எஸ்.எல்.ஆர்-ஐ வைத்துக்கொண்டு கோவில் நிலங்கள் என்று கம்பு சுற்றும் என்டோவ்மென்டுகளுக்கும், கோவில் விரும்பிகளுக்கும் தெரிய வேண்டிய செய்திகள்.

தமிழகம் முழுவதும் பல ஊர்களில் யு.டி.ஆர் பட்டாவில் தனி நபர் பெயர்களில் யு.டி.ஆர் பட்டா பெற்று வீடு கட்டி காலங்காலமாக அனுபவித்து வருகின்ற இடங்களை எஸ்.எல்.ஆர் ஆவணத்தில் இருக்கின்ற கோவில் பெயர்களை வைத்து இவையெல்லாம் கோவில் இடம் காலி செய்யுங்கள் என்ற அலப்பறைகளை என்டோவ்மென்ட்களும், கோவில் விரும்பிகளும் செய்து வருகிறார்கள்.

கரூர் நாமக்கல் பகுதிகளிலும் திருநெல்வேலி சங்கரன்கோவில் பகுதிகளிலும், காஞ்சிபுரம், சென்னை திருவெற்றியூரிலும் இதுபோன்ற பல சிக்கல்களை பார்த்து கொண்டு வருகிறேன்.

எஸ்.எல்.ஆர் என்பது செட்டில்மெண்டு லேண்ட் ரெக்கார்ட், முதன்முதலில் வருவாய் துறையினர் நிலங்களை அளந்து சர்வே எண் கொடுத்து உரிமையாளர்கள் யார் என்று பட்டியலிட்ட ஆவணம், பெரும்பாலும் இது 1880-களிலிருந்து 1920 வரை ஏதாவது ஒரு ஆண்டில் ஒவ்வொரு பகுதிகளில் அமுல்படுத்தி இருப்பார்கள், மேற்படி ஆவணம் இன்றுவரை வெளிப்படையாக பணம் கட்டினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைத்து வருகிறது.

அதனை அரைகுறையாக நில விஷயங்கள் தெரிந்தவர்கள் எடுத்துகொண்டு தற்பொழுது 1980 முதல் 1985-களில் உருவான யு.டி.ஆர் ஆவணங்களில் இருக்கின்ற தனிநபர் பெயர்கள் எல்லாம் செல்லாது இரத்து செய்ய வேண்டும் என்று சொல்லி எஸ்.எல்.ஆர்-ஐ பார்த்து மனு செய்கின்றனர் என்டோவ்மென்ட்டுகள்.

எஸ்.எல்.ஆர் தான் தாய் யு.டி.ஆர் பிழையானது என்று என்டோவ்மென்டுகள் கோவில் விரும்பிகள் சட்ட போராட்டங்கள் செய்ய, யு.டி.ஆர் படி பட்டா பெற்ற மக்கள் அதனை எதிர்த்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும், சந்தித்து, சந்தித்து, மனு கொடுத்து பணத்தையும், நேரத்தையும் வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

1920-களில் உருவான எஸ்.எல்.ஆர்க்கும் 1980-களில் உருவான யு.டி.ஆர்க்கும் இடையில் 60 ஆண்டுகளில் வருவாய் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன, அதனுடைய குறிப்புகள் எல்லாம், எஸ்.எல்.ஆர்-ஐ போல வெளிப்படையாக கிடைப்பதில்லை அந்த தைரியத்தில் என்டோவ்மென்டுகள் சாமானிய மக்களை பயமுறுத்தி வருகிறார்கள்.

மேற்படி 60 ஆண்டுகளின் கோவில் மானியங்கள் ஒழிப்பு, கோவில் சார்ந்த பணியாளர்களின் மானியங்கள் மற்றும் அதனுடைய நில உச்சவரம்பு, பொதுவான நில உச்சவரம்பு, ஜமீன் ஒழிப்பு, இனாம் நிலங்களை பற்றிய பி-ரெஜிஸ்டர் வருவாய் கணக்கிலிருந்து ஒழிப்பு, இனாம் கமிஷன் ஆவணங்கள் நடைமுறையிலிருந்து ஒழிப்பு.

சாதாரண நிலமில்லாத மக்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் நிலங்கள், நில உச்சவரம்பு மூலமாக கையகப்படுத்தப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள், இனாம் தாரர் ஒழிப்பு மூலமாக கொடுக்கப்பட்ட நிலங்கள், ஜமீன்தாரர் ஒழிப்பு மூலமாக கொடுக்கப்பட்ட நிலங்கள், உழுதவனுக்கே நிலம் சொந்தம் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தாசில்தார் ஒப்படை நிலங்கள்.

போன்ற பல்வேறு நடைமுறைகளின் மூலமாக கோவில் இனாம்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு சாதாரண மக்களுக்கு வந்து சேர்ந்த நிலங்கள், தற்போது மக்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை, என்டோவ்மென்டுகளுக்கும் தெரிய வாய்ப்பில்லை,.

1920-லிருந்து 1980 வரை நடந்த நில பரிமாற்றங்கள் வெளிப்படையாக இல்லாததனால் என்டோவ்மென்டுகள், கம்பு சுற்றி எளிய மக்களின் வயிற்றுக்களில் புளியை கரைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதுபோன்று சிக்கல்களில் மாட்டி தவிக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்க தாயாராக இருக்கின்றேன்.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#யு.டி.ஆர் #பட்டா #எஸ்.எல்.ஆர் #செட்டில்மெண்டு #லேண்ட் #ரெக்கார்ட் #slr #udr #ஜமீன்தாரர் #settlement #survey #land #record #register

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்