தமிழகம் முழுவதும் மீண்டும் தூய்மையாக சர்வே செய்யமால் வருவாய் துறை ஆவணங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைக்கு மாற்றுவது அடுத்த தலைமுறையினரை பெருமளவு பாதிக்கும்!

1. தமிழகம் முழுவதும் நிலவரிதிட்ட சர்வே 1985 களில், நஞ்சை, புஞ்சை மானவாரி நிலங்களில் நடந்தது. 1995 களில் கிராம நத்தங்களில் நடந்தது. அதன்பிறகு இப்பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் தற்போதைய நிலையில் நிலத்தின் மீது பல்வேறு ஆவண மாறுதல்கள் நடந்து இருக்கிறது.அதற்கேற்றவாரும் தற்போதைய காலசூழலுக்கு ஏற்றவாறு நில ஆவணங்கள் இல்லை. பழைய நிலவரிதிட்ட சர்வேகளில் பல்வேறு குளறுபடிகளும் இன்னும் முழுமைப்படுத்தபடாத சர்வேக்களும் இருப்பதால் பலவிதமான கஷ்டங்களுக்கு மக்களும், அதிக வேலை பளுவை சுமக்கும் அரசு எந்திரமும் அதன் ஊழியர்களும் அவதிபடுகிறார்கள்.

2. நிலவரிதிட்ட சர்வே செய்யப்பட்டதில் இருக்கும், பெயர் பிழைகள், அளவு பிழைகள் சர்வே எண் பிழைகள் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், விடுபட்ட உரிமையாளர்கள் வாரிசுதாரர்கள் பெயரை சேர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆண்டுதோறும், மனுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. அவர்களும் RDO நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சரி செய்து கொண்டே இருந்கின்றனர். UDR ஆவணங்கள் திருத்தங்கள் இல்லாத ஆவணங்கள் என்றோ, அனைத்து திருத்தங்களும் முடிந்து விட்டது என்றோ இப்பொ ழுதுவரை யாரும் சொல்லமுடியாது.

3. கிராம நத்தம் பகுதிகளில் நடந்த நத்தம் நிலவரி திட்டம் சர்வேக்களில் நத்தம் தோராய பட்டா நடைமுறையும் நத்தம் துய பட்டா நடைமுறையும் என இரண்டு நடைமுறைகள் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 1995ம் ஆண்டு ஆரம்பித்த நத்தம் சர்வே 2018 ஆகியும், இரண்டாவது நடைமுறையான தூய பட்டாவுக்கே இன்னும் பல கிராமங்கள் வரவில்லை.

4. கிராம நத்த சர்வேயிலும், பல அளவு திருத்தங்கள், பெயர் திருத்தங்கள், நத்தத்தில் பொதுவழி, பொது இட சிக்கல்கள், தனியார் புறம்போக்கு என வகைப்பாடுகளில் குளறுபடிகள் என பல இருக்கின்றன. மேற்படி சிக்கல்களை சரி செய்வதற்கு மக்கள் அரசு எந்திரத்துடன் அல்லல் படுகின்றனர்.

5. UDR ஆவணங்களாவது கணினிமயபடுத்தப்பட்டு விட்டது. ஆனால் கிராம நத்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும், கணினிமயப்படுத்தாமலேயே இருக்கின்றன. இதேபோல் நகரநில அளவைகளும், பெருமளவில் கணினிமயப்படுத்தாமலேயே இருக்கிறோம். உலகமே கம்ப்யூட்டர் to ஆன்லைன் சென்ற பிறகும் நம்முடைய நில ஆவணங்கள் கம்ப்யூட்டருக்கே போகாமல் இருப்பது நம்முடைய பின்னோக்கிய இருப்பையே காட்டுகிறது.

6. அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவத்தின் அடிப்படையில் வீட்டுமனை இல்லா மக்களுக்கு இலவசமாக ஒப்படை செய்தது அரசு. இதேபோல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்படைகளும், இன்னும் UDR பட்டாவிலும், FMBயிலும் கிராம படங்களிலும் பல கிராமங்ளில் ஏறாமலேயே இருக்கிறது.

