பக்கத்து சொத்துக்காரருடன்- 14 வகையான வேலி தகராறுகள்!

1. பக்கத்து வீட்டுக்காரர் & பக்கத்து நிலத்துக்காரால் தவிர்க்க முடியாத சர்ச்சைதான் இந்த வேலி தகராறு, பக்கத்து சொத்துக்காரர் கிழமேலோ (அ) தென்வடலோ சொத்தின் நான்கு திசையில் ஏதாவது ஒரு திசையில் உங்கள் சொத்தோடு உரசி கொண்டு நின்று கொண்டு தலைவலி உண்டாக்குவார்.

2. பக்கத்து சொத்துக்காரருடன் உங்களுடைய எல்லையை காணிக்கல் மூலமாகவோ, முள்வேலி மூலமாகவோ, அடையாள நெடு மரங்கள் மூலமாகவோ, சுவர் மூலமாகவோ, பிரித்து கொண்டு நிற்பர்.

5b47c7f12256aab3bb2218d8d85fa484

3.வயற்காடுகளில், உழுபவருக்கு வரப்பு விரிந்து கொண்டே போகும், உழாது வைத்து இருப்பவருக்கு தன் இடம் குறைந்து கொண்டே வரும். மேலும்டிராக்டரில் உழும்போது நான்கு மூலையில் டிராக்டர் திரும்பும் போது பக்கத்து இடத்தின் மூலையும் சேர்த்து டிராக்டர் உழுது அடுத்தவர் சொத்துரிமையில் நுழைவது.

4. வயற்காடுகளில் பொதுப்பாதை, பொதுகிணறு, கிணறு சுற்றி இருக்கும் காடுகளில், தென்னை மரங்கள், செடிகள் என நட்டு வைத்து பிறரின் சொத்துரிமையில் கை வைப்பது.

5. பூர்வீக சொத்துக்களில் பக்கத்து பங்காளிகளின் பெயரில் பட்டா ஏறிவிடும். அல்லது அதிக அளவு அவர்களுக்கும், குறைந்த பங்கு உங்களுக்கும் ஏறிவிடுகின்றதால் ஏற்படுகின்ற சர்ச்சைகள்.

6. வீட்டு மனைகளில் பக்கத்து வீட்டுமனைக்காரர்கள் வேலி, சுவர் கட்டும்போது அரை அடி பக்கத்து எல்லையில் ஓட்ட கட்டுவது மூலம் ஏற்படும் சர்ச்சைகள்.

7. சுற்றி வீடுகள் வரும் வரை தன் மனைக்கு முள்வேலியோ, சுவரோ, போடாமல், உங்கள் இடங்கள் பராமரிக்காமல் போனாலும் உங்கள் சொத்துரிமையில் பக்கத்து சொத்துகாரர் இடைஞ்சலாகவே இருப்பர்.
8. வேலி கட்டும் போது காணிகல்லை ஒட்டி இருவரும் கொஞ்சம் கூட இடம் விடாமல் சுவர் கட்டும் போது நிச்சயம் தகராறுகள் வரும்.

9. ஒருவர் காணிகல்லில் இருந்து அரை அடி இடைவெளியும் மற்றோருவர் 1 அடி இடைவெளியும் விடும் பொழுது, மொத்தம் 1.1/2 இடைவெளியில் இரண்டு வீடும் இருக்கும், பிறகு ஒரு வீடு இன்னொருவர் கைக்கு கிரயமாக மாறும் போது இன்னொரு பழைய நபர் இது பொதுவாக இரண்டு சுவர்களை பராமரிக்க (அ) வெள்ளையடிக்க இரண்டு நபர்களால் ¾ அடி, ¾ அடி என இருவராலும் விடப்பட்டது என புதிய விளக்கத்தை சொல்லும் போது சச்சரவுகள் கிளம்பும்,
10. ஒருவர் இடைவெளியே இல்லாமல் கட்டிவிட்டு பக்கத்து இடைவெளியில் வீட்டு கழிவு நீர், குப்பைகளை கொட்டி விடும் இடமாக பயன்படுத்துவர்.

11. ஒருவர் இடைவெளி இல்லாமல் கட்டிவிட்டு வீடு புதுப்பித்து கட்டும்போது பக்கத்து இடத்தையும் ஆக்கிரமித்து கட்ட முயற்சிப்பர்.
12. இரு தரப்பும் 1.5 அடி விட்டு வீடு கட்டும் பொழுது, 3 அ
டி சந்தாக அது இருக்கும். அவற்றை இரு தரப்பு அல்லாத மூன்றாம் நபர் வழியாக பயன்படுத்துவர்.

13. இரு தரப்புக்குமான பொது இடம் சமந்தப்பட்ட அக்ரிமெண்டுகளை போலியாக தயாரித்து, திருத்தி மாற்றி பொது வழிளைஆக்கிரமிக்க முயற்சிகள் செய்வர்.

14. கிரையப் பத்திரத்தில் நீள அகல அளவுகளை தெளிவாக எழுதவில்லை என்றாலும் சந்து, பொது வழி, போன்றவற்றின் பத்திரத்தை தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும் பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை என்றாலும் அதன் மூலம் சச்சரவுகள் எழும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்து #way #issue #compount  #வேலி #கிரையப்பத்திரம் #அக்ரிமெண்டு #house #agreement  #deed #asset

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்