ஆன்லைன் மயமாகும் பத்திர பதிவுதுறை



பதிவுத்துறை காலந்தோறும் விஞ்ஞான வளர்ச்சியை முதலில் பயன்படுத்திக் நேர்மறையான மாற்றங்களை நடைமுறை படுத்தி கொண்டே உள்ளது. 1980 க்கு முன்பு அனைத்து பதிவு ஆவணங்களும் மேனுவலாக (கையால் எழுதும் முறைகளாக ) தான் இருந்தது.

கணினியின் வரவுக்கு பிறகு பதிவுத்துறை அன்றுமுதல் பதிவு நடவடிக்கைகளை கணினியில் பதிவு செய்ய ஆரம்பித்தன.கடந்த 30 ஆண்டுகளாக பதிவு துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாகி தான் மக்களுக்கு கிடைத்தது . உலகமே தற்பொழுது ஆன்லைன் மயமாகி வருகிறது.

அதற்கேற்றவாறு பதிவு துறையும் ஆன்லைன் மயமாகி வருகிறது. முதலில் வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை ஆன்லைன் செய்தது , இதற்குமுன் இடத்தின் / மனையின் வழிகாட்டி மதிப்பை தெரிந்துக்கொள்ள விரும்பினால் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஒரு துண்டு சீட்டில் கிராமம் , சர்வே எண் நகரமாக இருந்தால் தெருப்பெயர் எழுதி கொடுத்தால் , சார்பதிவாளர் டேபிளில் கைடுலைன் லெட்ஜர் ஒன்று இருக்கும் , அதை பார்த்து நமக்கு அதில் தற்போதைய கைடு லைன் வால்யுவை எழுதி கொடுப்பார்.

ஆனால் தற்போது www.tnreginet.net என்ற இணையதளத்தில் நாமே தேடுதல் பகுதிக்கு சென்று மண்டலம், சார்பதிவகம், கிராமம் , சர்வே எண் / தெருப்பெயர் அடித்தால் , சொத்தின் நிலவகைபாடு / குடியிருப்பு நிலமா/ விவசாய நிலமா? வணிக நிலமா? புறம்போக்கு நிலம் போன்ற வகைபாட்டுடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆன்லைன் வில்லங்க சான்றிதழ்: இந்தியாவில் ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் நடைமுறை ஒரு சில மாநிலங்களில் தான் உள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று, இதற்கு முன் EC க்கள் சார்பதிவகத்தில் நேரடியாக மனு செய்ய வேண்டும். ஒரு வேலை நாளோ அல்லது இரண்டு வேலை நாளோ ஆகும். வில்லங்க சான்று பெறுவதற்கு, ஆனால் தற்போது 1987 ஜனவரி முதல் தமிழ்நாட்டில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.

சில சார்பதிவகங்களில் 1976 இல் இருந்தே ஆன்லைன் EC பார்க்க முடியும் . அதாவது பழைய மேனுவல் ஆவணங்களை கணினி மயமாக்கி ஆன்லைன் மயமாக்கி கொண்டு இருகின்றனர் என்பதை இதனால் புரிந்துகொள்ள முடியும். ஒட்டுமொத்த மேனுவல் கால பதிவுகள் , வெள்ளைகார கால பதிவுகள், அனைத்தையும் கணினி மயமாக்கி ஆன்லைன் மயமாக்குகின்ற வேலைகள் வேகமாக பதிவுத்துறையில் நடந்து வருகிறது.

மேற்படி பழைய மேனுவல் ஆவணங்கள் ஆன்லைன் ஆகும் போது மனித தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. என்வே உங்கள் சொத்துக்கள் மேனுவல் இருந்து ஆன்லைன் ஆகிவிட்டது என்பதை தெரிந்தால், முன்க்கூட்டியே ஆன்லைன் EC போட்டு தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. பிழைகள் ஏதேனும் இருந்தால் ஆதாரத்துடன் மனு செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.

(வருவாய்துறையில் பட்டாக்களை ஆன்லைன் ஆக்கும் நடைமுறையில் பல மனித தவறுகள் நடந்துள்ளது) ஆன்லைன் பணம் செலுத்தும் முறை : பாரத ஸ்டேட் பேங்க் , கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா , யூனியன் வங்கி, போன்ற சில வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் , ஆன்லைன் மூலமாக பதிவுதுறைக்கு இணையதளத்தில் பணம் செலுத்தும் முறையை அறிமுகபடுத்தி இருக்கிறது.
பத்திரபதிவு முன் பதிவு & பதிவு : ஆன்லைன் கைடுலைன், ஆன்லைன் EC , ஆன்லைன் பேமென்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனை புகுத்தி வருகிற பதிவுத்துறை தற்பொழுது ஒருவர் ஒரு மாதம் முன்பே குறிப்பிட்ட நேரத்தில் , பத்திரபதிவு செய்ய விரும்பினால் தமிழ்நாட்டில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.

பதிவு செய்யப்படும் சொத்தில் சொத்துக்கு உரிமையாளர் உள்ளிட்ட விவரங்கள் சார்பதிவாளர் தான் ஆன்லைனில் ஏற்ற வேண்டும். ஆனால் பத்திர எழுத்தர்கள், வேறு நபர்கள் செய்வதாக பதிவு துறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது . வழக்கமான முறையில் பத்திரபதிவு செய்யும் போது , அலுவலக நடைமுறையில் ஏற்படும் காலதாமதம் , பத்திரபதிவு ஆவணங்களை பெறுவதில் காலதாமதம் என பல மணி நேர காத்திருப்புகள் குறைந்து இருக்கிறது. போலி ஆவண பதிவுகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் பதிவின் போது அசல் பட்டாவை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும், தாய் பத்திரம் அடையாள அட்டைகளையும், பதிவேற்றம் செய்தல் வேண்டும். பதிவுக்கு எப்பொழுது வர வேண்டும் என்று குறுந்தகவல்கள் வருகிறது.

பத்து நிமிடங்களில் பதிவு முடிந்து பத்திரங்களை பெற்று செல்ல கூடிய நிலையை ஆன்லைன் பதிவு சாத்தியமாகி உள்ளது. இணையதள வசதி இல்லாமை, டெக்னிக்கல் பிரச்சனைகள் போன்ற அசௌகரியங்கள் ஆன்லைனில் தற்போது இருந்தாலும் காலபோக்கில் அவை நிச்சயம் சரியாகிவிடும் . கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் மாறி கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்