நில அடமான கடன் வாங்குபவர் சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமா !

1. பெரும்பாலும் தொழில் அதிபர்கள் , வியாபாரிகள், அவசர கடன் தேவைக்கு தங்களின் நிலத்தை ஈடாக வைத்து தனி நபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும்போது உருவாக்கபடுகின்ற ஆவணங்களில் அதிக அளவு சட்ட தவறுகள் நடக்கின்றன.




Image result for நில அடமான கடன் வாங்குபவர் சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமா !

2. வாங்கிய கடனுக்கு ஈடாக அடமான கடன் பத்திரம் போடுவதற்கு பதிலாக கிரயம் பத்திரம் எழுதி கொடுக்க கடன் கொடுப்பவர் நிர்பந்திக்க கடன் வாங்குபவரும் அவ்வாறே கடன் பத்திரத்திற்கு பதில் கிரயபத்திரம் எழுதி கொடுக்கிறார். வட்டியும் அசலும் கட்டிவிட்டால் மேற்படி சொத்தை மீண்டும் திரும்ப கிரய பத்திரம் எழுதி கொடுப்பதாக கடன் கொடுப்பவர் உறுதி அளிக்கிறார். ஆனால் நிலைமை எதிர்மாறாக தான் நடக்கிறது. சொல்லுகின்ற வட்டியை கொடுக்க முடியாமல் அந்தோ பரிதாபம் ! சொத்து மூழ்கிதான் போகிறது.

3. சில இடங்களில் கடன் வாங்குபவர் பதிவு செய்யபடாத கடன் பத்திரமும் அதனுடன் பதிவு செய்யப்பட்ட பொதுஅதிகார ஆவணமும் கடன் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்து விடுவர். கடன் திருப்பி செலுத்தபட்டதும் , பவர் பத்திரம் ரத்து செய்து கொள்ளலாம் என்று உறுதி கொடுத்து இருப்பார் கடன் கொடுத்தவர். ஆனால் சிறிது நாட்களில் வட்டி தவறும் பட்சத்தில்; மேற்படி பவரை வைத்து கடன் கொடுத்தவர் தன் நண்பருக்கோ, குடும்பத்தினருக்கோ கிரயபத்திரம் போட்டுவிடுவார் , பின் கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நிற்பார் கடன் வாங்கியவர்.

4. மேற்படி வாங்கிய கடனுக்கு முன் கூடியே கிரய பத்திரமோ , பவர் பத்திரமோ எழுதி கொடுக்கும்போது பத்திரபதிவு அலுவலகத்துக்கு வெளியே பதிவு செய்யபடாமல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமோ, அதாவது வாங்கிய கடனுக்காக தான் கிரயமோ! பவரோ கொடுக்கபடுகிறது. கடன் திரும்ப பெற்றவுடன் அதற்கான பவரை ரத்து செய்து கொள்ளலாம் , கிரயம் என்றால் மறுகிரயம் செய்து கொடுக்கிறேன் என்று எந்தவித ஒப்பந்தமும் எழுதி கொள்ளாமல் கடன் வாங்குகின்றனர் , எதிர்காலத்தில் எந்தவித பிடியும் இல்லாமல் நிலை தடுமாறி நிற்கின்றனர் .

5. சில இடங்களில் கடன் வாங்கியவர் பவர் எழுதி கொடுத்துவிட்டு பிறகு ஒழுங்காக கடனை கட்டிவிட்டு பவரையும் ரத்து செய்து இருப்பார். சரி சொத்து எந்தவித வில்லங்கமும் இல்லை என்று நினைத்து இருப்பார், ஆனால் பவர் வாங்கிய கடன் கொடுத்தவர் வேறு ஒரு மாவட்டத்தில் இந்த பவரை வைத்து வேறு ஒரு நபருக்கு கிரயம் எழுதி கொடுத்து விடுவார்.

6. அப்படி வேறு மாவட்டத்தில்; எழுத முடியும் என்றால் வேறு ஒரு சொத்து அந்த மாவட்டத்தில் இருக்கும் பட்சத்தில் அதனுடன் இந்த சொத்தையும் சேர்த்து கிரயம் செய்யலாம் என்று பதிவு துறை சொல்கிறது. இதனை பயன்படுத்தி கிரயம் செய்து விட்டு ஊமையாக கொஞ்சகாலம் இருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்கள் பிறகு கடன் வாங்கியவர் இறந்து விட்டாலோ அல்லது நோய்வாய் பட்டாலோ பிறகு அவர்கள் மேற்படி Fabricated ஆவணங்களை வைத்து சொத்தில் உரிமை கோரி நீதிமன்றம், காவல்துறை , அரசியல் பிரமுகர்கள் வழியாக வருவார்கள்.

