சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்!

ன்

சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்!
ஒரு சொத்து வாங்கும் போதோ , விற்கும் போதோ, கணிசமான அளவில் பணங்கள் ரொக்கமாகவும் , வங்கி மூலமாகவும், காசோலையாகவும், பரிமாற்றம் நடைபெறுகிறது. அந்த பணபரிமாற்ற நேரங்களில் தான் தங்களின் அதிகபட்ச உணர்சிகளை
மக்கள்வெளிபடுத்துகின்றனர்.

அவற்றில் முக்கிய உணர்ச்சிகளான நன்றியுணர்ச்சி , விசுவாசம், சகோதர, சகோதரி பாசம், நட்புணர்வு, ஒரே ஊர் பாசம், சாதி பாசம், மதநம்பிக்கை , கொள்கை, போன்ற அந்நியோனியம் பார்த்து சொத்துக்கள் வாங்க , விற்க அது சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது பெரிய அளவிலான பொருளாதார நஷ்டத்தையே கொடுக்கும்.

இதேபோல் நான் என் தொழில் ஆரம்பித்த புதிதில் தொழிலையும் , உடன் இருப்பவர்களின் உணர்வுகளையும் போட்டு குழப்பி கொண்டதால் என்னை திரிசங்கு நிலையில் கொஞ்சம் நாள் சுற்ற விட்டுவிட்டனர் என் நண்பர்கள்.
எனக்கான சிக்கல் என்னவென்றால், என்னிடம் இருப்பது மற்றவர்கள் பணம், எனக்கு தனிப்பட்ட முறையில் பண இழப்பு இல்லை, ஆனால் அதனை ஈடுகட்ட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது . அதிக அளவு உழைப்பை கொட்ட வேண்டி இருந்தது .
ஆனால் புதிதாய் சம்பாதித்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் எனக்கு பெரிய அளவில் சிக்கல்கள் இல்லை.
ஆனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ள மக்கள் தன் வாழ்நாள் முழுவதுமான சேமிப்புக்களை முதலீடு செய்யும் போதும் பண பரிமாற்றங்களில் ஈடுபடும் போதும் நிச்சயம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லாத மரகட்டையாய் மாறிவிட வேண்டும்.

சொத்துக்கள் வாங்கும்போது கிரய ஆவணங்களில் உள்ள சட்ட சிக்கல்கள் , வருவாய் ஆவணங்கள், அங்கீகார ஆவணங்களில் ஏதாவது குளறுபடிகள் இருக்கிறதா என்று மேற்படி ஆவணங்களை ஆய்வு என்ற பெயரில் உயிரற்ற பொருட்களை திறம்பட சோதித்து பார்ப்பார்கள் ஆனால் நில கிரய சூழலின் போது நம்மை சுற்றி இருக்கிற மனிதர்களின் உணரச்சி்கள் &உணர்வுகளின்அடிப்படையில் சோதிக்காமலேயே விட்டு விடுவார்கள்.
அங்குதான் பிரச்சினையின் ஊற்றுகண் இருப்பதை விளங்கி கொள்ளாமலேயே பணபரிமாற்றங்கள் நடக்கும்போது சிக்கி கொள்கிறார்கள்.
ரியல் எஸ்டேட்டில் சொத்துக்களும் பணங்களும் மனிதர்களால் கட்டுபடுத்தபடுகிறது,
மனிதர்கள் நம்பிக்கைகளிலும், உணர்வுகளிலும், கட்டுபடுத்த படுகிறார்கள். இதை தொழிலில் அனுபவ ரீதியாக நான் புரிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகியது.

அதன் பிறகு சொத்து வாங்கும் என் வாடிக்கையாளர்களுக்கு சொத்து பற்றிய விவரங்களை மட்டும் நான் தருவதில்லை , அவர்கள் முடிவுகள் எடுக்கும் விதத்தை பார்த்து அவர்களின் எண்ணங்களை செதுக்க ஆரம்பித்தேன்.
அவர்கள் உண்மையான தொடர் முதலீட்டாளர்கள் என்றால் எப்படி மனநிலைஇருக்கவேண்டும் .ஒருமுறை அல்லது சிலமுறை மட்டும் முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் மனநிலை எப்படி இருக்க வேண்டும்.
வீடோ சொத்தோ முதன்முறை வாங்குபவருடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் மன பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.அதனால் அவர்கள் நல்ல பலனை பெற்று இருக்கிறார்கள்.

அதனால் அன்று முதல் இன்று வரை பலர் என்னைஅவர்கள் குடும்பத்தில் ஒருவனாக பார்க்கின்ற வரத்தை பெற்று இருக்கிறேன்.
ஒரு சில அனுபவங்களை உங்களுக்கு பகிர்வதன் மூலம் சாதரண மனிதர்களின் உணர்ச்சிகளை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன் .

