ஆங்கிலேயரின் நிலநிர்வாகம் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!


1. வெள்ளையர்கள் காலத்தில் இருந்த கணக்கு வழக்கு நடைமுறைகள் உங்களுக்கு தெரிந்தாலமட்டுமே , பெரிய பெரிய எஸ்டேட்டுக்கள் , பண்ணைகள் வாங்கும்போதும், ஜமீன் ,இனாம் சொத்து் சிக்கல்கள் இருந்தால் குழப்பங்கள் இன்றி புரியும்.அந்த கால ஆவணங்களின் நகல்களை அலச முடியும், அதனால் அதனை எளிமைமைபடுத்தி வெள்ளையர் கால நில கணக்குககளை வரிசைபடுத்தி இருக்கிறேன்.

b45bc4e3d424b21e41b1f3f89b8f6579

2. காரன்வாலிஸ் பிரபுவால் முதன்முதலில் 1770 களில் பத்தாண்டுக்கு மட்டும் முதன்முறையாக வங்காளத்தில் ரொக்க தீர்வை விதிப்பு நடந்தது , அதனை டேசின்னியஸ் செட்டில்மென்ட் (DECINIOUS SETTLEMENT) என்பர். அதன் பிறகு இந்தியா முழுவதும் ஜமீன்தாரி முறை அமுல்படுத்தினர். அதனை PERMANENT SETTLEMENT என்றனர். கலெக்டர் நேரடியாக நிலத்திற்கு வரிவிதித்த முறை தாமஸ் மன்றோவால் அறிமுகபடுத்தபட்டது. அதனை இரயத்வாரிசெட்டில்மென்ட் என்பர்.

 பஞ்சாப் பகுதிகளில் ஒரு கிராமமோ ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களோ ஒருங்கிணைந்து தீர்வையை செலுத்துவார்கள், அவை மகால்வாரி செட்டில்மென்ட் , தஞ்சை , செங்கை பகுதிகளில் சில கிராமங்களை கட்டுக்குள் வைத்து வரி வசூல் செய்து கொடுப்பார்கள் அதனை மிராசு செட்டில்மென்ட் என்று சொல்லுவர்.
3. இங்கிருக்கும் நிலங்கள் அனைத்தும் இங்கிலாந்தின் கிரீடத்திற்கு கீழே இருப்பவை தான். “ LORD PARAMOURT “ என்று சொல்லுவர்.இங்கு இருக்கும் நிலங்கள் எல்லாம் அவர்கள் கொடுத்தது தான்.

4)இங்கு இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் , நிலத்தில் முழுமையான உரிமையாளர் கிடையாது, நிலத்தை வைத்து இருப்பவரகள்எல்லாம் ஒருவகையில் வாடகைதாரர் அவ்வளவே. ஆனால் அந்த வாடகை சொத்தை அவர்களுடைய வாரிசுகளுக்கு கொடுக்க , பிறருக்கு கிரயம் கொடுக்க , அனுபவிக்க , பாடுபட , லாபமும் , வருவாயும் ஈட்ட உரிமையுண்டு .

5). நில உரிமையின் அடிப்படையில் பூமிக்கு மேல் வருகின்ற அல்லது வளைகின்ற லாப வருவாய்களை அனுபவிப்பது “மேல் வாரம் “ உரிமை “ மேல் வாரம் “ உரிமையாளருக்கு கீழ் வாடகைதாரராக இருந்து நிலத்தில் பண்ணையம் செய்பவர்கள் குடிவார உரிமை , ஆனால் பூமிக்கு அடியில் கிடைக்கின்ற வளங்கள் , கனிமங்கள் அனைத்தும் அரசிற்கே உரிமை.

6)மக்கள் , ஜமீன்தரர், பாளையக்காரர், இனாம்தாரர், என்று யார் யார் வெள்ளையர்கள் இங்கு வருவதற்கு முன்பே ஒவ்வொரு எஸ்டேட்டின் முழு உரிமையாளராக இருந்து வந்தார்களோ, அவர்களை எல்லாம் தன் கட்டுபாட்டில் வெள்ளையர்கள் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு மேலவார உரிமையை மட்டும் அளித்தார்கள். அதற்கு முன்பாக விளையும் பயிராக வாங்கப்பட்ட வரியை மட்டும் ரொக்க பணமாக பிரிட்டிஷார் மாற்றினார்கள்.

