அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சொத்து பிரச்சனைகளில் ஏன்? நீதிமன்றம் செல்ல வேண்டாம் 15 காரணங்கள்

eee4fa79b12387b51e5c1487ccbb3765

1. நீதிமன்றங்களில் CIVIL வழக்குகள் தலைமுறை தாண்டியும் காலம்தாழ்த்தப்படுகிறது.

2. முத்திரை தாள் செலவுகள், தேவைப்படின் காவல் துறை செலவுகள், முட்டு வழிச்செலவுகள் அதிகமாவதால் தங்களுடைய சேமிப்பு பணத்தை இழக்கின்றனர்.

3. சேமிப்பு பணத்தை இழப்பதாலும், உரிய நேரத்தில் கிடைக்காத நீதியினாலும் பெரும் மன உளைச்சலும், நிம்மதியின்மையும், பாதுகாப்பற்ற உணர்வுடன் தவிக்கின்றனர்.

4. கடன் வாங்கி அதிக தொகை செலவு செய்து நீதியை பெற்றாலும் அப்பீலின் மூலமாக நீதி நடைமுறைபடுத்தாமல் இருக்கின்றது.

5. சொத்து வழக்குகளில் SETTING CRIMINAL வழக்குகள் போடப்பட்டு அதிலிருந்து வெளிவருவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

6. நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமலாலும், வழக்கறிஞர்கள் தொடர் வேலை நிறுத்த போரட்டங்களிலாலும் ஏற்கனவே மலை போல தேங்கி கிடக்கும் வழக்குகள் அநியாயத்திற்கு வழக்குகள் இழுக்கப்படுகின்றன.
7. தாமதிக்கப்பட நீதி உண்மையில் மறுக்கப்பட்ட நீதி ஆகும்.

8. வழக்குகள் அதிகபட்ச தாமதத்திற்கு பிறகு வழக்கறிஞர்களாலே சமதானப்படுதப்பட்டு அவை முடித்துவைக்கப்படுகின்றது. அதற்கு இவ்வளவு செலவு செய்து சமாதனம் செய்வதற்கு பதிலாக வழக்கு போடுவதற்கு முன்னே சமாதானத்தில் ஈடுபட்டிருக்கலாம்.

9. நில பிரச்சனைகளில் தவறு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க நீதி மன்றத்தில் வழக்காக்கிவிட்டால் அவர்கள் கால காலத்திற்கும் காலம் தாழ்த்தி இருக்கலாம் என்ற அறிய வாய்ப்பு தவறு செய்தவர்களுக்கு கிடைக்கிறது.

10. அதேபோல் வழக்கு என்று வந்துவிட்டால் வருவாய்த்துறை ஆவணங்களில் எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாமல் தடுத்து நிறுத்தும் வாய்ப்பை தவறு செய்தவர்களை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

11. நான் நீதிமன்றமே செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை, அடித்தட்டு, நடுத்தர மக்கள் நீதிமன்றம், வழக்கறிஞர்கள், இடைத்தரகர்களுக்கு செலவு செய்துவிட்டு நீதியும் கிடைக்காமல் இருப்பதைதான் தவிர்க்க சொல்கிறேன்.

12. அதுவே வங்கிகளில் கோடிகணக்கில் கடன் வாங்கிவிட்டு அதனுடைய கடனை கட்டாமல் பிரச்சனைகளை உருவாக்கி அதனை ARBITRATION-ல் போட்டு HALL வாடகைக்கு கொடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்து வழக்குகளை தாரளமாக நடத்தலாம். அதனால் கடன் கட்டாமல் இருப்பதற்கும் வட்டி குறைக்க சொல்லியும் தாமதபடுத்தவும் நீதிமன்றத்தை பயன்படுத்தலாம்.

13)பல கோடி இலாபம் வரும் போது சில இலட்சம் நீதிமன்றங்களுக்கு செலவு செய்யலாம்.சேமிப்பு பணத்தை நீதிமன்ற நடவடிக்கைக்காக முழுவதுமாக இழந்து அல்லல் படும் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களுக்கு பண நஷ்டமே!!

14)குறைந்த செலவில் அல்லது இலவசமாக நீதி வழங்கப்படும் என்று இலவச சட்ட உதவி மையங்கள் வாடிகையளர்கள்களை பிடிக்ககூடிய MARKETING யுத்தியாக மட்டுமே விளங்குகிறது என்பது என் புரிதல்.அங்கேயும் செலவுகள்தான் ஆகிறது.

15)நீதிமன்றத்தை அவமதிக்கிறேன் என்று யாரும் கம்பு சுத்தாதீரகள்.நிலம் சம்மந்தபட்ட வழக்குகளுக்கு மட்டும்தான் நான் சொல்லுகிறேன்அதுவும் பணத்திற்காக துன்பபடும் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களை தான் முடிந்த அளவு தவிர்க்க சொல்லுகிறேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#நீதிமன்றம் #CIVIL #வழக்குகள் #முத்திரைதாள் #கடன்  #சேமிப்பு #சொத்து #நீதி #நீதிபதி #வழக்கறிஞர் #வருவாய்த்துறை #நிலம் #சொத்து  #land #asset #stamp #court #judge #credit #lawyer #revenue #middle #class #people

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்