பெண்கள் இன்னும் சொத்துரிமையில் முழு ஆளுமையை செலுத்தவே இல்லை (பெண்கள்தின சிறப்பு கட்டுரை)

c6f7365e7fa2657c8ff0971a64bb58ba 
 பெண்கள் இன்னும் சொத்துரிமையில் முழு ஆளுமையை செலுத்தவே இல்லை (பெண்கள்தின சிறப்பு கட்டுரை).

1.பெண்களுக்கு தனி சொத்திலும், பூர்வீக சொத்திலும் சம உரிமை உண்டு என்று சட்டம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பெண்கள் சொத்துக்களில் தங்கள் ஆளுமையை செலுத்தகூடிய மனநிலையில் இல்லாத அக விழிப்புணர்வு அற்றே இருக்கிறார்கள்.

2.பாகப்பிரிவினைகளின் போது பெரும்பாலும் பெண்களுக்கு நிலத்தை பகிர்ந்தளிக்காமல் ஒரு தொகையை கொடுத்துவிட்டதாக பாபிரிவினை பத்திரத்தில் கணக்கு காட்டி கொண்டுவருகின்ற நடைமுறை இன்றுவரை இருந்துவருகிறது.

3.சொத்துரிமையில் இருந்து வெளியேறகூடிய விடுதலை பத்திரங்கள் அதிகமாக பத்திர அலுவலகங்களில் பதியபடுவது பெண்களை சொத்தில் இருந்து வெளியேற்றுவதற்காகத்தான்.

4. ஒரு ஆணுக்கு பூர்வீக சொத்து இருந்தால் அது அப்படியே தன்னுடைய வாரிசுகளுக்கு அனுபவத்திற்கு விட்டு செல்கிறார். பெண்களுக்கு பூர்வீக சொத்து இருந்தால் அதை அப்படியே போட்டு வைப்போம் என்ற எண்ணம் பெண்களுக்கு இருப்பதில்லை, கூட இருக்கும் ஆண்களும் இருக்க விடுவதில்லை.

5.ஒரு பூர்விக சொத்து இருந்தால் சிறு வயதில் இருந்தே அதை ஆண் வாரிசுகள் அனுபவிக்கிறார்கள். தங்களுடைய சகோதரியை, சிறிய வயதிலிலேயே அந்த சொத்து அண்ணன் அல்லது தம்பிக்கு என்று பெண்ணின் பெற்றோர்கள் MIND PROGRAME செய்துவிடுகிறார்கள்.

6)மேற்படி பெண்களுக்கு விவரம் வந்ததும் அந்த சொத்துகளை அனுபவிக்க எண்ணினாலும் சொத்தினுள் நுழைய சகோதரர்கள் மறுக்கிறார்கள். இப்படி ஆண்களிடம் இருந்து சொத்தின் அனுபவத்தை மீட்க முடியாமல் நொந்துபோன பல பெண்கள் இருக்கிறார்கள்.

7)சொத்துகளை யாருக்காவது விற்கும் போதுதான் அக்கா, தங்கைகளை தேடி வருகின்ற சூழலில் ஆண்கள் இருக்கிறார்கள். அக்கா தங்கைகளும் எங்களுடைய பங்கு அப்படியே கிடக்கட்டும் என்று சொல்கின்ற அளவுக்கு ஆளுமை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

8)இன்னும் சிலர் பெண்களுடைய ஆண் சகோதரர்கள் வன்முறையை, அராஜகத்தை பயன்படுத்தி சொத்துகளில் இருந்து விடுதலை வாங்குவதை நிறைய கள அனுபவங்களில் மௌன சாட்சியாக பார்த்துகொண்டே இருந்திருக்கிறேன்.

9)சொத்தை விற்கும்போதோ பாகபிரிவிணை போடும் போதோ விடுதலை பத்திரம் போடும் போதோ சிறு தொகையோ அல்லது பலன் எதுவும் பெறாமல் சகோதர்ரகள் நல்லா இருக்கட்டும் என்றே சொத்துரிமையை விட்டு விடுகிறார்கள்.

10)கலாச்சாரம் என்ற கயிற்றால் தங்களை தாங்களே கட்டி கொண்டு சொத்து விஷயத்தில் விரும்பியே ஆணுக்கு கட்டு பட்டு பல பெண்கள் இருக்கிறார்கள்.

11)பெண்கள் சொத்துரிமை பற்றி முழு விழிப்புணர்வையும் சொத்துக்களை விட்டு விட கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையை பெண்ணியவாதிகள் பெண்களிடையே கொண்டு செல்லவேண்டும்.

12)விடுதலை பத்திரம் மற்றும் பாகப்பிரிவனை பத்திரம் போடும்போது அதில் பெண்களுக்கு முழு சம்மதம் இருக்கிறதா? வற்புறுத்தல் மற்றும் கட்டாயத்தின் பேரில் பணம் வாங்கிக்கொள்கிறார்களா? என்பதை அறியவும் எதிரவினை ஆற்றவும் விழிப்பு குழுக்கள் (AWARNESS TEAM) அமைக்கப்படல்வேண்டும்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்