ஒட்டுமொத்த இந்தியாவை அளந்த மும்மூர்த்திகள் !

2
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அளந்து சர்வே செய்து வரைபடம் தயாரித்து துல்லியமான பிழையில்லாத அளவுகளை குறிதத்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்கள் தான்.

அதற்கு முந்தைய அரசுகள் எல்லாம் அந்த அந்த பகுதிகளில் சிறிய சிறிய பரப்புகளில் ஒரு வரைபடம் தயாரித்து வைத்து பயன்படுத்தி இருந்தனர்.அந்த வரைபடம் அட்சதீர்க்க ரேகைககளை பயன்படுத்தி வரையபடவில்லை.
புராணங்களில் தான் 3 காலடியில் உலகத்தை அளந்த ஆண்டவர் கதைகள் இருக்கிறது. ஆனால் உண்மையயில் களத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் நீளம் அகலம் உயரத்தை அளந்தவர்கள் இந்த வெள்ளைகாரர்கள் தான்.
வெள்ளைகாரர்கள் இந்த இந்தியாவை 60 ஆண்டுகளாக அளந்து சர்வே செய்து கொடுத்து சென்ற FRAME WORK இல் தான் இன்று இந்தியாவின் வருவாய்துறையின் நிலசர்வே மற்றும் நில அளவைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

வெள்ளையர்கள் இந்த பணியை செய்யவில்லை என்றால் இன்று வரை இந்தியாவை அளப்பதிலேயே நேரத்தை செலவு செய்து கொண்டு இருந்திருப்போம்.சாதிசண்டை மத சண்டை போடுவதற்கு டைம் இல்லாமல் இருந்திருப்போம்.

சுதந்திர இந்தியாவை ஒன்றுபட்ட தேசமாக மாற்றுவதற்கு இந்த நீண்ட நெடிய சர்வே உதவி இருக்கிறது. இப்படி அறுபது ஆண்டுகள் தொடர்ந்து சர்வே செய்து தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து இருகின்றனர் இந்த மூன்று சர்வேயர்கள்.

இப்படி பெரிய வேலை திட்டங்களை தற்போது போல் அதிநவீன கருவிகள் இல்லாத காலத்தில் மிக துல்லியமாக அளப்பது என்பது மிகவும் கடினமான பணி . இதற்கு அதிகபட்ச தியாகமும் , தலைமை பண்பும் , தொழிலில் பக்தியும் தேவைப்படும்.

இப்பொழுது நமது நிலவரி திட்ட சர்வேக ஆவணங்களை பார்க்கும் போது நமது இந்திய சர்வேயர்கள் பார்த்து இருக்கும் வேலைகள் எல்லாம் வேலை என்றே அங்கீகரிக்க கூடாது .

தஙகளது வாழ்க்கையை நடத்துவதற்கு சர்வே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் நமது சர்வேயர்கள்.

அந்த மூவரும் செய்த சர்வேயின் மிக சிறப்பு என்னவென்றால் உலகமே ஏற்று கொண்ட அட்சரேகை , தீர்க்க ரேகை, என்ற கற்பனை கோடுகளில் சிறிய டிகிரி கூட மாறாமல் இந்திய எல்லைகளை அதில் உட்கார வைத்து தான் .
இதன் பலனால் தான் கப்பல் முதல் விமானம் வரை நாம் எங்கு இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறோம்.

இந்த சர்வே இந்தியாவில் முதலில் சென்னை மெரினா பீச்சில் இருந்து புனித தோமையார் மலை வரை முதலில் நீளம் அகல உயரம் அளந்து சர்வே செய்யப்பட்டது. இறுதியாக இயமமலையின் உயரமான சிகரத்தை உலகிலேயே மிக உயரமான சிகரம் என்ற உண்மையை கண்டுபிடித்தது இந்த சர்வே முடிந்து இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் பரங்கி மலையில் ஆரம்பித்து இமய மலையில் முடித்து இருக்கிறார்கள் இந்த பரங்கியர்கள்.
பள்ளிகூடத்தில் முக்கோணவியல் படிக்கும் போது அப்படி மனதும், உடம்பும் கசக்கும் .

