கிரயபத்திரத்தில் சமூக நீதி வரலாறு வாட்ஸ்அப்தொடர் :1

blog1

கிரயபத்திரத்தில் சமூக நீதி வரலாறு வாட்ஸ்அப்தொடர் :1
கள்ள தொடர்பு தவறு இல்லை என்பது இன்றைய நீதிமன்ற தீர்ப்பை தமிழ் மற்றும் இந்திய கலாச்சார பாதுகாவலர்கள் எதிர்த்துகொண்டுஇருக்கிறார்கள் ஆனால் இதே கலாச்சார பாதுகாவலர்கள் 80ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம்,பக்தி,கோயில் என்ற கட்டமைப்பில் விபச்சாரத்தை ஒரு தெய்வீக தொழிலாக அங்கீகரித்து பெண்ணடிமை தனத்தை பாராட்டி வந்து இருக்கின்றனர். 1931 களில் பெண்களுக்கு சொத்துக்கள் வைத்து கொள்ள சுத்தமாக உரிமையில்லை.

அந்த காலத்தில் கோவிலில் தாசி தொழில் செய்யும் ஒருவளுக்கு ஒரு வீட்டை எழுதி வைக்க ஒரு செல்வசீமான் விரும்புகிறார். அதற்கு அவளின் மைனர் ஆண் குழந்தைக்கு சொத்தை தானம் எழுதி கொடுக்கிறார்.(மேஜர் பெண்களை விட மைனர் ஆண்குழந்தைகள் சொத்து வைத்துகொள்ள தகுதிபடைத்தவர்கள் என்று சொல்கிறது அன்றைய இந்து சிவில் சட்டம்)மேலும் சட்டத்தில்நேச்சுரல் கார்டியன் என்பது முதலில் தந்தை ந்தை இல்லாத பொழுதும் வெளியூரில் இருக்கும் பொழுதும் நேச்சுரல் கார்டியன் தாயார் ஆகும்.

முறையற்று பிறக்கும் குழந்தைக்கு தாய்தான் நேச்சுரல் கார்டியன் என்று இன்றைய சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த காலத்தில் மைனர் குழந்தைக்கு நேச்சுரல் கார்டியன் என்ற அந்தஸ்து கூட அந்த குழந்தையின் தாயார் அல்ல.

இந்த பத்திரத்தில் நேச்சுரல் கார்டியனாக சிவபாத தாசி தொழில்செய்யும் தவில்காரர் என்ற ஒரு ஆணின் பெயர் போடபட்டு இருக்கிறது.ஆனால் அவரை குழந்தையின் தந்நை என்று எங்கும் குறிப்பிடபடவில்லை.

இந்த கிரய பத்திரம் அக்கால பெண்ணடிமைதனத்தை காட்டும் கால கண்ணாடியாக இருக்கிறது.அன்றைய தேவதாசி ஒழிப்புக்கு பாடுபட்ட தந்தை பெரியார்,டாக்டர் முத்துலட்சுமி,மூவலூர் இராமமிர்தம் அம்மையார் அவர்கள் 1930 ல் இருந்து 40கள் வரை தொடர்ந்து போராடியதால் 1947 ல் தேவதாசி ஒழிப்பு சட்டம் உருவாயிற்று.அதனுடைய பலனால் இன்று பல இந்து பெண்கள் பயன்பெற்று தேவதாசிகள் யாரென்று அடையாளம் தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : \ 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

குறிப்பு: கிரய பத்திரத்தில் சமூக நீதிவரலாறு என்று மாதம் இரண்டு ஹைக்கூ கட்டுரைகள் எழுதவிருக்கிறேன்.பிடித்தவர்கள் எனக்கு Share செய்து ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

 #கிரயபத்திரம் #மைனர் #சட்டம் #சமூகநீதி #வரலாறு #ஹைக்கூ #கட்டுரை #தேவதாசி #ஒழிப்பு  #act #law #minor #artical #social #history #deed #whatsapp #court

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்