7. நகர உச்சவரம்பு சட்டத்தில் தெரியாமல் வாங்கியவர் (INNOCENT BUYER) நிலங்களை வரன்முறை படுத்தி சட்டமியற்றி் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வரன்முறை படுத்துதல் முடியாமல் இருக்கின்ற நிலைதான் தொடர்கிறது.


8. ஜமீன் சொத்து நிலங்கள,் பஞ்சம நிலங்கள், பூதான நிலங்கள், ஆதிதிராவிடர் ஒப்படை நிலங்கள் கண்டிசன் பட்டா நிலங்களை மீட்க பலவித சட்ட போராட்டங்களை சம்மந்தபட்டவர்கள் நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவைகள் எல்லாம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை.

9. ஜன்ம நிலங்கள் ,இரு மாநில எல்லையோர நிலங்கள் போன்றவற்றில் இன்னும் சர்வேக்களே முடியாமல் இருக்கின்றன. மேலும் போலி ஆவணங்கள், போலி பத்திரங்கள்,ஆள்மாறட்டங்கள் அது சம்மந்தப்பட்ட வழக்குகள் என பல நிலங்கள் சிக்கல்ளில் இருக்கின்றன.

10. விவசாய நிலங்களில் சர்வே பிழைகள் ஏக்கருக்கு 5சென்ட் கூடுதலோ, குறைவோ, என்கிறார்கள்.

(0.1 m.m.என்பதே வெர்னியர் அளவுகோல் பிழை என்று அறிவியல் பாடத்தில் கேள்விபட்டு இருக்கிறோம்.) 5 சென்ட்என்பது 5X437 =2185 சதுர அடி ஆகும்.இவை நவீன உபகரணங்கள் சாட்டிலைட் உதவிகள் புதிய தொழில்நுட்பங்கள் இல்லாதபோது நடந்த சர்வேயின் போது இருக்கும் சர்வே பிழைகள் ஆகும்.

11. வருவாய்த்துறை ஆவணங்கள்தான் அனைத்து துறைகளுக்கும் அடிப்படை ஆவணங்கள் ஆகும். இவை தப்பும் தவறுமாக இருந்தால் இதன் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் அனைத்து பத்திரப்பதிவுதுறை, அங்கீகாரத்துறை, விவசாய துறை ஆவணங்களும் தப்பும் தவறுமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

12. அரிசியில் இருந்து கற்களையும், அழுக்குகளையும் பொறுக்கி எடுக்காமல் அப்படியே உலையில் போடுவது எவ்வளவு ஆபத்தோ அதேபோல் வருவாய்துறை ஆவணகளில் இருக்கும் சிக்கல்களை களையாமல் கம்ப்யூட்டர்ரில் இருந்து ஆன்லைன் ஆக்குவது அடித்தட்டு நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அடுத்த தலைமுறையினர் பிழையாக ஆவணங்களையே சரி என்று ஏற்று கொள்ள கூடிய கட்டாயத்திற்கு வந்து விடுவர்.

13. இவ்வாறு இருக்கும் பல்வேறு சிக்கல்களை சரிபடுத்தாமல் மேனுவல் கம்ப்யூட்ட்ரில் இருந்து ஆன்லைக்கு மாற்றுவது என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்றே கருதப்படும். மேலும் தற்போது பத்திரபதிவு துறை பத்திரபதிவுகளை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதால் மேற்படி வருவாய்துறை ஆன்லைன் ஆவணங்களில் இருக்கின்ற தவறுகளை பதிவு துறையும் அங்கீகரிக்கின்ற சிக்கல்களை உருவாக்கும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#tamilnadu #land #நிலவரிதிட்டம் #சர்வே  #நஞ்சை #புஞ்சை #மானவாரி #வருவாய்துறை #ஆன்லைன்  #போலி #பத்திரம் #udr #fmb #village #map #document #revenue #survey #online #fake #deed

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்