 ஆனால் இந்த முக்கோணவியலில் தான் இந்தியாவையே அளந்து இருகிறார்கள் என்ற உண்மையை என் கள அனுபவத்தில் உணர்ந்த போது என் கணித ஆசிரியர்கள் மதிப்பிற்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். (Trigonomentry யை பிரித்து போட்டு கற்று கொடுத்த என் அல்போன்ஸ் வாத்தியார் வாழ்க )
ஆம்! ஒட்டுமொத்த இந்தியாவை முக்கோணவியலின் கணித உண்மைகளை பயன்படுத்தி தான் அளந்து இருக்கிறார்கள் . இந்த சர்வேக்கு THE GREAT TRIGNOMENTRY SURVEY OF INDIA என்றே அழைத்து இருக்கிறார்கள்.

சாரணர் இயக்கத்தில் ஒரு தூரத்தை கண்டுபிடிக்க ஒரு எளிய வழியை சொல்லி தருவார்கள்.
தூரத்தில் ஒரு சாரண கம்பை நட்டு அதில் ஒரு முக்கோண கோடியை கட்டிவிட்டு , கொடிகம்பில் இருந்து கயிறு பிடித்து தரையில் அளந்து அதன் அளவுகளை குறித்து கொண்டு கையில் இருக்கும் சாரண கம்பை கைகளில் பிடித்து கொண்டு கண்களால் கொடிகளை பார்த்து ஒரு செங்கோண முக்கோணம் கற்பனையாக உருவாக்கி , கற்பனை கோடான நம் கண்ணுக்கு கம்பின் கொடிக்கும் செங்கோண முக்கோணமாக்கி அதன் தூரத்தை கணக்கிட்டு விடலாம். இதன் அடிப்படையிலேயே உயரமான குன்றுகள் மலைகளின் முனையை ஒரு புள்ளியாக வைத்து தரையில் நீளவாக்கில் சங்கிலியால் அளந்து கோணத்தை தியோடலைட் என்ற கருவியை பயன்படுத்தி பெரிய பெரிய கற்ற்பனையான செங்கோண முக்கோணங்களை உருவாக்கி அளந்து இருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் நடந்து சென்றே இந்தியா முழுவதும் சர்வே செய்து இருக்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் வானில் இருக்கும் நட்சத்திரங்களை கவனித்து அதன் அடிப்படையில் அட்சதீர்க்க கோடுகளின் கோணங்களை கணக்கிட்டு ஏற்கனவே செய்த முக்கோண சர்வே அளவுகளை ஒருங்கிணைத்து இந்த நாட்டை அளந்து இருகின்றனர்.

இப்பொழுது சொத்து வைத்து கொண்டு சதுரடிக்கு 15000, 20000 என விற்று கொண்டு இருக்கும் கட்டுமான தொழிலதிபர் முதல் இரண்டு செண்டில் வீட்டு மனை வாங்கி வீடு கட்டும் பாமரன் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த நாட்டை அளந்து கொடுத்து விட்டு சென்ற மும்மூர்த்திகள் இவர்கள் தான்.

சென்னையில் முதல் சர்வேயை ஆரம்பித்து தன்னுடைய வாழ்நாளையே சர்வே பணியில் இழந்து சர்வே பணியின் போதே இறந்த
மேஜர் வில்லியம் லாம்டன் – முதல் நபர்
அவரை பின் தொடர்ந்து வடக்கு , கிழக்கு இந்தியாவை அளந்த
கலோனல் ஜார்ஜ் எவரெஸ்ட் இரண்டாமானவர் (இவரின் பெயரில் தான் எவரெஸ்ட் சிகரம் இருக்கிறது.)

இறுதியாக ஒட்டுமொத்த சர்வேயை முடித்த
கேப்டன் ஆன்டரூ ஸ்காட் வாக் மூன்றாமனவர்.
இந்திய சர்வே மும்மூர்திகளுக்கும்

ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் நன்றிகள்!!
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இந்தியா #சர்வே #மேஜர் #வில்லியம்லாம்டன் #ஜார்ஜ்எவரெஸ்ட் #கேப்டன் #ஆன்டரூ #ஸ்காட் #வாக் #Trigonomentry #சர்வே #மும்மூர்த்திகள் #பிரிட்டிஷ் #வரைபடம் #அட்சதீர்க்ககோடு #நிலவரி #திட்டம் #சர்வே #fram #work #ஆவணம் #survey #measurement #india #major #villiam #lamdon #jarg #andrew #british #map document #landline #project #land

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்