வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் 1)

தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்:
12c542a0630103916639d5ab3526b8d9
தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும், கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

ஆடை : நம் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேக நடை : ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விடமுடியும். சற்று உறுதியான, வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே, இன்றிலிருந்து 25% வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை : எப்போதுமே நிமிர்ந்த நிலையில், நிற்கவோ அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது தலையை தொங்கப்போடாமல் இருப்பது எதிரே உள்ளவர்களின் கண்களை நேரே பார்ப்பது பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.

கேட்பது : கேளுங்க, கேளுங்க நல்ல பாசிடிங் ஆன விசயங்களையும் தன்னம்பிக்கையை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும்.

நன்றி : உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் ஈடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் மகிழ்ச்சி ஊட்டக்கூடிய விசயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.

மனதாரபாராட்டுங்கள் : நம்மை நாமே குறைவாக நினைக்கும்போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகடிவ்வாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். சின்ன விசயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள், மற்றவர்களை பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப்போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை காணும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசியங்களும் தானே தெரியவரும்.
முன்னாலே : பள்ளி, கல்லூரி விழா மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே பெரும்பாலானோர் விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே, இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.


Front view portrait of four business executives sitting in a line — Image by © Royalty-Free/Corbis
பேசுங்க : சிலர் பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவார், மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களைத் தேடி வரும்.

உடல்வாகு : நமது உடையும், உடல் வனப்பும் தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்குமீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால். நம்மீது நம்பிக்கை இழக்க நேரிடும்,சக்தி குறையும், ஆகவே உடற்பயிற்சி
செய்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்.

நாடு : நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். சமுதாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும். இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லா திறனையும் வெளிகாட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வேண்டுமா?

துணிச்சல் யாருக்கு வரும்?

1.உண்மை பேசுபவர்களுக்கு

2.நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு

3.நல்ல மனம் உடையவர்களுக்கு

4.தீமையைக் கண்டு மனம் கொதிப்பவர்களுக்கு

5.எதிர்பார்ப்பு இல்லாமல் நன்மை செய்பவர்களுக்கு

6.நடப்பது நடக்கட்டும் என்ற உணர்வு உள்ளவர்களுக்கு

7.தன்னலமற்றவர்களுக்கு

8.பொதுநலம் காத்திட நினைப்பவர்களுக்கு

9.நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் அவற்றை ஏற்கின்ற சமநிலை மனமுடையவர்களுக்கு

10.தவறு செய்யாதவர்களுக்கு

11. உறுதியுடனும், உற்சாகத்துடனும் உழைப்பவர்களுக்கு

12.பேசும்போது நேருக்கு நேர் கண்களைப் பார்த்து பேசுபவர்களுக்கு
13. தன்னடக்கமுள்ளவர்களுக்கு – கோழைகளுக்கல்ல

14. பணிவுடன் செயல்படுபவர்களுக்கு – அடிமைகளுக்கல்ல.
நாம் தரத்தில் உயர;

1.விடுப்பு எடுப்பதையும், காலம் தாழ்த்தி வருவதையும் தவிர்க்கவும். (தொழிலில் காலம் பொன்னைவிட உயர்ந்தது. இழந்தால் கிடைக்காது)

2.உங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும். (சுற்றுப்புறம் = மக்கள் + இடம். உங்கள் எண்ணம் இவ்விரண்டையும் பிரதிபலிக்கும்)

3.விபரங்களை சரியான ஃபைல் முறையில் பாதுகாக்கவும். விபரம் + தகவல் + அறிவு அறிவு ஆற்றலைத் தருகிறது)

4.செய்யும் வேலைகளின் முன்னேற்றத்தை அவ்வப்போது மேலதிகாரியிடம் தெரிவிக்கவும். இது தவறுகளைத் தவிர்க்க உதவும்)

5.வீணாக்குவதைத் தவிர்க்கவும் (வீணாக்குவது நமக்கு நாமே நஷ்டத்தை உண்பாக்குவதாகும்)

6.கடமைகளை ஏற்பதைவிட, கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புடைமை இருப்பது அவசியம். (மற்றவர்களை பழிசொல்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்)

7.கூட்டு முயற்சி (Teamwork) மிகவும் முக்கியமானதாகும். (மக்கள், மக்களுக்காக வேலை செய்வர்).

8.தடைகளைத் தாண்டி இலக்கை அடையவும். (ஒரு முறை வெற்றியை சுவைத்தால், அதற்கு அடிமையாகிவிடுவீர்கள்)

9.இயங்குமுறை (System) யை மதித்துப் பின்பற்றவும். (இயங்குமுறை அனைவரின் நம்பிக்கைக்குரியது மதிப்பிற்குரியது)

10.இயங்குமறை (System) யைத் தவறாமல் செயல்படுத்தவும். (நிறுவனத்தின் வெற்றியில் நாமும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்)

11.உங்களை ஒரு பொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு உங்கள் பாதை வேறு
12.எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

13.உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

14.மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

15.நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தை பற்றி நிறைய கனவு காணுங்கள்.

16.அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

17.கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ் சீதைத்துவிடும்.

18.வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

19.எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

20.வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சினைகளும் இங்கு பாடங்கள்.

21.முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சினைகளை ஆரம்பத்திலே தீர்த்துவிடும்.

22.வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும். வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
23.மன்னிக்கப் பழுகுங்கள்.

24.70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்

25.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களே என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

26.உங்கள் நண்பர்களை மதிக்கப் பழுகுங்கள்.

27.உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடன் செய்யுங்கள்.
28.உங்கள் ஆழ்மனதில் இருப்பது மகிழ்ச்சிதான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்

29.உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழுகை கொடுக்காதோ எது நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30.எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என நம்புங்கள்

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#Teamwork #business #executives #selt #motive #belive #success

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்