7. எங்கு சொத்து இருக்கிறதோ அந்த சார்பகத்தில் மட்டும் பதிவு செய்தால் இது போன்ற சிக்கல்கள் வராது. ஆனால் வேறு மாவட்டத்தில் வேறு சார்பதிவகத்தில் பத்திரம் பதியுதல் சொத்தில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த நடைமுறையை பதிவுதுறை ஏன் இன்னும் தொடர்கிறது் என யாராவது விளக்கம் தெரிவித்தால் ரொம்ப புண்ணியமாக இருக்கும் .

8. வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக SALE அக்ரிமென்ட்டும் கடன் கொடுத்தவர் பெயரில் போட்டு கொள்கின்றனர். கடன் கட்டவில்லை என்றால் அக்ரீமென்ட் படி கிரைய செய்ய மன அழுத்தம் , புற அழுத்தம் கொடுத்து சொத்து வெளிநபருக்கு கிரயம் செய்யபடுகிறது.

9. சொத்தை வைத்து வாங்கிய கடனுக்கு கடன் பத்திரம் போடுகிறார்களோ இலையோ , கிரயம்,பவர், அக்ரீமென்ட் என்று போட்டு கொண்டு இருக்கிறார்கள் பைனான்சியர்கள்.கொஞ்சமாவது கடன் வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக முடிவு எடுக்கணும்.

10. அடமானம் தான் கொடுத்தார்கள், ஆனால் அது கிரயமாக மாறிவிட்டது என்று சொல்லி 1960 ஆண்டு ஒரு பத்திரம் எனது கவனத்திற்கு வந்தது ஒரு அடமான பத்திரம் , அப்பத்திரம் கையில் எழுதப்பட்டு இருந்தது.

11. அதில் சுவாதீன அடமான கடன் என்று எங்கெல்லாம் வருகிறதோ அதில் எல்லாம் சுத்த விக்கிற பத்திரம் மென்று அடித்து திருத்தப்பட்டு இருக்கிறது, அடமான கடனுக்கான ஷரத்துகள் மேல் அழித்தல் கோடிட்டு அழிக்கப்பட்டு அதில் கிரயத்திற்கான ஷரத்துகள் எழுதப்பட்டு இருந்தது.

12. சரி மேற்படி பத்திரம் பதிவிற்கு முன் பிழை திருத்தும் செய்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன் இப்படி ஒரு பத்திரம் எழுதுவதற்கு புதிய பத்திரமே செய்து விடலாம் என்று நினைத்து கொண்டேன். ஏனென்றால் அவ்வவு அழித்தல் திருத்தல்.

13. அதுசரி இந்த பத்திரம் உண்மைதானா என்று ஊர்ஜிதபடுத்த EC போட்டு பார்க்கலாம், அப்படி பார்த்தால் கிரயமா? அடமானமா? என்று தெரிந்துவிடும்.என நினைத்து

14.சார்பதிவகம் சென்றால் அங்கு மேற்படி 1960 ஆண்டு EC க்கள் உங்களுக்கு கிடைக்காது. அது அதிக டேமேஜ் ஆகி இருக்கிறது என்று அறிவிப்பு சார்பதிவு அலுவலகத்தில் நோட்டீஸ் தொங்குகிறது….. எப்படி?

15. மேற்படி அழித்தல் திருத்தல் பத்திரத்தை வைத்து பல பிளாட்டுகள் கிரய பதிவுகள் நடைபெற்று இருக்கின்றன.கோடிக்கணக்கு மதிப்புகளில் பிளாட்டுகள் பதிவுகள் நடைபெறுகிறது.அந்த சார்பதிவகர் மேற்படி அழித்தல் திருத்தல் பத்திரம் இவ்வளவு உருமாற்றமும், திருத்தலும் ஏன் நடந்து இருகிறது என, சந்தேகபட்டு இருந்தாலே அப்பத்திரங்கள் நடந்து இருக்காது ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

16. ஆனால் இப்பொழுது அடமானம் அல்லது கிரயம் கொடுத்த வாரிசுகள் மேற்படி அழித்தல் திருத்தலின் மெய்தன்மையை ஆராய்ந்து வழக்கு போட முனைப்பு காட்டுகின்றனர்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#land #mortage #loan  #அடமானம் #கடன் #பத்திரம் #சார்பதிவகம் #power #agreement   #Fabricated #court #document  #சொத்து #asset #கிரயம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்