ஏற்காட்டில் சத்தமில்லாத சமூக மாற்றம்



அவருடைய நெடிய உயரமான உருவம் என்னுடைய கண்களில் என் பதினோரு வயதில் பதிந்தது..2500 பள்ளி மாணவர்களை கொண்டிருக்கும் சென்னை -சாந்தோம் மேல்நிலைபள்ளியை நிர்வகிக்கும் பிரின்சிபால் ஆக , மிகப்பெரிய விளையாட்டு indoor Statdium த்தை கட்டி முடித்த செயல்வீரராக,இரவெல்லாம் தூங்காமல் பள்ளிகூடத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடந்து ஒவ்வொன்றையும் நுணுக்கமாக பார்வையிட்டு சீர் செய்யும் களபணியாளராக,சிறந்த கல்வி தலைவராக அவரை பாரத்து பாரத்து அவருடைய அரப்பணிப்பு,உழைப்பு,பொதுநோக்கம் ஆளுமை!! எல்லாம் இன்றும் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

தற்பொழுது நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் அவருடைய பாதிப்பு கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கு வாழ்த்துரை வாங்கவும் அவரிடம் ஆசீ வாங்கவும் இன்று ஏற்காட்டில் அவரை சந்நித்தேன்
மனிதர் மிகபெரிய சாதனையை சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறார.அயோத்தியாபட்டினம்-குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் பஸ்கள் செல்லாத மலை காடுகளின் இடையே சுத்துபட்டு 15 பழங்குடியினர் கிராமங்களுக்கு மான்ட்போர்ட் சமுதாய பள்ளியை உருவாக்கி தரமான கல்வியை 100% இலவசமாக தந்து கொண்டு இருக்கிறார்.தற்போது 850 பழங்குடி மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்,அதில்
250 மாணவ மாணவிகள் இலவசமாக தங்கி (boarding) படிக்கிறார்கள்.மாணவ மாணவிகளுக்கு தங்கும் வசதி தரமாகவும் பாதுகாப்பாகவும் உணவு ஆரோக்கியமானதாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது.மிகப்பெரிய அறிவியல் லேப், 100 கணிணி வசதி உள்ள நல்ல கம்பயூட்டர் லேப், நல்ல நூலகம் விசாலமான வகுப்பறைகள் என்று மிக அற்புதமான கல்வியை அங்கிருக்கும் பழங்குடி மக்கள் இலவசமாக பயன் பெறுகின்றனர்(என்மகனுக்கு ஆண்டுக்கு 70,000 கட்டி இடைஇடையே ஏதாவது சில்லறை சில்லறையா பணம் வாங்கும் CBSE பள்ளியில் கூட இவ்வனவு வசதிகள் இல்லை)கடந்த பத்தாண்டுகளில் 400 க்கும் மேற்பட்ட பழங்குடி மககளை கிராஜுவேட் ஆகி இருக்கிறார்கள்.

காட்டு வேலை மட்டும் செய்து கொண்டு இருக்கின்ற பல குடும்பங்களில் இன்று பலர் அரசு மற்றும் தனியார நிறுவனங்கள்,வங்கிகளில் பணிபரிய ஆரம்பித்து இருக்கின்றனர்.இந்த பள்ளியால் அந்த பகுதியில் உள்ள அடிதட்டு சமூகம
அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது.100% தேர்ச்சி,திறமை கூட்டும் ஆங்கில வகுப்புகள் என்று பணக்கார்கள் படிக்கும் பள்ளிக்கு இணையாக பள்ளி நடைபெறுகிறது.

விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மாநில ஏன் ஒலிம்பிக் வரை வீட்டில் இருக்கம் கூழோ கஞ்சோ சாப்பிட்டு போட்டிகளில் பங்கெடுக்கின்றனர்.சத்தமில்லாமல் மனதளவில் பலவீனமாகவும் சமூக நீதி கிடைக்க பெறாத ஒரு பகுதி மக்களை முன்னேற்றி விடும் ஏணியாக இருக்கிறார்.

மாதந்தோறும் பத்து இலட்ச ரூபாய்க்கு மேல் ஆசிரியரகள் ஊழியர்களுக்கு சம்பளம் போட வேண்டி இருக்கிறது. போர்டிங் மற்றும
ரெகுலர் மாணவ மாணவிகளுக்கு உணவளிக்க வேண்டி இருக்கிறது.மத்திய மாநில அரசுகளிடம் இருந்து தம்பிடி பைசா உதஙி வரவில்லை,பள்ளி மாணவர்களிடம் எதற்காகவும் சின்ன கட்டணம் கூட வசூலிக்கவில்லை.

சென்ற வருடம் தமிழக அரசு இவரை பாராட்டி அம்பேதகர் விருது அளித்துள்ளது.நமது சகோதர் கே.ஜே.ஜார்ஜ் அவர்களின் பலவேறு தரப்பட்ட நெட்வர்ககும் அவரது அயராது உழைப்பை அர்ப்பணிப்பை பார்க்கும நல்ல உள்ளங்களின் உதவியாலும் பள்ளி கூடம் இயங்குகிறது,இந்த கட்டுரையை படிக்கும் நண்பர்கள் கட்டாயம் பள்ளியின் மேம்

பாட்டுக்கு உதவிடுங்கள்!! நீடூழி வாழ்க சகோ. கே.ஜே.ஜார்ஜ் அவர்கள்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்-பிராப்தம் ரியல்டர்ஸ்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#goverenment #system ##jeorge#santhome #school #founder #foundation#சமூக #மாற்றம் #social #society #change #welfare #santhome #passedout #awareness #top #school #public

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்