சென்னை – OMR சோழிங்கநல்லூரில்
4 கிரவுண்டு மனையை 1970 களில் தனது பெயரில் எனது அப்பா வாங்கி போட்டு இருக்கிறார். தற்போது அப்பா இறந்துவிட்டார் , தாயாருக்கு இடம் தெரியவில்லை , நான் வெளிநாட்டிலேயே வாழ்கிறேன் . எனக்கு அந்த இடத்தை கண்டுபிடித்து கொடுங்கள் என்று ஒரு நண்பர் மூலம் அறிமுகமாகி மேற்படி விஷயத்தை என்னிடம் சொன்னார்கள் .
நானும் அவர் சொன்ன பிளாட்டுகளை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அவருக்கு ஈமெயிலில் அனுப்பி விட்டு விட்டேன். சில மாதங்கள் கழித்து அவர் இந்தியா வந்து இடத்தை பார்க்க விரும்புவதாக சொன்னார் . நானும் வாங்க நான் இடத்தை காட்டுவதாக சொன்னேன் .

பெரும்பாலும் சொந்த நாட்டை விட்டு வெளியூரில் இருப்பவர்கள், சொந்த ஊரை விட்டு வெளியூரில் இருப்பவர்கள், தனக்கான ஊரில் சில தொடர்புகளை நண்பர்களை சொந்த வேலைகளை செய்வதற்காக வைத்து இருப்பார்கள்.
அப்படி இன்னொரு நபரை அந்த வெளிநாட்டு நண்பர் கூட்டி வந்தார், இடம் பார்த்தார், சந்தோஷபட்டார் மேலும் சில ஆவண வேலைகளை செய்து கொடுக்க சொன்னார்.நானும் செய்து தருவதாக உறுதி கொடுத்தேன்.
மேறபடி அவரும் அவர் நண்பரும் இருவரின் நட்பை சிலாகித்து கொண்டு பாசமழை பொழிந்து கொண்டனர்.

நான் செய்ய போகின்ற வேலைக்கான செலவுதொகையினை கூட வந்து இருந்த அவர் நண்பனிடம் பெற்று கொள்ள சொன்னார். நானும் சரி என்று சொன்னேன்.இடத்தின் உரிமையாளரும் வெளிநாடு போய்விட்டார். சிலநாட்களில் அவர் சொன்ன வேலைகளை நான் முடித்து விட்டு அவரின் நண்பரை பார்த்தேன் செலவு தொகை வாங்குவதற்காக அவரும் செலவு தொகையினை என்னிடம் கொடுத்தார்.

மேலும் இனி வேலைகள் எதுவும் செய்ய வேண்டாம் அதனை அப்படியே போட்டு விடுங்கள்.வேலையை இழுக்க சொன்னார். கோடிகளில் விலைபோகும் மனையை லட்சங்களிலேயே விலைபோவதாக வெளிநாட்டில் இருக்கும் நண்பனிடம் சொல்ல சொன்னார். மேலும் வெளிநாட்டு நண்பனிடம் இவர் அவரிடம் இருந்து ஒரு பிளாட் சும்மா வாங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறேன் என்றும்,அதற்கு எக்காரணம் கொண்டும் நான் தடையாய் இருக்க கூடாது என்றும் என்னை அறிவுறுத்தினார்.

அதற்கு எனக்கும் சில தொகைகள் தருவதாக சொன்னார்.மேலும் அந்த வெளிநாட்டு நண்பருக்கு இப்படி ஒரு சொத்து வந்து சேர்ந்து இருக்கிறதே என்று பொறாமையினால் என்னிடம் பொங்கி தள்ளிவிட்டார்.
நானும் அந்த வெளிநாட்டு நண்பரை இங்கு இருக்கும் நண்பரை தாண்டி தொடர்பு கொள்ளவிரும்பவில்லை.
என்னால் முடியவும் இல்லை.

ஆனால் நரிகளுக்கு மத்தியில் மாட்டி கொண்டார என்ற பரிதாபம் மட்டும் இருந்தது.ஒரு மனுசனுக்கு சொத்து வந்தா நல்லா இருக்கட்டும்னு எந்த நண்பன் நினைக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். அந்த வேலையையும் பாதியிலேயே விட்டுவிட்டேன்.என் கள அனுபவத்தில் பெரும்பாலும் சொத்து நிர்வாகத்தில் நண்பர்களை தள்ளி வைப்பதே நல்லது.
அடுத்ததாக சென்னை – ஓரகடம் பகுதியில் தமிழக அரசு சிப்காட்டுக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்து கொண்டு இருந்தது. வாடிக்கையாளர் ஒருவர் மேற்படி இடத்தில சொத்தை வாங்க போகிறேன் என்று தொலைபேசியில் சொன்னார். அதற்கு நான் சர்வே என்னை சொல்லுங்கள் , சீலிங்கில் இருக்கிறதா என்று பார்த்து சொல்கிறேன் என்றேன்.

சர்வே எண் அனுப்பினார் , நானும் சோதித்துவிட்டு மேற்படி இடம் சீலிங்கில் உள்ளது வாங்க வேண்டாம் என்று சொன்னேன் . பிறகு அவர் தொடர்பில் இல்லை. சில மாதங்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்டார்.
இடத்தை அரசு எடுத்து விட்டதாகவும் நஷ்ட ஈடு வாங்கி கொள்ள சொன்னதாகவும் வீட்டுக்கு லட்டர் வந்து இருக்கிறது என்று சொன்னார்.
பல இலட்சங்களில் வாங்கிய சொத்துக்கு சில இலட்சங்களில் நஷ்ட ஈடு வந்து இருக்கிறது என்று வருத்ததுடன் ஆதங்கபட்டார்.

