சொத்துக்கள் வாங்கும் போது யார் யாரிடம் ஆலோசனைகள் ?கருத்துகளை பெற வேண்டும்?

பெரும்பாலும், மனைகளோ! சொத்துக்களோ வாங்கும் போது நெருங்கிய நண்பரை நம்பி இருந்துவிட்டேன், யாரிடமும் எந்தவிதமான கருத்துக்களையும் பெறவில்லை.

எனக்கு ரியல் எஸ்டேட்டை பற்றி நிலத்தை பற்றி ஆழமாக தெரியாது.அதனால் அந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னதை கேட்டேன், என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன்.

மேற்படி செயல்கள் முற்றிலும் தவறானது நிறைய பேருடைய கருத்துக்களை கேட்டபிறகு முடிவு நீங்கள் எடுத்தாக இருக்க்க வேண்டும். சொத்தில் தவறுகள் இருந்தாலும் நீங்கள் தெரிந்தே வாங்கி இருக்க வேண்டுமே தவிர தவறு இருப்பது தெரியாமல் வாங்க கூடாது என்ற முடிவை எடுங்கள்!
சொத்துக்களை நீங்கள் வாங்கி இருக்க வேண்டுமே தவிர சொத்துக்கள் உங்களுக்கு விற்கப்பட்டு இருக்க கூடாது என்ற உண்மையை உணர்ந்து செயல்படவேண்டும்.அதற்கு கீழ்கண்ட நபர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெறுதல் வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரியிடம் பேற வேண்டிய கருத்துக்கள்:
ஒரு இடம் வாங்க போகும் போது அந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று மேற்படி வாங்க போகும் சொத்து விவரத்தை சொல்லி சொத்தில் நில உச்ச வரம்பு,நகர நில உச்ச வரம்பு, அரசு நில எடுப்பு, அரசு ஜப்தி இருக்கிறதா! கிராம கணக்கு பயிர் பதிவேட்டில் வேறு யார் பெயராவது இருக்கிறதா? அ. பதிவேட்டில் உள்ள பெயரோடு நாம் வாங்க போகும் சொத்தின் உரிமையாளருக்கு தொடர் இணைப்பு (லிங்க்) சரியாக இருக்கிறதா? அரசு உத்தரவுகள் எதவாது மேற்படி பகுதியில் இருக்கிறதா? என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கருத்துக்களை பெற வேண்டும்.

சர்வேயரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:
இடம் கூட்டுப்பட்டாவில் இருந்தால் பட்டாவை உட்பிரிவு செய்யவும், தனிபட்டா பெறவும், ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா? இடம், உருவ பிழை, அளவு பிழை, உபரி நிலம் என ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா என்று கருத்துக்களை பெற வேண்டும்.

வழக்கறிஞரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:
இடத்தின் ஆவணங்களை கொடுத்து ஆவணங்களில் சட்ட குழப்பங்கள் இருக்கிறதா? ஒரு ஆவணத்துக்கும் இன்னொரு ஆவணத்துக்கும் சொத்து இறங்குவதில் ஏதாவது தடைகள் இருக்கிறதா? என்று கேட்க வேண்டும், உயில், தானம், பாக பிரிவினை பவர் போன்ற பத்திரங்கள் இருந்தால் அதிக சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வழக்கறி்ஞரின் கருத்துக்களை பெற வேண்டும்.

சார்பதிவாளரிடம் பெற வேண்டிய கருத்துக்கள்
வாங்க போகும் சொத்து இருக்கிற சார்பதிவகம் சென்று நிலத்தின் / கட்டிடத்தில் அரசு வழிகாட்டி மதிப்பு! முன் பத்திரங்கள் பிரிவு 47caன் படி முத்திரைதாள்கள் நிலுவையில் இருக்கிறதா! அந்த மேற்படி பகுதிகளில் பத்திர பதிவில் ஏதாவது தடை இருக்கிறதா என்று கருத்துக்கள் பெற வேண்டும்.

அங்கீகார அலுவலகம்
CMDA, DTCP, LPA போன்ற அங்கீகார அமைப்புகளின் அலுவலகத்திற்கு சென்று மனையின்/ கட்டிடத்தின் அங்கீகாரத்தின் மெய் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டிடம் பெற வேண்டிய கருத்துக்கள்:
அந்த பகுதியில் என்ன விலைக்கு இறுதியாக இடம் முடிந்து இருக்கிறது. இதற்கு முன் வாங்க போகும் சொத்துக்களை யாராவது வாங்க முயன்றார்களா? சொத்து விற்பவர் நில வியாபாரியா? சம்சாரியா? முதலீட்டாளாரா? என்று விசாரித்தல் வேண்டும்.

அக்கம் பக்கத்தினர் பெற வேண்டிய கருத்துக்கள்:
சொத்து இருக்கும் இடத்தில் உள்ள அக்கம் பக்கத்தினர் சொத்து விற்பவர் வீட்டுக்கு அருகில் அக்கம் பக்கத்துகாரரிடம் சொத்து விற்பவருக்கு எத்தனை வாரிசுகள் சின்ன வயதிலேயே காணாமல் போன, அல்லது தொலைந்து போனவர்கள் இருக்கிறார்களா? பெண் வாரிசுகள் யாரேனும், வீட்டுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தாரருடன் தொடர்பில் இல்லாமல் தொலை தூரத்தில் இருக்கிறார்களா? சொத்து விற்பவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்! முறையற்று பிறந்த குழந்தைகள் இருக்கிறர்களா? என்பன போன்ற கருத்துகளை பெற வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புரைகள் பற்றிய கருத்துகள்:
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்ட விஷயங்கள் ஆகும். ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை இன்னும் முடிவு கிடைக்காத சிக்கல்கள் சட்டகுழப்பங்கள் பல இருக்கின்றன.அவற்றில் பல தீர்ப்புரைகள் வந்து இருக்கிறது.இன்னும் பல விஷயங்களுக்கு தீர்ப்


புகள் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.மேற்படி அதிக சட்டசிக்கல்கள் வாங்கபோகும் சொத்துக்களில் இருந்தால் மேற்படி நீதீமன்ற தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு சொத்துக்களை வாங்க வேண்டும்.

index

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#மனை #சொத்து #ரியல் #எஸ்டேட் #உச்ச #வரம்பு #அரசு #ஜப்தி #வாரிசு #உயில் #தானம் #பாகபிரிவினை #land #plot #a-register #lawyer #real #estate #goverment #will #gift #partition #property

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்