மும்பை- கன்னெறி குகைகளும்! பௌத்த நன்னெறி வகைகளும்!

11701042_1459578977695562_8604810149221552223_n

மாதந்தோறும் பழங்கால நினைவு சின்னங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்வதை பழக்கமாக வைத்திருக்கும் நான்….
மும்பையில் பணி நிமித்தமாக பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்ததில் ஒருநாள் ஆய்விற்கு என ஒதுக்கி இருந்தேன். வெறும் புத்தகங்களிலும் இனனையதளங்களிலும் மட்டும் படித்து கொண்டு இருப்பதை காட்டிலும், நேரில் சென்று பார்வை இடுவது அறிவை விசாலமாக்கும், ஞானத்தை உணர வைக்கும் என்பதில் அதிக நம்பிக்கை உடையவன்.

இந்தமுறை என்னுடன் இனிய நண்பர்களும்! அன்பாக நடந்து கொள்ளுவது என்பதை வாழ்க்கையாகவே ஆக்கிக்கொண்ட முரளி & கொட்டாளம் ஆகிய இருவரும் என்னுடன் வந்து இருந்தனர்.
11205005_1419586138361513_1169899934487661538_n

நண்பன் கொட்டாளம் நான் நண்பன் முரளி
நாங்கள் செம்பூரில் இருந்து இரயிலில் கிளம்பினோம். இரண்டு இரயில் மாறி போரிவீல்லி வந்து இறங்கினோம்! பின்பு ஆட்டோ பிடித்து சஞ்சய்காந்தி உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்தோம்! நுழைவு கட்டணம் எடுத்து உள்ளே வந்தால் 7 கி.மீ. தொலைவில் கன்னெறி குகைகள் இருக்கிறது எனவும் அதற்கு ஆம்னி வேன்கள் ஆட்களை கூட்டி சென்று கூட்டி வருவதை அறிந்தோம். நாங்கள் மூவரும் ஒரு ஆம்னி காரில் ஏறி கன்னெறி குகைககளில் இறங்கினோம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக சைவ, வைணவ, பெளத்த, சமண மலைகள், குகைகள் என அழைந்து திரிந்து இருக்கிறேன் .அதை போல் தான் இதுவும் இருக்கும் என நான் நினைத்து இருந்தேன்! உள்ளே நுழைந்தபிறகு தான் நான் உணர்ந்தேன்.

நான் இப்பொழுது சாதாரண இடத்திற்கு வந்து இருக்கவில்லை! ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முந்திய ஒரு மகாயான பெளத்த பல்கலை கழகத்திற்கு வந்து இருக்கிறேன் என்று உணர்ந்தேன். தமிழகத்தில் நாகப்பட்டினமும், மதுரையும், காஞ்சிபுரமும் பெளத்த கோவில்களும், பள்ளியம்பதிகளும் இருந்தன என்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் கன்னெறி குகையில் இருக்கும் பெரும் அடையளங்கள் போல் தமிழகத்தில் மிச்சமீதி அடையாளங்கள் கூட காணப்படமுடியவில்லை. மொத்தம் 109 குகைகள் என்றார்கள் எப்படியும் அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதே நேரம் நிதானமாக அனைத்தையும் முழுமையாகப் பார்த்து இரசிக்க வேண்டும், நுனிப்புல் மேய்ந்து விடக் கூடாது என முடிவு எடுத்தேன். ஒரே ஒரு சிக்கல் மாலை 5 மணிக்குள் வெளியேறி விட வேண்டும் என்பதை தொல்பொருள் துறை காவலர்கள் சொல்லி தான் உள்ளே அனுப்பினரர்கள்.

ஆரம்பமே முதல் நான்கு குகைகளும் ஒரு கல்லுரியை ஞாபக மூட்டின, பரந்த கருகல் மைதானம், இரண்டு அடுக்கு மாளிகைபோல் மலையை குடைந்து கோயிலை அமைத்து இருந்தனர். கருங்கல் மைதானத்தின் மத்தில் ஒரு ஸ்நூபி இருந்ததற்கான அடையாளம் இருந்தது, அதனை தற்போது தொல்பொருள் துறையினர் காத்து வருகின்றனர்.

