மனை/நிலங்களுக்கு “L” CUT கட்டுமானம் & பென்சிங் ஏன் அவசியம் ?

  1. வீட்டு மனைகளை முதலீட்டுக்காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காககவோ வாங்குகிறீர்கள் என்றால் “L” CUT கட்டுமானம் கட்டாயம் கட்ட வேண்டும்.
64031-8888888888
  1. உயர் தர மனைபிரிவுகள் சுற்றிலும் சுவர் கட்டி ஆர்ச், கேட்டு (GATE) மர காப்புகள்(Tree Gaurd) எல்லாம் கட்டி, மனைபிரிவுகளை அமைத்து இருப்பார்கள் அது போன்ற இடத்திற்கு “L” CUT கட்டுமானம் தேவைபடாது.
c5fb6-777777777777
  1. மத்தியர வர்க்கத்தினருக்காக உருவாக்கப்பட்டும் மனைபிரிவுகள் பெரும்பாலும் 2 அடி உயர கருங்கற்களை வைத்து மனைகளை அத்து கட்டி பிரித்து தனி தனி மனைகளாக உருவாக்கி இருப்பர்.
14181-6666666666


  1. மனைபிரிவுகள் விற்றவுடன் ப்ரோமோட்டர்களின் பராமரிப்பு குறைந்து விடும். அப்பொழுது அங்கு இருக்கும் கற்களை மாடுகள் முட்டி விழுந்து விடும். அல்லது கற்கள் காணாமல் போய்விடும்.திருடபட்டு விடும்.

  1. சிறிது நாட்கள் கழித்து வந்து உங்கள் மனைகளை பார்க்கும் போது அந்த இடத்தில் மனை பிரிவுகள் இருந்த இடமே இருக்காது. மனையை கண்டுபிடிக்கவே சிரமமாகிவிடும்.
59145-5555555


  1. இன்னும் சில ஆண்டுகள் கழித்து சென்றால் மனை கண்டுபிடிக்க சர்வேயரை கொண்டு போய் புதியதாக அளந்து எடுக்க வேண்டிய நிலைமை ஆகிவிடும். அதிலும் சர்வேதவறுகள் & குழப்பங்கள் வந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
  2. அதனால் இப்பொழுது செல்போன் வாங்க போனால் scratch proof க்கு ஒரு கண்ணாடி இழையை வாங்கி ஒட்டி கொள்வோமோ அதுபோல் மனைகள் வாங்கும் போது அதனுடைய எல்லைகள் அழியாமல் இருக்க “L” CUT காட்டுமானம் அவசியம்.
7ce11-444444444444
  1. மனைபிரிவுகளில் நம்மனைகளை ஒட்டி வீடுகள் வரும் என்று நீங்கள் உணரும் போது அல்லது மனை பிரிவில் வீடுகள் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணரும் பட்சத்தில் மேற்படி இடத்தில் கட்டாயம் கம்பி வேலி போட்ட பென்சிங் போட வேண்டும்.
8decc-33333333333

  1. அப்படி போடாமல் இருந்தால் உங்கள் இடத்தில் அரை அடி முதல் 1 அடி வரை நீள வாக்கில் உங்கள் எல்லைகள் ஆக்கிரமிக்கப்படும். ஒரு சதுர அடி ஆயிரக்கணக்கில் இருந்தால் எவ்வளவு இழப்பு என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
c92e9-222222222
  1. பக்கத்து மனையில் வீடு கட்டுபவர்கள், உங்கள் மனையில் செங்கற்கள், ஜல்லி, மணல் கொட்டி வைப்பார்கள்.ஆடு மாடு கட்டுவார்கள், இது போன்ற தேவையற்ற tresspas தடுக்கப்படும்.
a789f-5555555

எனவே சொத்துக்களை வாங்கும் போது “L” CUT கட்டுமானமும் ஃபென்சிங்குக்கும் போட முன்கூட்டியே திட்டமிட்டடு விடுங்கள்

இப்படிக்கு
தொடர்புக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#l-cu pecing #compound #wall #land #plot #real #estate #service #praptham   #வீட்டு #மனை  #scratch #proof #ஆர்ச் #கேட்டு #promoter #border

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்