என்னைடைய புறந்தூய்மை முயற்சியும் அகந்தூய்மை தியான பயிற்சியும்!!

என் பக்கம் அண்டாது என்று பாவத்தை லேசாக எண்ண வேண்டாம்!துளி துளியாய் விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பி விடும்.பேதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தாலும் பாவத்தால் நிரம்பி விடுகிறான்! எனபது புத்தரின் போதனை!!!

என்னுள்ளும் 38 ஆண்டுகளாக துளி துளி யாயும் மலை மலை யாயும் சேரத்த பாவங்களை சுத்தம் செய்து கொள்ள எண்ணியும் இனி வரும் காலங்களில் புதிய மனிதனாக மாறி இருக்க வேண்டும் என்று எண்ணியும் Forgiveness Meditation உம் புரிதல் குறைவே அனைத்து தீமைகளுக்கும் காரணம் எனவே புத்தரை உரையை படிப்போம்.

மறுபடியும் புரிந்து கொள்வோம் என்ற நோக்கத்திலும் புத்தர் ஆலயத்திற்கு சிரம தான (உடல் உழைப்பு தானம்) செய்வோம்.என்ற எண்ணத்திலும் சென்னையை விட்டு 80 கி.மீ தொலைவில் ஈ.சி.ஆரி ல் தூய்மையான அழகான மரக்காணம் ஊருக்கு வெளியே மிக சிறிய புத்தர் கோயிலை தேர்ந்தெடுத்தேன்.

அக்கோயிலை ஆச்சாரிய தம்ம சீலர் என்ற பிக்கு நடத்தி கொண்டு இருந்தார்.அவரிடம் ஆசியும் வழிகாட்டுதலும் பெற்று தற்காலிக சிரமண துறவி ஆக மாற சீவர துணி பெற்று கடந்த பங்குனி பௌர்ணமி அன்று என்னுடைய அகத்தை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டேன்
சிறந்த பணிவோடும் முழு ஈடுபாட்டுடன் சிறிய கோயிலை முழுதும் சுத்தம் செய்தேன்.

தினமும் புத்த வந்தனம்,போதிசத்துவர் அம்பேதகரின் பத்தமும் தம்மமும நூல் வாசிப்பு,பிக்குகளுக்கு உதவி பணிகள்,சமையல்.தியானம் என்று கழித்தேன்.

sநிறைய பாரத்தை இறக்கி வைத்து விட்டு நிம்மதி அடைந்தது போல மன நிறைவை அந்த தவகாலங்களில் பெற்றேன்.என்னுடைய எதிர்கால வியாபார குடும்ப சமூக வாழ்க்கையை பற்றி முழுதும் யோசித்து இருந்தேன்.

இந்த Forgiveness Meditation க்கு வழிகாட்டுதல் தந்த பிக்கு ஆச்சாரய தம்ம சீலர், உதவியாக இருந்த நண்பர் புதுசேரி மௌரியன் IAS பயிற்சி மைய நிறுவனர் பாரதி அவர்களுக்கும் எனக்கு உணவு உடை உதவிகள் செய்தும் என் தியானத்திற்கும் முழு உதவியாக இருந்த என் அருமை சகோதரி அதிர்ஷ்ட இலட்சுமிக்கும் உளபூர்வ நன்றிகள்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்-பிராப்தம் ரியல்டர்ஸ்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
  •  

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!