ரியல் எஸ்டேட்டில் சாதாரண மனிதர்களின் சில நம்பிக்கைகளும் உண்மை நிலவரங்களும்!

5b47eb64a316b6f5eb7f6513c15fa2da

ரியல் எஸ்டேட்டில், சொத்து வாங்குவது, சொத்து விற்பதில் சாதாரண மனிதர்கள் பவிதமான நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். அவர்கள் நம்புவதை போல் களத்தில் உண்மை நிலவரங்கள் இருப்பதில்லை. மக்கள் புரிந்து கொண்டது ஒன்று, நடைமுறையில் இருப்பது மற்றொன்று.

எனக்கு தெரிந்த சிலவற்றை கீழ்க்கண்ட பட்டியலில் காண்போம்
1. மக்கள் நம்பிக்கை : இடம் பேங்க் லோனில் இருந்தால் இடத்தோட லீகல் சரியாக இருக்கும்

யதார்த்த நிலவரம் : வங்கியில் லோன் இருந்தாலும் லீகல் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

2. மக்கள் நம்பிக்கை : எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால் யாரும் இடத்தை TRESPASS / ENCROACHMENT
செய்யமாட்டார்கள்
யதார்த்த நிலவரம் : TRESS PASS / ENCROACHMENT என்பது முழுவதும் ஆவணங்கள் சம்மந்தப்பட்டது அல்ல!
அவை இடத்தின் உரிமையாளருடைய மனநிலை, ஆளுமை, புத்தி கூர்மை &
எதிர்கொள்ளுதல் சம்மந்தப்பட்டது.

3. மக்கள் நம்பிக்கை : பட்டா ஆன்லைனில் அப்ளை செய்தால் பட்டா உடனடியாக வந்து விடும்.
யதார்த்த நிலவரம் : பட்டா மனு அப்ளை செய்வது மட்டும் தான் ஆன்லைன். மீதி V.A.O. சர்வேயர், R. I.,
DEPUTY, THASILDHAR ஆகியோரை நேரிடையாக சென்று ஆவணங்களை சமர்பித்து பட்டா வாங்க வேண்டும்.

4. மக்கள் நம்பிக்கை : E.C ( ENCUMBRANCE CERTIFICATE ) யில் வருகிற என்ட்ரி எல்லாம் மிக சரியாக இருக்கும்.
யதார்த்த நிலவரம் : E.C யில் வருகிற என்ட்ரிகள் (WRONG ENTRY) எல்லாம் தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள்
இருக்கிறது.

5. மக்கள் நம்பிக்கை : E.C. யில் இருக்கும் என்ட்ரிகளை வைத்து நம்பி சொத்துக்களை வாங்கலாம் .
யதார்த்த நிலவரம் : சார்பதிவகம் கொடுக்கின்ற அனைத்து E.C யிலும் அவர்கள் “ பொறுப்பு “துறப்பு “
குறிப்புடன் தான் கொடுக்கின்றனர். அதாவது இந்த E.C யை நம்பி இடம் வாங்கி
ஏதாவது சிக்கல் என்றால் அரசு பொறுப்பேற்காது என்று “பொறுப்பு துறப்பு “
இருக்கிறது.

6. மக்கள் நம்பிக்கை : D.T.C.P அப்ரூவல் இருந்தால் தான் வீட்டுக்கடன் கிடைக்கும்.
யதார்த்த நிலவரம் : D.T.C.P அப்ரூவல் இல்லமாலும் கூட்டுறவு சொசைட்டி , LIC ஹவுஸிங், தனியார்
ஹவுஸிங் நிதியகங்களில் கடன் கிடைக்கிறது.அரசு மானியமும் கிடைக்கிறது.

7. மக்கள் நம்பிக்கை : D.T.C.P அப்ரூவல் இருந்தால் லீகல் 1௦௦% சரியாக இருக்கும்.
யதார்த்த நிலவரம் : D.T.C.P அப்ரூவல் வாங்கினாலும் மைனர் சொத்து, வாரிசு சொத்து போன்ற
சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன.

8. மக்கள் நம்பிக்கை : D.T.C.P அப்ரூவல் இருந்தால் அரசு நிலம் ஆர்ஜிதம் செய்யாது.

யதார்த்த நிலவரம் : அரசுக்கு தேவைப்பட்டால் D.T.C.P நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்யும்.

9. மக்கள் நம்பிக்கை : D.T.C.P அப்ரூவல் இருந்தால் தான் H.P. E.B. LINE இடத்தின் மேல்
போடமாட்டார்கள்
யதார்த்த நிலவரம் : இல்லை D.T.C.P வாங்கிய பிறகும் இடத்தின் மேல் H.P. E.B. LINE போட்டு
இருக்கிறார்கள்.

10. மக்கள் நம்பிக்கை : வழிக்காட்டி மதிப்பை விட இடத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்.
யதார்த்த நிலவரம் : வழிக்காட்டி மதிப்பை விட இடத்தின் விலை சில இடங்களில் குறைவாகவே
இருக்கிறது.

