சொத்துக்கள் மதிப்பிடுதல் பற்றி தெரிய வேண்டிய அடிப்படை செய்திகள் !


1. சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாக பிரிவினை செய்யும் போதும், சொத்து சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும்போதும் சொத்துக்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தல் போதும் , சொத்துக்களை காப்பீடு செய்யும் போதும், அரசு நில எடுப்பு நஷ்ட ஈடு கொடுக்கும் போதும், வருமான வரி , சொத்துவரி, கேப்பிட்டல் செயின் டாக்ஸ் போன்ற வரிகளுக்காக உங்களுடைய சொத்தை மதிப்பிடுதல் மிக மிக தேவையாய் இருக்கிறது.

2. சொத்தை விற்பதற்கும், சொத்தை வாங்குவதற்கும், வாங்குவோர் விற்பவர்களுக்கு இடையே நடக்கும் விலை நிர்ணயித்தலில் அதிக அளவு பேச்சு வார்த்தைகள் சொத்தின் மதிப்பை பற்றி நடந்து கொண்டு இருக்கும் , அரசினுடைய வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் காலி நில சொத்தை வாங்கும் போதும், விற்கும் போதும் காலி நிலத்தின் விலையை பெருமளவில் தீர்மானிக்கிறது.

3. அதே போல் காலி நிலத்தை அரசு கையகபடுத்தும் போது நஷ்ட ஈடு கொடுப்பதற்கு நிர்ணயிக்கும் மதிப்பு பெரும்பாலும் வழிகாட்டி மதிப்பு & சந்தை மதிப்பை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அதில் கட்டிடமோ , தோட்டமோ, தோப்போ, இருக்கும் போது அவை என்ன தொகை சம்பாதித்து கொடுக்கிறது என்ற சம்பாதிக்கும் மதிப்பு (ECONOMY VALUE) பார்க்கப்படுகிறது.

4. ஒரு நிலத்தை அரசு எடுக்க போகிறது , வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் நிலத்தை சுற்றி இருக்கும் மோசமான சூழ்நிலை விற்பவரின் தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் கலவரம், போர், போன்ற பயந்த சூழ்நிலைகளில் சொத்துக்களின் மதிப்பு வாங்கிய விலையை விட குறைவாக கொடுப்பர் அதற்கு …… VALUE

5. போகின்ற மதிப்பை விட அதிக பணம் கொடுத்து சொத்தை வாங்க தனிப்பட்ட ஒரு நபர் விரும்பினால் அதனை பேன்சி வால்யு (FANCY VALUE) சொத்தில் உணர்ச்சி பூர்வமாக நம்பிக்கை சார்ந்து இருப்பதற்காக வாங்குவது செண்டிமெண்டல் வால்யு (SENTIMENT VALUE)

6. சொத்துக்களில் உள்ள கட்டுமானங்கள் வயதாகி கொண்டே போனாலும் பராமரிப்பு இல்லாமல் போனாலும் , அதை தேய்மான மதிப்பு ( …..VALUE) இப்படி பலவகையான மதிப்புகள் சொத்தை பொறுத்தவரை இருக்கிறது.

7. சொத்தின் மதிப்பை பாதிக்கும் காரணிகளாக சப்ளை ஆண்டு … வாடகை ஒப்பந்த சட்டம், நகர நில உச்சவரம்பு சட்டம், நகர ஊரமைப்பு சட்டம், பதட்டமான சூழ்நிலைகள் (வெள்ளம் , புயல், நிலநடுக்கம்,) ஆகியவை இருக்கின்றன.

8. நிலம் & சட்டம், விளை நிலங்கள் , காப்பி , இரப்பர், தேயிலை, ஏலக்காய் , தோட்டங்கள் கட்டிடம், தொழிற்சாலைகள், & அதன் உபகரணங்கள், தோட்டங்கள், தோப்புகள், காலி நிலங்கள், வீட்டுமனைகள், & வீடுகள், என்று பலவகையான சொத்துக்களுக்கு பலவகையாகவே சொத்துக்களை மதிப்பிடுகிறார்கள்.

9. மதிப்பிடுதல் என்பது கால நேரத்திற்கு ஏற்றவாறு , மதிப்பிடுதலின் நோக்கத்திற்கு ஏற்றவாறு , மதிப்பிடுதலின் முறைகளுக்கு ஏற்றவாறு மாறி கொண்டே இருக்கும்.

10. மதிப்பு என்பது கருத்து தானே தவிர 1௦௦% உண்மை அல்ல (VALUE IS ONLY OPENION)

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்