மலையை குடைந்து ஒரு (Conference Hall) சொற்பொழிவு அரங்கத்தை அமைத்து இருந்தனர், அதனுடைய வாயில் கோட்டை வாயிலை நினைவுபடுத்தின. அதனுள்ளே நுழையும் முன், வலப்புறமும். இடப்புறமும் 50 அடி உயரமுள்ள கௌதம புத்தர் நிற்பதுபோல் இரண்டு மிகப்பெரிய சிற்பம், அமைத்து இருந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

ஒரு குகையில் தவம் நோற்கும் முனிவர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிடும் படியான மிகப்பெரிய நீளமான 100 அடிக்கும் மேலான இரண்டு கருங்கல் மேசைகளை அமைத்து இருந்தனர். எல்லா குகைகளிலும், தண்ணீர் தேங்க வைப்பதற்கு தொட்டி, அல்லது கிணறு போல் கருங்கல்லாலே டேங்காக கட்டி இருந்தனர்.

மழைநீர் மலையில் விழுந்தால் அதனை சரியாக தண்ணீர் தொட்டியில் கொண்டு வந்து சேர்க்க மலைப்பாதையில் தண்ணீர் செல்லும் பாதைகளை அமைத்து இருந்ததை பார்க்கும் பொழுது, மழைநீர் சேகரிப்பு என்று நாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருப்பதை அவர்கள் அப்பொழுதே செய்து விட்டார்கள் என்று நினைக்கும் பொழுதும் நீர் மேலாண்மையில் (Water Management) அப்பொழுதே அவர்கள் செலுத்திய அக்கறையை என்னால் உணரமுடிந்தது.

107 குகைகளுக்கும், நீர் சேர்த்து வைக்க டேங்குகள், தொட்டிகள், அருகே அருகேயே அமைத்து இருந்தனர், துறவிகள், தியானம் செய்து தியான அறைகள் செவ்வகமாக அமைக்கப்பட்டுள்ளது. சொல்லும் ஒவ்வொரு மந்திரங்களும், எதிரோளிக்கும்படியாக தியான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான சுவர்களில் புத்தர், போதிசத்துவர்கள், யட்சிகள், யட்சன்கள், நாகர்கள், தாமரைபூக்கள் என பிம்பங்கள் செதுக்கப்படுள்ளன. மேற்படி தியான அறையில் 1/2 மணிநேரம் நாங்கள் மூவரும் தியானம் செய்தோம்.
ஒரு 34ஆம் குகையில் புத்தர் திருவளுலம் சிலையாக வடித்தது கருவறை போல் அமைத்து வெளிப்பிரகாரம் வைத்து கோயில் போலவே உருவக்கி உள்ளனர். அதன் வெளிப்பிரகார மேற் கூரையில் புத்தரின் உருவங்கள் வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் இன்னும் முழுமையாக முடிக்கபடாமல் இருக்கின்றனர்.

ஒரு குகைக்கும் இன்னொரு குகைக்கும் செல்ல மலைகளிலேயே அழகான பிடிகளை வெட்டி வைத்துள்ளனர். யார் வேண்டுமானாலும் எல்லா குகைக்கும் சென்று வருமாறு மலையிலேயே பாதைகளையும் படிக்கட்டுக்களையும் அமைத்துள்ளனர்.

சாந்த சொருப புத்தர் சிலைகள் அன்பு ததும்பும் போதிசத்துவ சிலைகள் அவபோகிதீஸ்வரர் சிலைகள், 2 அடி முதல் 50 அடி உயரம் வரை இருக்கின்றனர் அவற்றை பார்க்கும்போழுது நாம் அக்காலத்திற்க்கு சென்ற உணர்வும், ஏதோ ஒரு பிறப்பால் இங்கு வந்துள்ளேன் என்ற உணர்வும் என்னுள் உதித்தன.

அங்கு இருக்கும் தியான அறைகளில் அமர்ந்து தியானம் செய்த பொழுது புத்தரின் ஆசிர் எனக்கு கிடைத்தது போலவும், இதையெல்லாம் பார்க்க நான் ஆசிர்வதிக்கப்பட்டது போலவும் உணர்ந்தேன்.

என்னை கொண்டு சென்ற முரளி & கொட்டாளம் அவர்களுக்கு நன்றி!


தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#மும்பை #கன்னெறி #குகை #போரிவீல்லி #புத்தர் #meditation #kovil #kannagi #train #travel #friens #toor #artical

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்