7) விளையும் பயிர்களை வைத்து வரிவாங்குவது, சிரமமான முறையாகவும், விளையும், விளையாமல் போகும் என்ற நிச்சயத்தன்மை இல்லாத நிலையிலும் ,ஜமீன்கள் வரி முறைகேடுகளை தடுப்பதற்காகவும் எது எப்படி இருந்தால்லும் எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வரியாக வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரொக்கமாக வரிவிதிப்பை வெள்ளையர்கள் செய்தார்கள்.


8). ஜமீன்தாரர், பாளையக்காரர், மிட்டதாரர், இல்லாத பகுதிகளில் வெள்ளையர்கள் நேரடி கட்டுபாட்டில் இருக்கின்ற பகுதிகளில் கலெக்டரை வரிவசூல் செய்தார்கள் வெள்ளையர்கள், மேலும் பாளையகாரர் கீழே ஒரு குறு அளவில் தஞ்சாவூர் பழைய செங்கை மாவட்டங்களில் மட்டும் சில கிராமங்களை கட்டுபாட்டில் வைத்து இருப்பவர்கள் மிராசுகள் வரிவசூலுக்கு கமிசன் ஏஜென்ட் போல் செயல்பட்டு கொண்டு இருந்தன.

9) நிலத்தில் அடி(குடி)வாரஉரிமை வைத்து இருப்பவர்கள் நிலங்களில் பாடுபடுபவர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் நிலத்தை கைப்பற்றுதலில் வைத்து இருப்பவர்கள் மட்டுமே! அவர்களுக்கு கீழே நிலம் இல்லாதவர்கள் , நில உரிமை தடுக்கப்பட்டவர்கள், பண்ணை அடிமைகளாக சிறுகூலிக்காக உழுது கொண்டும் , பாடுபட்டு கொண்டும் இருந்தார்கள்.

10) தீர்வையை வருவாய் அடிப்படையில் வெள்ளையர்கள் நிலங்களை மூன்றாக பிரித்தார்கள். 1. வருவாய் வர கூடிய நிலங்கள் , 2. வருவாய் வராத நிலங்கள். 3. வேஸ்ட் நிலங்கள்,
வருவாய் வரக்கூடிய நிலங்கள் கலெக்டர், ஜமீன் மூலமோ தீர்வை வசூலிக்கப்பட்டுவிடும் இவைதான் கணிசமான வருவாயை தந்தது.

11)வருவாய் வராத நிலங்கள் என்பது இனாம் அல்லது மானியம் என்று சொல்லுவார்கள் அதற்கு எந்தவிதமான வரிவிதிப்பும் கிடையாது. என்ன பொருள் மேல்வார உரிமையாளருக்கு கிடைத்தாலும் தாங்களே அனுபவித்து கொள்ள வேண்டியது தான் . இதனைதான் மானிய நிலங்கள் என்றும் சமஸ்கிருதத்திலும் இனாம் நிலங்கள் என்று உருதுவிலும் சொல்லப்பட்டது.
12). வேஸ்ட் நிலங்களை மேலும் இரண்டு பிரிவாக பிரித்தனர்.

1. தீர்வை விதித்த பயனற்ற நிலங்கள் அதாவது வேஸ்ட் நிலத்திற்கு சிறு தொகை நிரந்தர தீர்வை விதிக்கப்பட்டு நிலமற்றவர்களுக்கு பாடுபட்டு கொள்ள கொடுத்துவிட்டனர். வெள்ளையர்கள் அதனை தர்காஸ் (DARKHAST) நிலம் என்று சொல்லுவர்.இவை இன்றும் புழக்கத்தில் உள்ள சொல்லாக இருக்கிறது.

13) தீர்வை விதிக்கபடாத பயனற்ற நிலங்களை புறம்போக்கு நிலங்கள் என்று சொல்லுவார்கள். பொதுமக்கள் பயனுக்காக , விவசாயத்திற்காக ஆற்று புறம்போக்கு , மேய்ச்சலுக்காக மேய்ச்சல் புறம்போக்கு, குடியிருப்புகளுக்காக நத்தம் புறம்போக்கு என்று பிரித்து இவற்றிக்கு எல்லாம் தீர்வைகள் விதிக்கப்படவில்லை.


 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்