நிலமில்லாதவர்கள் அரசின் நில ஒப்படையை பெறுவதற்கான 17 விவரங்கள்!

d4bc298c778caddccd974f13f38eca64

நிலமில்லாதவர்கள் அரசின் நில ஒப்படையை பெறுவதற்கான 17 விவரங்கள்!

1. நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை ஒப்படைத்து ( ASSIGNMENT ) இலவசமாக கொடுப்பது நில ஒப்படை ஆகும். அவை 1. வீட்டுமனை ஒப்படை 2. விவசாய நில ஒப்படை என இரண்டாக பிரிக்கலாம்.

2. வீட்டுமனை ஒப்படையை பொது உபயோகத்திற்கு தேவைபடாத அரசு நிலங்களை மனைகளாக பிரித்து ஒப்படை செய்வதும் (அ) அரசு , தனியார் இடம் கிரைய பேர பேச்சு மூலம் இடத்தை வாங்கி ஒப்படைப்பதும் வீட்டுமனை ஒப்படை ஆகும்.

3. வீட்டுமனை ஒப்படை குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரிலே வழங்கப்பட வேண்டும்.

4. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வீடோ, வீட்டுமனையோ, இல்லாதவர்களுக்குத்தான் இலவச வீட்டுமனை ஒப்படை செய்யப்பட வேண்டும்.

5. கிராம புறத்தில் 3 சென்ட்டும், நகர்ப்புறத்தில் 1 சென்ட்டும், நகரங்களில் 0.5 செண்டும் வழங்கலாம். அல்லது அதற்கு கீழேயும் வீட்டுமனை ஒப்படை வழங்குவார்கள்.

6. வீட்டுமனை ஒப்படை பெற்ற நபர்கள் ஓராண்டுகள் வீடு கட்ட வேண்டும்.

7. பஞ்சாயத்து தீர்மானம் போடப்பட வேண்டும். கிராம கணக்கில் தடையாணை புத்தகத்தில் மேற்படி இடம் பதிவு செய்யப்பட்டு இருக்க கூடாது.

8. ஒப்படை பெற்ற வீட்டுமனையை 10ஆண்டுகளுக்குள் விற்றால் அரசின் அனுமதி பெறுதல் வேண்டும்.

9. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் கூட்டமாக நில ஒப்படை செய்ய கூடாது.

10. நகரங்கள், மாவட்ட தலை நகரங்கள், மாநகரங்கள் எல்லையிலிருந்து 5கி.மீ. க்குள் வீட்டுமனை ஒப்படை செய்தல் கூடாது.

11. விவசாய நில ஒப்படை ஆட்சேபனையற்ற புறம் போக்கு நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு விவசாயம் செய்யும் நோக்கில் ஒப்படைப்பது ஆகும்.
12. நீர்நிலை புறம்போக்கு, சுடுகாடு, புறம்போக்கு போன்றவைகளை ஒப்படை செய்ய கூடாது.

13. விவசாய நில ஒப்படை கொடுபவருக்கு வேறு விவசாய நில அந்த கிராமத்திலோ வேறு கிராமத்திலோ இருக்க கூடாது,

14. ஒப்படை விவசாய நிலம் 3ஏக்கர் புஞ்சை 1 1/2 ஏக்கர் நஞ்சை மிகாமல் இருக்க வேண்டும். இதில் ஒரு நபருக்கு இரண்டும் கிடைத்தால் மேற்படி விகிதசாரத்தின் படி அளவு இருக்க வேண்டும்.

15. போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் / விதவைகள் முன்னாள் இராணுவ வீரர்கள். SC & STமக்கள், பர்மா, இலங்கை அகதிகள், நன்னடைத்தைக்காக விடுபட்ட கைதிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் ஆகியோருக்கு நிலத்தை ஒப்படை செய்தல் வேண்டும்.

16. ஒப்படை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் மூன்று ஆண்டுகள் விவசாயம் செய்யவில்லை என்றாலும், 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தலோ, குத்தகை விட்டாலோ, வேளாண்மை அல்லாத வேறு காரியங்களுக்கு பயன்படுத்தினாலும், அரசு ஒப்படையை இரத்து செய்யலாம்.

17. ஒப்படை நிலங்களை பெற்றவர்கள் விற்கும்போது, அதனை வாங்குபவர்கள் தீர விசாரித்து, முழுமையாக ஒப்படை அதிகாரியை விசாரித்து மேற்படி நிலங்களை வாங்குதல் வேண்டும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#goverment #land #assignment #வீட்டுமனை #பஞ்சாயத்து #குத்தகை  #புறம்போக்கு #விவசாயம் #agriculture #land #house #plot #property #panjayat #lease #kirayam #patta #chitta #praptham

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்