உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா தெரிந்து கொள்ள வேண்டிய 11 உண்மைகள்?

2b1bf57d0e3f008b0577616652754a9c

1.“சொத்துரிமை” (RIGHT OF PROPERTY) என்பது ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை உரிமையாக (FUNDAMENTAL RIGHTS) ஆக இருந்தது. சாமானியமாக அரசே நினைத்தாலும் சொத்துரிமையை மீறி நிலத்தை கையகப்படுத்த முடியாது.

2. மிக மிக அத்தியாவசிய தேவையாகிய சாலை, இருப்புப்பாதை மருத்துவமனை என பொது தேவைக்காக மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். அப்பொழுது நில ஆர்ஜித சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

3. முன்பெல்லாம் பெரும்பாலும் பொது தேவைக்கென வரும்பொழுது நில உரிமையாளர்கள் நிலத்தை விட்டு கொடுத்து, அதற்கு தேவையான நஷ்ட ஈடு பெற்று கொள்வார்கள்.

4.மத்திய அரசின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 4 ஆவது சட்ட திருத்தின் மூலம் “அடிப்படை உரிமை” சொத்துரிமை என்பதை 1978 ஆம் ஆண்டு இரத்து செய்து பொது தேவை தவிர எல்லாவிதமான திட்டத்திற்கும் நிலத்தை கையகப்படுத்தலாம்.

5.அரசுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க தேவைப்படும் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ஆங்கிலேயர் உருவாக்கிய சட்டமான நில எடுப்பு சட்டம் 1894 பயன்படுத்தப்படுகிறது.

6. 2013 ம் வரை நில எடுப்பு சட்டம் – 1894 சட்டம் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சட்டமும், அதிக வேலை பளுவாக அரசுக்கும், குறைவான நஷ்ட ஈடாக நில உரிமையாளருக்கும் நிர்ணயிக்கப்பட்டதால் பல போராட்டங்கள் மக்களிடையே எழுந்தது.

7. அதனால் வெளிப்படை தன்மையுடன் கூடிய நில ஆர்ஜிதம் மற்றும் நியாயமான இழப்பீடு பெறுவதற்கான மத்திய அரசின் 2013ம் ஆண்டு சட்டத்தை அமுல்படுத்தப்பட்டது.

8 அரசாங்க துறை, நெடுஞ்சாலை துறை, ரயில்வே துறை போன்றவற்றிற்கு தனி நில எடுப்பு சட்டங்கள் இருந்தன. அவை நில எடுப்பு விசயத்தில் அதிக கண்டிப்பை மக்களிடம் காட்டி இருந்தது.

9.தற்போது மோடி அவர்கள் எல்லா நில எடுப்பு சட்டங்களையும் ஒன்றாக்கி 2013 சட்டத்தில் பெரிய திருத்தத்தையும் கொண்டு வந்து உள்ளனர்.அதனை 2015 சட்ட திருத்தம் என்பர்.

10.வெள்ளைக்கார நில எடுப்பு சட்டத்தில் நிலத்தை எடுக்கக்கூடாது என சட்ட போராட்டங்கள் செய்யலாம். நிலத்தை எடுத்தால் குறைவான நஷ்ட ஈடு தொகை கொடுப்பார்கள்.கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு மேல்முறையீடு செய்யலாம்.ஆனால் இப்புதிய சட்டத்தில் கண்டிப்பாக நிலத்தை கொடுத்து விட வேண்டும். கொஞ்சம் அதிகமாக நஷ்ட ஈடு தொகை கொடுக்கும்.

11. உங்கள் நில எடுப்பு சட்டம் 1894, 2013, 2015 என்ற விவரத்தை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும், ஒவ்வொரு நடைமுறை உள்ளது. அதற்கேற்றார் போல் செயல்படுதல் வேண்டும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நிலம் #ஆர்ஜித #சொத்துரிமை #property #right #fundamental #நில #எடுப்பு #சட்டம் #railway #goverment #act #land #paranjothipandian

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்