அரசு புறம்போக்கில் ஒரு DTCP மனைபிரிவு?

index


பெரும்பாலும் DTCP மனை அங்கீகாரம் வாங்கும் போதே வட்டாட்சியரிடம் இது அரசு புறம்போக்கு நிலம் அல்ல என்ற சான்று ட்ட்ச்ப் அலுவலகம் கேட்கும் . அதனால் பெரும்பாலும் DTCP அங்கீகார மனை பிரிவுகளில் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்கள் இருக்க வாய்ப்பு இருக்காது.

ஆனால் என்னுடைய கள பணி அனுபவத்தில் DTCP அங்கீகார மனை அரசு புறம்போக்கில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். இதனை இக்கட்டுரையில் பகிர்வதன் மூலம் நிறைய பேருக்கு விழிப்புணர்வு கூடும் என்று நம்புகிறேன்.

என்னுடைய நம்பதகமான வாடிக்கையாளர் ஒருவர் மும்பையில் இருக்கிறார். அவர் அறிமுகப்படுத்தி சென்னையில் இருக்கும் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு எனக்கு திருவள்ளூர் மாவட்டம், திருவளங்காடு அருகில் ஒரு DTCP மனை இருக்கிறது என்று கூட தெரியவில்லை. வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நான் சென்று பார்த்த பொழுது அடையாளம் தெரியவில்லை என்று எனக்கு பத்திரத்தின் நகலை வாட்சப்பில் அனுப்பினார்கள் .

அதே போல் இன்னும் இரண்டு மூன்று ஆவணங்கள் திருவள்ளூர், திருவலங்காடு, பகுதியில் இருந்து ஏற்கனவே என்னிடம் வந்து இருந்ததால் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் கள ஆய்வு செய்ய கிளம்பினேன்.

மேற்படி மனைபிரிவை கண்டு பிடிப்பது கொஞ்சம் சவாலான வேலையாக இருந்தது. மனையில் கற்கள் ஏதும் இல்லை, இருந்தாலும் தோராயமாக மனையை கண்டுபிடித்து விட்டேன்.

பிறகு கிராம கணக்கை போய் சோதித்து பார்த்தால் அது புறம்போக்கு நிலத்தில் இருக்கிறது என்று தலையாரி சொல்கிறார். எனக்கு குழப்பமாகி VAO வரும் வரை காத்திருந்து மேற்படி இடத்தை விசாரித்தேன். அவரும் ஆம் ! அது புறம்போக்காக அரசு மாற்றிவிட்டது. :BL” புறம்போக்கு என்று அரசு வகைப்ய் இருக்கிறது என்று சொன்னார்.

அதை மீண்டும் பட்டாவாக்கலாம் அது கொஞ்சம் கஷ்டமான வேலை என்றார். ஏற்கனவே நிறைய பேர் மனை வாங்கினார்கள். புறம்போக்காகி விட்டது என்றதும் அழுது புலம்பி கொண்டு செல்கின்றனர் என்று சொன்னார். சரி “BL“ ;புறம்போக்கு என்றால் என்ன என்று VAO விடம் கேட்டதற்கு புரியும்படி தெளிவான விளக்கில் எதுவும் அளிக்கவில்லை. பிறகு எனக்கு தெரிந்த இன்னொரு VAO விடம் வியாம் கேட்டேன் . அவரும் சில குறிப்புகளை பார்த்து எனக்கு சில தகவல்களை அனுப்பினார்.

இதுவரை “BL “ என்றால் வக்கீல் படிப்பு தான் நினைவுக்கு வந்தது. ஆனால் இனி “BL” என்றால் (BOUGAT IN LAND ) அதாவது அரசால் வாங்கப்பட்ட நிலம் என்று பொருள் ஆகும்.

ஒரு நில உரிமைதாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி பாக்கி அல்லது அரசிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் அதனை அவரிடம் வசூலிக்க இயலாத நிலையில் வருவாய் சட்டத்தின் படி அவர் சாகுபடி செய்த நிலத்தை அவர் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடாக … செய்து அதனை ஏலத்திற்கு கொண்டு வரும் வரியை வசூலித்து கொள்ளும் ,ஹனி ஏற்கனவே ஜப்தி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன்.

இப்படி ஏலத்தின் பொது யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை என்றால் ஒரு சிறிய விலை நிர்ணயித்து அரசே வாங்கிகொள்ளும் அவ்வாறு அரசு வாங்கியதற்குரிய ஏல தொகையை அரசு கட்டாமல் வசூலிக்க இயலாத இனங்களில் அதனை சேர்த்துவிடும் . பிறகு கடனை தள்ளுபடி செய்துவிடும்.
மேற்படி நிலங்கள் கிராம கணக்கில் புறம்போக்கு என்றே வகைபடுத்தலாம். வட்டாட்சியர் அலுவலக கணக்குகளிலும் இவை தெளிவாக பதிந்து கணக்குகள் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அரசால் வாங்கப்பட்ட நிலத்தில் முன்னாள் உரிமையாளர் சாகுபடி செய்ய உரிமை இல்லாதவர் , அவர் எந்த விதத்திலும் மேற்படி இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.

முன்னாள் உரிமையாளரோ , அவரின் வாரிசுகளோ 12 ஆண்டுகளுக்குள் அரசுக்கு கட்ட வேண்டிய வரி கடன் தொகைகளை வட்டியுடன் கட்டாவிட்டால் இடத்தை மீட்டு கொள்ளலாம், என்று சொல்கிறது. “ BL” நில சட்டம்.

அந்த கால கேடு முடிந்து விட்டால் அதனை புஞ்சை தரிசாக மாற்றம் செய்து விடலாம். அல்லது மீண்டும் புதியதாக யாருக்காவது ஏலம் விடலாம்.
இப்படி “BL” நிலத்தின் நடைமுறை , முன்னாள் உரிமையாளர் சாகுபடியே செய்ய கூடாது என்ற நிலையில் இங்கு DTCP மனை பிரிவே உருவாகி இருக்கிறது.

அய்யோ அந்த நடுத்தர வீட்டுமனை முதலீட்டாளரை நினைத்தால் எனக்கு கண்ணை கட்டுகிறது.

சரி ! இந்த முதலீட்டாளரை போல் நிறைய பேர் இந்த வீடுமனை பிரிவில் மனைகள் வாங்கி இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் நில ஒப்படை கேட்கலாம். என்று நினைக்கிறன். ஆனால் ஒவ்வொருவரையும் எங்கு பொய் தேடுவது, அதனால் இக்கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள் அதிக அளவு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தால் அவர்களை ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும்.

சரி ! அது எந்த இடம் என்று நிலங்கள் கேட்கும் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. இதோ சொல்கிறேன் திருவலங்காடு அருகே வியாசபுரம் கிராமம் “ரயில்நகர்“ என்ற DTCP மனை பிரிவு ஆகும். இந்த மனை பிரிவுகளில் 2௦ ஆண்டுகள் முன் மனைகள் வாங்கியிருக்கிறவர்கள் கட்டுரை மூலம் பலன் பெற்றால் உண்மையிலே என் ரியல் எஸ்டேட் தொழில் திருப்திகரமானதாக அமையும்.
சொத்துக்கள் சேரட்டும்! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#BilLand #Thiruthani #Thiruvalangadu #Anatheenam #LandTax #Blland #புறம்போக்கு #நிலம் #அரசு

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்