அரசு நில ஆர்ஜிதத்தில் நஷ்டஈடு பெற தெரிந்திருக்க வேண்டிய 13 செய்திகள்!

c0452f5ecac989eadf9b9e9ce7e49d7b

1. அரசின் ஒரு துறைக்கோ, அல்லது அரசு நிறுவனங்களுக்கோ, அல்லது தனியார் நிறுவனத்திற்கோ, பொதுபயனுக்காக பொதுமக்களின் நிலம் தேவைப்படின் சமந்தப்பட்ட துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிபார்கள்.

2. பொதுமக்கள் நிலங்களை, நில எடுப்புக்கு தேர்வு செய்யும்போது, நஞ்சை நிலங்கள்,பாசன வசதி நிலங்கள், கோவில் பட்டா நிலங்கள், ஆதி திராவிடர் நிலங்களை கையகப்படுத்த கூடாது. என்று சட்டம் சொல்கிறது. என் அனுபவத்தில் இவை எல்லாம் மீறப்பட்டு தான் நில எடுப்பு நடக்கிறது.

3. நில ஆர்ஜிதத்திற்கு என்று தனியாக நில எடுப்பு அலுவலர் என்று வட்டாச்சியர் அளவில் ஒரு தனி பொறுப்பு உருவாக்கப்படும். இந்த அதிகாரியின் கீழ் அனைத்து நிலஆர்ஜிதங்களும் நடைபெறும்.


4. நில எடுப்பு சட்டப்பிரிவு (4 (1) அறிக்கையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்களின் விவரங்களை தொகுத்து, குறைவான நிலங்கள் என்றால் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன், அதிக நிலங்கள் என்றால் மாநில நில நிர்வாக ஆணையர் ஒப்புதல் பெற வேண்டும்.

‘5. பிறகு நில எடுக்கப்படும் பகுதியில் பிரசுரமாகும் 3 பத்திரிகைகளிலும் அரசிதழிலும்( கெஜட்டிலும்), நில எடுக்கப்படும் பகுதிகளில் வேறு வேறு விளம்பரங்கள் மூலம் நிலம் எடுக்கப்படுகிறது. ஆட்சேபனை செய்பவர்கள் 60 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்பர்.

6. இந்த விளம்பரங்கள் வந்த உடனே நிலம் வைத்து இருப்பார்கள் நேரடியாக நில எடுப்பு தாசில்தாரை விசாரிக்க வேண்டும். உங்களுடைய உரிமை ஆவணங்கள், பட்டா மற்றும் பிற ஆவணங்களை காட்டி மனு செய்து நிர்ணயிக்கப்படும் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை என்று உணர்ந்தால் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடத்தலாம். அதுவும் போதுமானதாக இல்லை என்று உணர்ந்தால் அதற்கு மேல் கோர்ட்டுக்கு அப்பீலுக்கு செல்லலாம்

8. நிலஆர்ஜித இடத்திற்கு நஷ்டஈட்டை பெறுவதற்கு பங்காளி சண்டை, பட்டாதார் பெயர், பத்திரதார் பெயர், சிக்கல்கள்,குத்தகை லீசு அனுபவிக்கும் நபர்கள்,உரிய உரிமையாளர்கள், சகோதரர்கள்,சகோதரிகள் பங்கு என இருந்தால், நஷ்ட ஈட்டை நில எடுப்பு தாசில்தார் நீதிமன்றத்தில் கட்டிவிடுவார். அங்கு சென்று வழக்காடி நஷ்டஈட்டை பிரித்து கொள்ள வேண்டியது தான். நில எடுப்பு தாசில்தார் பஞ்சாயத்து செய்யமாட்டார்.

9 நில எடுப்பு அறிவித்தது நஷ்ட ஈடு கொடுத்ததது என எந்த விஷயமும் உங்களுக்கு தெரியாது. நிலத்தை விட்டு வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருந்தீர்கள் என்றால் உங்கள் பக்கத்து நிலத்துக்காரர்கள் எல்லாம் நஷ்டஈடு பெற்று விட்டார்கள். நீங்கள் சினிமா கிளைமாக்ஸில் போல் வருகிறீர்கள் என்றால்

10. உங்கள் பக்கத்து நிலத்துக்காரருக்கு ஆர்டர் ஆகி இருக்கும் டிக்ரீயை நகல் போட்டு எடுத்து அதனோடு உங்கள் நில ஆவணங்களை வைத்து நில எடுப்பு அலுவலருக்கு மனு செய்து நஷ்டஈடு பெறுதல் வேண்டும்.

11. நீங்கள் நில ஆர்ஜிதத்தை விரும்பவில்லை, உங்களுக்கு நிலத்தை கொடுக்க விருப்பம் இல்லை என்றால் பத்திரிகை விளம்பரம் வரும் பொழுதே ஆட்சேபனை மனு கொடுக்க வேண்டும். அமைப்புகள் சங்கங்கள் உருவாக்கி நில எடுப்புக்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி நில எடுப்பை கைவிட வைக்கலாம்.

12. நில எடுப்பை பொதுமக்கள் 70% மேல் ஒத்து கொள்ள வேண்டும். ஒப்புகொள்ளமால் நடக்கும் நில எடுப்பு வேலைகளை மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் முதல்வருக்கு மனு செய்யலாம். கோரிக்கை வைக்கலாம்.

13. அரசே நில எடுப்பு சட்டத்தை மீறி நில எடுப்பு நடடிக்கைகளை செய்தால் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடலாம். இப்பொழுது புதிய நில எடுப்பு சட்டம் வந்து விட்டது. ஆனால் பழைய நில எடுப்பு விதிகளில் நில எடுப்பு வேலைகள் செய்ததால், நீதிமன்றத்தில் பொதுமக்கள் தடை வாங்கி இருக்கின்றனர்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#goverment #land #acquisition #நில#ஆர்ஜிதம் #தாசில்தார் #நீதிமன்றம் #பஞ்சாயத்து #சொத்து #பட்டா #name #change #registraton #taluk-officer #court #panjayat #asset #deed

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்