகளில் திருப்பி
கொடுத்திருப்பேன்.


9 ஆயிரம் கோடி வங்கியில் கடன் வங்கி

லண்டனில் மகிழ்ச்சியுடன் திரு.விஜய மல்லையா.

அதேபோல் இந்த தபால்துறையை கடந்த 50 ஆண்டுகளாக தலைமையேற்று நிர்வகித்து கொண்டிருந்த பொறுப்பாளர்கள் 20 பேரை நேரில் பார்த்தால் இவ்வளவு நெட்வொர்க் வச்சிகிட்டு அடிதட்டு மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார பரவலை செய்யாமல் ஏன் விட்டீங்க என்று சொல்லி கடிச்சே விட்டிரலாம் போலிருக்கு. (சும்மா காமெடிக்கு)
ஒரு சாதாரண சிறிய பைனான்சியர்களே தங்களுடைய களப்பணி மூலம் இந்த அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிதட்டு மக்களுக்கு வட்டி மற்றும் தண்டலுக்கு நிதியுதவி செய்து கோடி கணக்கில் பணத்தை பெருக்கி வைத்திருக்கின்ற போது உங்களால் ஏன் முடியவில்லை! Table – ல உட்கார்ந்து வெறும் பேப்பர் படிக்க தான் லாயக்கி!

தற்பொழுது தனியார் வங்கிதுறை, தனியார் அஞ்சலகம் எல்லாம் வந்த பிறகு அதற்குள்ளே பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவிய நிலையில் தற்பொழுது கருப்பு சந்தையை ஒழிக்கும் நோக்கில் செய்யப்படும் இந்த காரியங்களெல்லாம் அடிதட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலமாக வரும் இலாபங்கள் வெளிநாட்டவர்க்கு போவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு பன்னாட்டு கமிஷன் ஏஜென்ட்டாக நமது பிரதமர் செயல்பட்டு விட்டார் என்ற குற்றசாட்டிற்கு ஆளாகாமல்




இந்திய அரசு நிறுவனங்களை அடிதட்டு மக்களிடையே ஊடுருவ செய்து என்டர்புரொனோரியல் அப்ரோச்சின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை வெற்றி கொள்வதற்கு ஏற்றவாறு அரசு நிர்வாகத்தை உருவாக்குமாறு நமது பிரதமரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நிர்வாகத்தினர் கொள்ளை அடிப்பதற்காக வேலை செய்பவர்களிடம் சம்பளத்தை குறைத்து கொடுப்பதற்காக 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று சோம்பேறி தனத்தை அடிதட்டு மக்களுக்கும் ஊட்டுகின்ற அரசு ஊழியர்களால் தான் தற்பொழுது மக்கள் அனைவருக்கும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1 மணி நேரம் கூட அரசு அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போகாமல் சாணி போல ஒரே இடத்தில் நிற்க வைத்து இருக்கின்றனர்.

தற்பொழுது வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் தடையால் கோடி கணக்கில் மலைபோல பணங்கள் குவிந்துள்ளது. இவற்றை அமைப்பு சாரா தொழில்களுக்கு Customized நிதியுதவி திட்டங்களாக உருவாக்கி அடிதட்டு மக்களுக்கு பயன் அளிக்குமாறு செய்திட வேண்டும்.

டேபிள்ளேயே உட்கார்ந்து வாடிக்கையாளரை வரவைத்து பேசுகின்ற நிர்வாகத்தை விட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களை நீங்கள் நேரில் போய் சந்திக்கும் போது தான் அரசு நிறுவனங்கள் வளரும் இல்லையென்றால், இன்னும் கொஞ்ச நாளில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வெகு விரைவில் அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் அடிதட்டு மக்களின் நெட்வொர்க்கை பிடித்து விடும்.
பின்னர் இவையெல்லாம் நல்ல நிர்வாகம் மற்றும் ஆளுமை திறன் நாட்டு பற்று இல்லாததனால் வந்த நிலை என்று புரியாமல் இது பன்னாட்டு சதி, சுரண்டல் என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

 வங்கியில் வேலை பார்க்கும் மங்குனி மேனேஜர்களே தற்பொழுதாவது அமைப்பு சாரா தொழில்கள், ரூரல் ஹவுசிங், பெண்கள் முன்னேற்றம் போன்ற தொழில்களுக்கு அதிகளவில் நீங்கள் தேடிவந்து நிதியுதவி செய்யுங்கள்.

குறிப்பு:

வாங்கப்படும்.இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஜமீன் #வங்கி #பன்னாட்டு #Customized #தபால்துறை #Economic #வரி #நிர்வாகம் #Business #Cluster #commission #ajent #bank #post #tax #company #international #fund #department

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்