என் மனைவியின் நெருங்கிய உறவினர்கள் இடத்தை விற்றார்கள் . அவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. இனி சொந்தகாரர்களை நம்ப மாட்டேன் என்று புலம்பினார்.நீங்கள் கொடுத்த தகவல்களை அலட்சியம் செய்தேன் என்று வருத்தபட்டார் .

நானும் அவரை தேற்றி நடந்தது நடந்துவிட்டது விட்ட பணத்தை வேறு முதலீடுகளில் பெறுங்கள் என்று சொல்லி எடுத்த நிலத்திற்கான நஷ்ட ஈடு தொகையை வாங்கி தருவதற்கான கள வேலைகளை செய்து தந்தேன்.
உறவினர்கள் ஒரு சொத்து விற்பனை இருக்கிறது என்று அடையாளம் சொல்பவர்களாக மட்டும் வைத்து இருங்கள் அதை வாங்கும் முடிவு உங்களுடையதாக இருக்கட்டும் என்பதே என் ஆலோசனை.

அடுத்ததாக பெரும்பாலும் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டுக்கு யாராவது ஒரு நபர் தொடர்ந்து உதவி வருவார். அவர் அந்த வீட்டில் அதிக நம்பிக்கை பெற்றவராக விளங்குவார். அனைத்து வெளி வேலைகளும் அந்த வீட்டிற்காக அவர் செய்து கொண்டு இருப்பார்.அப்படி இருக்கின்ற நபர்கள் நம்பிக்கையாய் சொன்னார்கள் என்று சொத்து விஷயங்களில் கொடுக்கின்ற பேப்பர்களில் காட்டுகின்ற இடங்ளில் எல்லாம் கையெழுத்து போட்டு விடுபவர்கள் ஏராளம்.

இவற்றால் அந்த பெண்கள் இருக்கும் குடும்பங்கள் வீடு இழந்து சொத்து இழந்து நடு தெருவுக்கு வரவேண்டிய நிலைமை இருக்கும். அதனை சரி செய்ய நான் உள்ளே சென்றால் நில விஷயங்கள் தாண்டி உறவுகளையும், உணர்சிகளையும், மனித ஆசாபாசங்களையும் அதன் எதிர்பார்ப்புகளையும் சரி செய்து சமாதனபடுத்துகிற வேலைகளை நிறைய செய்து இருக்கின்றேன்.

எனவே தான் உங்களுக்கு பாதுகாவலராக போஷாக்கு அளிப்பவராக அன்பானவராக அட யாராக இருந்தாலும் சொத்து , இடம் என்று வரும் போது உங்கள் நன்றியுனற்சிகளை மறந்து விடுவது நல்லது.

மேலும் வெளிநாட்டில் இருக்கும் கணவன் வீடு முதல் கொண்டு எல்லா சொத்துக்களையும் மனைவி பெயரில் வாங்கி விட்டு ஓய்வு காலத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதைகள் , கணவன் வெளிநாட்டில் இருந்து மனைவி பெயரில் வாங்கிவிட்டு விவாகரத்து ஆன கதைகள் என்று பலவற்றை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.

வெளிநாட்டில் இருந்து சம்பாதித்த பணத்தில் அம்மா/அப்பா பெயரில் வாங்கி வைத்து விட்டு அம்மா / அப்பா திருப்பி எழுதி கொடுக்காமல் இருப்பது அல்லது பிற சகோதர சகோதரர்கள் திரும்பி எழுதி கொடுக்க விடாமல் இருப்பது.
பாகபிரிவினைகளில் சகோதரிகளை ஏமாற்றுவது, பிற சகோதரனை ஏமாற்றுவது, சகோதரிக்காக தன் பணத்தை போட்டு சொத்து வாங்கும் சகோதரர்கள் , பிறகு சகோதரன் வாங்க வரவில்லை , இது என் சுய சம்பாத்தியம் என்று சண்டையிடுவது, என் சகோதர சகோதரி சண்டைகள் பல விதமாக கடந்து கொண்டு இருப்பதை கள அனுபவங்கள் உணர்த்தி கொண்டே இருக்கின்றன.

இங்கு நான் சொல்வது எல்லாம் சில சம்பவங்கள்தான் இப்படி பல சம்பவங்கள் என்னை கடந்து சென்று இருக்கின்றன.

அப்படிபட்ட நிகழ்வுகளால் வீடு அடமானம் கடனில் மூழ்கும் , சொத்து கைவிட்டு போய்விடும் வருமானம் சிரமமாகி விடும் , நிலங்கள் நீதிமன்றத்தில் நிற்கும்.

எனவே சொத்து விஷயம் என்று வரும்போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லாத மரக்கட்டையாய் மாறி விடுங்கள்!!

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#asset #emotion #land #property
#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்