கிரய பத்திரத்தில் மூலம் தெரியும் வரலாறு-வாட்ஸ்அப் தொடர் -3

3428219f8329be54addbe55c93f7e89b

  காஞ்சிபுரம்,வந்தவாசி,சுங்குவார்சத்திரம் ஏன் கன்னியாகுமரியில் கூட சில பத்திரங்களில் பார்த்து இருக்கிறேன்.அந்த “நாரசசந்து”என்ற வார்த்தையை அப்படி என்றால் என்ன வென்று பலரிடம் விசாரித்தும் யாரும் தகவல்கள் சரியாசொல்லவில்லை.சந்து என்பது மட்டும் தெரிகிறது.பெரும்பாலும் சொத்துவிவரத்தில் நான்கு எல்லைகள் சொல்லும்போதும்,பாகபிரிவினைகளில் 4அடி நாரச சந்திற்கு விடப்படும் என்றும் சொல்லி இருந்ததை கவனித்தேன்.

வார்த்தைக்கான அர்த்தம் தேடி தேடி வந்தவாசியில் ஒரு பெரியவரிடம் கண்டுபிடித்தேன். அந்த காலத்தில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் சூரியன் வராத அதிகாலையில் அங்கு மலம் கழிப்பார்கள்(ஆண்கள் எல்லாம் ஏரி,குளம் பார்த்து கிளம்பிவிடுவார்கள்.)அதனை வெளிச்சம் வருவதற்கு முன்னே ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை தங்கள் கைகளால் ஒரு சட்டியில் அள்ளி தலையில் சுமந்து ஊருக்கு வெளியே போட வேண்டும்.இப்படி ஒரு நடைமுறை 1960வரை நடைமுறையில் இருந்தது.

அந்த சந்தைதான் நாராசசந்து என்றும் அந்த மக்களை நாராபசங்க என்றும் விளித்தார்கள் என்று சொன்னார் அந்த பெரியவர் மேற்கண்ட நடைமுறைகள் இருந்ததற்கான ஆதாரமாகதான் இந்த பழைய பத்திரங்கள் இருக்கின்றன.
மேற்படி நடைமுறைகள் திராவிட இயக்க வருகைக்கு பிறகு கைககளால் மலம் அள்ளுவது தலையால் சுமப்பது எல்லாம் தடை செய்யப்பட்டது
என்பதை உணர்வோம்.

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்