தமிழக மலைகளில் சொத்துக்கள் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய 18 சங்கதிகள் !

1. தமிழகம் முழுவதும் இருக்கின்ற சிறிய, பெரிய குன்றுகள் , மதுரையை சுற்றியுள்ள எண் பெருகுன்றங்கள் என்ற மலைகள், செஞ்சியை சுற்றி கற்களை குவித்து கொட்டி வைத்தது போல இருக்கும் மலைகள், தமிழகத்தின் வட கிழக்கில் இருந்து தென் மேற்காக வரும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்,தமிழகத்தின் மேற்கு திசை எல்லை முழுதும் விரிந்து இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலைகள் என மலைவளம் நிரம்பி இருக்கிறது நம் தமிழகத்தில்.

edcd81d0283f3cf42803aa877490646c

2. திருச்சி உச்சி பிள்ளையார் மலை,பர்வத மலை,திருவண்ணாமலை,சதுரகிரி மலை,வெள்ளியங்கிரி,கொல்லிமலை ,தாமஸ்மலை, அச்சரப்பாக்கம் மாதாகோவில் மலை, ஷேக் அப்துல்லா தர்கா பிரான் மலை, பழனி முருகன் மலை போன்ற ஆன்மீகம் பரப்பும் மலைகள் தமிழகத்தில் பல உள்ளது. பல மலைகள் , குடவரை கோவில்கள், இந்து, பெளத்த, சமண தொல்லியல் சின்னங்களாக அரசின் கட்டுபாட்டில் இருக்கிறது.

3. சென்னையில் திரிசூல மலை அதிக அளவில் வீடுகள் குடியிருப்புகள் கொண்ட மலை ஆகும். இது போல தமிழகம் முழுவதும் சின்ன சின்ன மலைகளில் பழங்குடிமக்கள் மற்றும் அடிதட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.

4. மேலே சொன்ன எல்லா மலைகளும் அரசினுடைய புறம்போக்காக தான் வகைபடுத்தபட்டு உள்ளது.

கோடிகணக்கில் வருமானம் உள்ள பழனி முருகன், பழனி மலையில் புறம்போக்கு நிலத்தில் தான், குடியிருந்து வருகின்றனர்.
5. பல அடித்தட்டு மக்கள் தமிழகம் முழுவதும் புறம்போக்கில் வசித்து பட்டா கேட்டு போராடி வருகின்றனர். அவர்களுக்காகவது அரசு பட்டாவை ஆங்காங்கே கொடுக்கிறது. ஆனால் பழனி முருகன் அரை நூற்றாண்டாக பட்டா கேட்டு வருகின்றார். இன்னும் அவருக்கு கிடைத்தபாடில்லை.

6. தமிழகத்தின் கிழக்கு , மேற்கு தொடர்ச்சி மலைகளில் பழங்குடியினர்! அல்லது தோட்ட தொழிலாளர்கள் பெருமளவில் வசிகின்றனர். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு பட்டா வாங்கும் போராட்ட வரலாறு கொண்டது.

7. நிலவரி திட்ட சர்வே தப்பும், தவறும் இந்த மலைகளில் தான் அதிகம், தரையில் நிலவரி திட்ட சர்வேயில் உரிமையாளர்கள் பெயர் மாறி, ஆன்லைனில் ஏறி இருக்கும் . ஆனால் மலையின் நிவரி திட்ட சர்வேயில் நிலவகையில் காடு என்று எல்லா பகுதியையும் குறித்து மக்களிடையே இருந்து மலைகள் அந்நியபடுத்தபட்டன.

8. ஒரு நில சர்வேயர் காட்டுவாசியின் பார்வையில் நின்று சர்வே செய்தால், எது காட்டு கிராமம் , எது காட்டு விவசாயம் இடம் எது, கால்நடை மேய்ச்சல் நிலம் என்று பிரித்து இருக்க முடியும் , போன சர்வேயருக்கு எல்லாமே காடாக தானே இருக்கிறது என, காடு என்று ஆவணபடுத்தி விட்டார்கள் . இதனால் தமிழகத்தின் பல மலைகாடுகளில் ஆதிவாசிகளுக்கும், வன துறையினருக்கும் , இது காடு இல்லை , இது என் மேய்ச்சல் நிலமென்று சண்டை தான் வந்து கொண்டு இருக்கிறது.

9. மேற்படி ஆதிவாசியினர் பூர்விகமாக இருந்து பட்டா பெற்று அதனை வேறு நபர் வாங்கி , அது இன்னொரு கைமாறி , பழ தோட்டமாக கேரட் காடாக , காய்கறி மேடாக, வீடாக , ரெசார்ட் ஆக எல்லாம் மாறி இப்பொழுது இருக்கிறது. அழகிய தோட்டம், அழகிய ரெசார்ட் என்று நம்பி அதனை வாங்கிவிடாதீர்கள் பத்திரம் ஆபிஸில் பத்திரம் எல்லாம் போடுவார்கள் !மேற்படி சொத்து எல்லாம் ஆதிவாசிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்காதவரை வரை தான் உங்கள் கைககளில் அச்சொத்து இருக்கும்.

