ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை!

 WhatsApp-Image-2018-07-25-at-10.36.13-AM-768x1217
1. ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள்.

2. இதனை அனுபந்த பட்டா, அடைமான பட்டா, இலவச பட்டா, செட்டில்மெண்ட் பட்டா என்று எல்லாம் கூறுவார்கள்.இந்த ஒப்படை ஆவணத்தில் ஒப்படைக்கபடும் இடத்தின் அளவு,வரைபடம்,சர்வே எண்,பயனாளியின் பெயர் இருக்கும்.மேலும் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் அதில் இருக்கும்.

3.மேற்படி ஒப்படை பட்டாவை மட்டும் இப்பொழுதும் வைத்து கொண்டு எங்களுக்கு இன்னும் கம்ப்யூட்டர் பட்டா, யூ.டிஆர் பட்டாவில் பெயர் ஏறவில்லை. கிராம கணக்கில் எங்கள் பெயர் இல்லை என்று அதனை சரி செய்து கொள்ள பலர் விரும்புகின்றனர்.

4. ஒப்படைகளை நன்செய்/புன்செய்/ மானாவாரி நிலங்களிலும் அரசு ஒப்படைகளை வழங்கும், நத்தம் நிலங்களிலும் அரசு வழங்கும் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் கைகளில் இருக்கும் ஒப்படை பட்டா, நத்தத்தில் இருக்கிறதா? நன்செய்/ புன்செய்/ மானாவாரியில் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவும்.

5. நன்செய்/ புன்செய்/ மானவாரியில் 1980க்கு முன் ஒப்படை வாங்கியவர்களுக்கு 1985க்கு நிலவரி திட்ட சர்வே யில் அவர்கள் பெயர் சேர்க்கபட்டு யூ.டிஆர்.யிலும் கிராம.அ. பதிவேட்டிலும் பெரும்பாலும் சேர்க்கபட்டு இருக்கும்.

6. கிராம நத்தத்தில் ஒப்படை வாங்கப்பட்டு இருந்தால் 1995 களில் நத்தம் சர்வே நடந்து இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயர் அதில் ஏற்றப்பட்டு இருக்கும். இன்றுவரை நத்தம் நிலங்கள் கம்ப்யூட்டரில் வாரது. ஆனால், கிராம கணக்கில் நத்தம் பதிவேட்டில் ஏற்றபட்டு இருக்கும்.

7.நத்ததில் உங்கள் ஒப்படை நிலம் இடம் வந்தாலும், 1995 ல் நத்தம் சர்வே நடக்காத இடங்களில் அங்கு நத்தம் கணக்கே இல்லாததால் உங்கள் ஒப்படை ஆவணம் கிராம கணக்கில் ஏற வாய்ப்பு இல்லை.

8.நன்செய்/ புன்செய்/ மானவரி நிலங்கள் 1985 ல் நிலவரி திட்ட சர்வே செய்து புது கிராம கணக்கு உருவாக்கி விட்ட பிறகு உங்ளுக்கு ஒப்படை வழங்கபட்டு இருந்தால் அதன விவரங்கள் கிராம கணக்குகளில் இன்னும் ஏற்றப்படவில்லை.

9.அதேபோல் கிராம நத்தத்தில் இருக்கின்ற ஒப்படை 1995 நத்தம் நிலவரி திட்ட சர்வேக்கு பிறகு உங்களுக்கு கிடைத்து இருந்தாலும் அவையல்லாம் கிராம கணக்கில் இன்னும் ஏற்றப்படவில்லை.

10. ஏன் இவையெல்லாம் கணக்கில் ஏறவில்லை என்று என்னிடம் கேட்க கூடாது. அதனை அரசிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும். எனவே மேற்படி நில ஒப்படை ஆவணங்கள் எல்லாம் மக்கள் கைகளில் மட்டுமே சுற்றி வருகிறது. அதனை கட்டுபடுத்தும் கோப்புகள் எதுவும், கிராம கணக்கில் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டாலே ஒப்படை பட்டாக்கள் பற்றி ஒரு புரிதலுக்கு வந்துவிடுவீர்கள்.

11. நிறைய நண்பர்கள் இந்த ஒப்படை பட்டா ஏன் கணக்கில் வரவில்லை என்று மணியக்காரிடம் (VAO) சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள். அல்லது யாரவது ஒரு ஏஜென்டிடம், கம்ப்யூட்டரில் பட்டாவாக மாற்ற பணம் கொடுத்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கேறேன்.

12. ஒப்படை பட்டா நிலத்தை வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி யூடிஆர் ரில் ஏறி இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். யூடிஆர் ரில் ஏற வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதற்கேற்றவாறு கிரைய பத்திரத்தில் ஷரத்துகள் வைத்து எழுத வேண்டும்.

13. ஒப்படை பட்டாக்கள் யூடிஆர் இல் ஏற அடுத்த நிலவரிதிட்ட சர்வே வரை நாம் பொறுத்து இருக்க வேண்டும். நத்தமாக இருந்தால் அடுத்த நத்தம் நிலவரி திட்ட சர்வே வரை காத்து இருக்க வேண்டு. அல்லது உங்கள் பகுதிகளில் சர்வேக்கள் நடக்கும் வரை யாவது அமைதியாக இருக்க வேண்டும்.தற்போதைக்கு வேறு வழியில்லை.

14.பகுதிவாழ் மக்கள் எல்லாம் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர்,அமைச்சர் பெருமக்களை சந்தித்து சர்வே செய்து பட்டா வழங்க மனு செய்யும்போது சில நேரங்களில் ஒப்படை பட்டாக்கள் யூடீஆர் பட்டாவாக மாற வாய்ப்பு இருக்கிறது.

15.சர்வே செய்வது அரசு பாலிசி முடிவு .அரசு முடிவுகள் எடுக்கும்வரை ஒப்படை பட்டா நிலைமை இப்படியேதான் இருக்கும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#a.pathivedu#adangal #authority #BDA #chennai #DMDA #DTCP #FMB #investment #monthlyinstallmentplot #plot #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்#பசலி

Comments

  1. உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  2. இந்தியா சுதந்திரம்
    அடைந்து எழுபத்தி ஐந்து
    வருடங்கள் ஆன பிறகும்
    நில ஆவணங்கள் சரியாக
    வருவாய் துறையில் கையாள
    படவில்லை. அதாவது வருவாய் துறை பதிவுகள்
    சரியாக முழுமையாக
    பதிவுகள் முறையாக
    பதிவுகள் இல்லாததால்
    கிராமங்களில் பெரும்
    குழப்பங்களும் பட்டங்களும்
    நிலவுவது டன் பொது
    அமைதிக்கு பங்கம்
    ஏற்பட்டு காவல்துறையும்
    ஒரு தலைபட்சமாக அல்லது
    கட்டப்பஞ்சாயத்து வழியாக
    பணம் கொடுப்பவர்களுக்கு
    சாதகமாக முடிவு ஏற்படுகிறது.
    இது சரியான தீர்வு இல்லை
    என்பதால் சில இடங்களில்
    கொலை ஏற்பட்டு காவல்துறை
    தர்மசங்கடமான சூழநிலையில் பாதிக்கப்பட்ட வர்கள் வாழ்க்கையே
    பாழாகிறது.






    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்