11. மக்கள் நம்பிக்கை : வழிக்காட்டி மதிப்பை அரசு தான் நிர்ணயிக்கிறது.
யதார்த்த நிலவரம் : ஒட்டுமொத்த வரைவின் போது அரசு, நிர்ணயிக்கும், அதற்கு பிறகு வருகிற மறு
நிர்ணயம் எல்லாம் மக்கள் தான் நிர்ணயிகிறார்கள் வங்கி கடனுக்காகவும், கூடுதல்
விலை TAX BENEFITS காகவும், அதிக வழிக்காட்டி மதிப்பை மக்களே நிர்ணயிகிறார்கள்.

12. மக்கள் நம்பிக்கை : பட்டா யார் பெயரில் இருக்கிறதோ, அவர்தான் உரிமையாளர் என்று உறுதி
செய்யப்படும்.
யதார்த்த நிலவரம் : பட்டாவில் தன் பெயர் இல்லாமல் இடத்தை அனுபவிப்பார்கள் அண்ணன் பெயரில்
பட்டா இருக்கும், தம்பி அனுபவத்தில் இருப்பார். எது போன்று பல வகை உண்டு.

13. மக்கள் நம்பிக்கை : இடம் வாங்கும் போது பட்டாவில் உள்ள பரப்பின் அளவு தான் நமக்கு கிடைக்கும் என
நம்புவது.
யதார்த்த நிலவரம் : களத்தில் இடத்தை அளக்கும் போது பரப்பு கூடுதலோ / குறைவாக இருக்கும். சர்வே
பிழை என்பது ஏக்கருக்கு கூடுதலோ / குறையோ 5 சென்ட் ஆகும்.

14. மக்கள் நம்பிக்கை : வாருவாய் துறை ஆவணங்களில் மெட்ரிக் அளவு முறையில் இருக்கும், உலகம்
முழுவதற்கும் புரிதல் வேண்டி, ஏர்ஸ், ஹெக்டேர் கணக்கீட்டு முறையில் நிலத்தின்
மதிப்பை குறிப்பிடுவர்.
யதார்த்த நிலவரம் : மக்கள் இன்னும் பெரும்பாலும் பிரிட்டிஸ் அளவுமுறையான சென்ட், ஏக்கர், என்ற
கணக்கீட்டு முறையும், குறுணி, குழி, மரக்கால் , மா, வேலி என்ற நாட்டு வழக்கு
கணக்கீட்டு முறையும் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர்.

15. மக்கள் நம்பிக்கை : ஒருவர் தான் சம்பாதித்த சொத்தை தனக்கு பிறகு யாருக்கு, எவ்வளவு சொத்துக்கள்
என்று எழுதி வைப்பது தான் – உயில்
யதார்த்த நிலவரம் : பெரும்பாலும் கொங்கு பகுதிகளில் சொத்து உள்ளவர்கள் தன் வாரிசுகளுக்கு
சொத்துக்களை குடும்ப ஏற்பாடு, (அ) செட்டில் மெண்ட் செய்து கொடுப்பதற்கு ஆகும்
முத்திரைத்தாள் கட்டணத்தை மிச்சப்படுத்த, உயிலாக எழுதி வைக்கிறார்கள்.

16. மக்கள் நம்பிக்கை : பொது அதிகார ஆவணம் என்பது, ஒருவருடைய சொத்தை அவரால் நேரிடையாக
பராமரிக்க இயலாத நிலையில் முதுமை, நோய், அல்லது வெளியூர் / வெளிநாட்டில்
வசிப்பது போன்ற காரணங்களுக்காக வேறு ஒருவருக்கு அதிகாரம் கொடுப்பார்கள்.

அவர்கள் அதிகார முகவர் என்ற அடிப்படையில் மேற்படி சொத்தை பராமரிப்பது,
வாடகையிடுவது. விற்பது என் பல வேலைகளை செய்து அதனுடைய கணக்கு
விவரங்கங்களை அதிகாரம் கொடுக்கும் சொத்துக்கு உரிமையாரிடம் ஒப்படைத்தல்
வேண்டும்.
யதார்த்த நிலவரம் : களத்தில் பெரும்பாலான பொது அதிகார பத்திரங்கள் கிரைய பத்திரத்திற்கு பதிலாக நடக்கிறது. கிரைய பத்திரத்திற்கான முத்திரை தாள் செலவை மிச்சப்படுத்தவே பெரும்பாலும் பவர் வாங்கப்படுகிறது. பவர் கொடுக்க முகவர் பவர் ஏஜெண்டுக்கு இடையே கிரைய தொகை பண பரிமாற்றம் நடைபெறுகிறது. பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள், சொத்தை கை மாற்றி விடுவதற்காக பொது அதிகாரம்
வாங்குகின்றனர்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )


இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#செட்டில்மெண்ட்  #சர்வே #ரியல் #எஸ்டேட் #பட்டா #சொத்து #நிலம்  #கூட்டுறவு #சொசைட்டி #settlement #survey #real #estate #deed #asset #land #housing #socity  #பொதுஅதிகாரபத்திரம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்