10. ஆதிவாசிகள் பழங்குடியினர்களும் அடுத்த பத்தாண்டுகளில் படித்த தலைமுறையினராக வந்துவிடுவர் அதற்கு பிறகு இப்பொழுது இருக்கின்ற உறக்க நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களும் விழிப்புற்று நில மீட்பு போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்து விடுவர் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

11. ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, போன்ற தமிழக மலைகளை வெள்ளைகாரரர்கள் சர்வே செய்து பல தனியாருக்கு (பழங்குடியனர் அல்லாத) ரெவின்யூ பட்டா கொடுத்து இருக்கிறார்கள். மேற்படி மலைகளை தவிர்த்து மீதி மலைகளில் இடம் வாங்க வேண்டும் என்றால் நிலவரி திட்டம் சர்வே நடந்து பழங்குடியினர் அல்லாத மக்களுக்கு ரெவின்யூ பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்த்து தான் நிலங்களை வாங்க வேண்டும்.

12 ஊட்டியில் பெரும்பாலும் படுகா செட்டில்மென்ட் கிராமங்கள் அதிகம், எனவே படுகா செட்டில்மென்ட் தோட்டங்கள் மற்றும் காடுகளை வாங்கலாம் , கொடைக்கானலில் ஏலகிரி இடம் வாங்க “A” REGISTRAR உடன் தான் செல்ல வேண்டும். ஏற்காட்டில் தான் வெள்ளைக்காரர்கள் முதன்முதலில் சர்வே செய்தார்கள். அந்த ஆவணங்கள் சேலத்தில் இன்னும் கிடைக்கும். அதனை கொண்டு சென்றுதான் நிலங்களை வாங்க வேண்டும்.

13. மலைகளின் நில உரிமையாளர்கள் பெரும்பாலும் தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரே பேர், ஒரே இனிசியலோடு புழங்குவார்கள். அவை ஆதார் , வோட்டர் ஐடி லும் ஆதாரமாக நிலைத்து இருக்கும். சொத்துக்களை பார்த்து பார்த்து வாங்க வேண்டும், இல்லை யென்றால் தாத்தா பட்டாவை வைத்து பேரன் உரிமையாளராக விற்பனை செய்துவிடுவர்.

14. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், நெய்வேலி, தேவலா , பாடந்தொரை, சிறுமுள்ளி, நெல்லியாளம், சேரங்கோடு, மும்மநாடு , முதுமலை, எல்லாம் செழிப்பான அழகான மலை ஊர்கள். பார்த்தாலே சொர்க்கம் தான் இங்கு தோட்டம் ஒன்று வாங்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் செக்ஷன் 17 ஜென்ம லேண்ட் ன்னு ஒன்னு சொல்லி , ஒரு 50 வருட கோர்ட் இழுத்தடிப்பை சொல்வாங்க பாரு ! (அந்த கதையை தனி கட்டுரையாய் போடலாம் ) மேற்படி பகுதிகளில் ஜென்ம நிலம் இல்லாத நிலங்களாக பார்ப்பது நல்லது.

15. மலை வாச ஸ்தலங்களே இந்தியாவில் மிக குறைவு. இமயமலையில் இருக்கின்ற நகரங்கள் மிக மிக குளிரானவை . 50 வயதினருக்கு மேல் அங்கு பயணம் செய்ய குளிருக்கு பயப்படுகின்றனர். அதனால் ஊட்டி, கொடைக்கானல் , மூணார், ஏற்காடு, கூர்க், போன்ற தென்னிந்திய மலை வாச ஸ்தலங்களில் தான் அதிகம் பேர் பயணிக்கின்றனர் இதனால் கூடுதல் மதிப்பை இம்மலையில் உள்ள சொத்துக்கள் பெறுகின்றன.

16. அதிக சுற்றுலா பயணிகளால் ரூம் வாடகை , கார் வாடகை , டிக்கெட் வாடகை, எல்லாம் அதிக டிமாண்ட் ,ஒரு ரிசார்ட் இருந்தால் ஒரு சீசனிலே ஒரு வருட லாபத்தை எடுத்து விடலாம் என்ற பிசினஸ் வாய்ப்பு அங்கு இருக்கும் நிலங்களுக்கு அதிக வியாபார மதிப்பை கொடுத்து இருக்கிறது.

17. மேற்படி நிலங்களை பட்டாவோ புறம்போக்காவோ , அரசு கண்டிசனோ, எல்லாவற்றையும் ரிசார்ட் கட்டி வாடகை விட்டால் வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும் என்பதால் பல கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன. சுற்றுலா போகிறவர்கள வருகிறவர்கள் பார்க்கும் கட்டிடங்கள் பெரும்பாலும் பட்டாவில் இருப்பதில்லை என்பது நிதர்சனம்.

18. அதிக பண மதிப்பும் , அதிக பேர் வருகின்ற ஊர் என்றால் அதிகம் பேர் நிலம் வாங்குகிற ஊராக இயல்பாகவே ஆகிவிடும். அதனால் நிறைய நில சட்ட சிக்கல்களை அங்கு இருக்கிற மக்கள் உருவாக்கி வைத்து இருப்பார்கள்.உதாரணமாக ஏற்காட்டிலும் கொடைக்கானலில் சிவில் வழக்குகளை சந்திக்காத நில துண்டுகளே இல்லை எனலாம் ! எனவே இப்பகுதிகளில் சொத்து வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும் .
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்து #தமிழகம் #மலைகள் #பட்டா #ரிசார்ட் #court #condition #வெள்ளியங்கிரி #கொல்லிமலை #goverment #incom #tamilnadu #deed #kodaikanal #ooty #hill #mountain #rend #room #demand #chennai #land #a-register
#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்