அரசு நிலம் எடுப்பில் நஷ்ட ஈடு வாங்கும் போது உங்கள் நிலத்துக்கு கட்டாயம் பட்டா இருப்பது நன்று!!

land-patta-1


 2008 ம் ஆண்டு துடிப்பாக சுற்றி கொண்டு இருக்கிற ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் எனது பள்ளிகூட ஆசிரியரின் உறவினர் ஒரு பத்திரத்தை கொண்டு வந்து இந்த இடம் இப்போ எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.அது ஶ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டை அருகில் உள்ள ஒரு மனை பிரிவின் வீட்டுமனை சொத்து.

மறுநாள் காலையிலேயே என்னுடைய Honda Activa வண்டியில் மைலாப்பூரில் இருந்து இருங்காட்டு கோட்டை கிளம்பி மனை பிரிவை தேடினேன்.சுத்தி சுத்தி பார்த்துவிட்டு கடைசியில் மனைபிரிவின் மேல் தான் சிப்காட் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. சரி அந்த இடத்திற்கு நில எடுப்புக்காக அரசு கொடுக்கும் நஷ்ட ஈட்டை யாவது பெற்று கொடுக்கலாம் என்று வாடிக்கையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு சிப்காட் நில எடுப்பு தாசில்தாரை பல முறை சந்தித்து அந்த பதிலை பெற்றேன்.

மேற்படி இடத்துக்கான நஷ்ட ஈட்டை வேறு ஒருவர் பெயரில் பட்டா இருந்ததால் அவருக்கே நஷ்ட ஈடு கிடைத்துவிட்டது.அவரும் அதனை பெற்றுகொண்டு நஷ்ட ஈடு போதாது என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்று தெரிய வந்தது.அந்த வழக்கில் எனது வாடிக்கையாளரை பார்ட்டியாக சேர்க்க பூந்தமல்லி நீதிமன்றத்நிற்கு அலையா அலைந்தேன்.நில எடுப்பு தாசில்தார் கொஞ்சம் கூட ஒத்தழைக்கவில்லை.அவர்களுக்கு ஒரு பிளாட் நஷ்ட ஈடு எல்லாம பெரிதாக தெரியவில்லை.

இதுவரை அவரகளுக்கு நிலத்திற்கான நஷ்ட ஈடு கிடைக்கவில்லை.அவர்களும் நானும் சலித்து போய் விட்டு விட்டோம்.ஒன்று மட்டும் அழியாமல் மனதில நின்று விட்டது.அதாவது கிரய பத்திரம் மட்டும் முக்கியமல்லை பட்டாவும் முக்கியமென
அந்த நேரத்தில் நான் எழுதிய தகவல்பெறும் உரிமை சட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்களும் நஷ்ட ஈடு பெற வழிவகை இல்லை எனவும் எனக்கு அனுப்பிய கடிதங்களை இதில் தங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்