பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள் 11 அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்யபடவில்லை என்ற காரணத்தை காட்டி மேற்படி ஆவணங்களை நிராகரிக்க முடியாது.

e59094f4360391c8a17e4e01534eca08


1.நீதிமன்ற எலத்தில் ஒரு அசையா பொருளை விற்க கொடுக்கும் விற்பனை சான்றிதழை (sales certificate) பதிவு செய்ய வேண்டும்.

2.அடமான கடன் சேர்ந்துயிட்டது அல்லது பற்று ஆகிவிட்டது என ஒப்புகொண்டு அந்த பதிலான அடமான பத்திரத்திலேயே குறித்து எழுதினால் அதனை பதிவு செய்ய தேவையில்லை.

3.அரசாங்கம் வழங்கும் அசையாபொருள் நன்கொண்ட பட்ட வழங்கிய உத்திரவுகளை பதிவு செய்ய தேவையில்லை.

4.கடன் உறுதி சீட்டுகள் (Debenture) கூட்டுறவு கழகங்களில் வழங்கப்பட்டு இருந்தால் பதிவு செய்ய தேவையில்லை.

5.நீதிமன்றத்தில் சமரசம் பேசி சமாதான பத்திரம் எழுதினால் பதிவு செய்ய தேவையில்லை.

6.ஒரு வருட காலத்திற்குள் இருக்கும் குத்தகை/வாடகைகளை பதிவு செய்ய தேவையில்லை.

7.சொத்து விற்பனை உடன்படிக்கைகள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.சொத்து எதுவும் கைமாறவில்லை என்பதால் அதனால் சச்சரவு வரும்போது நீதிமன்றம் செய்ய வேண்டுமானால் பதிவு செய்து இருக்க வேண்டும்.

8.உயில் மூலம் தத்து எடுத்துகொள்ள அதிகம் வழங்கபட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

9.கூட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் நமக்குள்ளையே விவசாய நிலங்களை கூறுசீட்டு மூலம் பிரித்து கொண்டால் கூறுசீட்டை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

10.அசையும்/ அசையா பொருள் பற்றிய உயிலை பதிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

11.விவசாயத்திற்கான குத்தகையை 1 வருடத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் பதிய தேவையில்லை.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்