வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் -3)

நிர்வாகவியல் – பல்வேறு கோட்பாடுகள்:



895c6afe0b595af7f8f9875e1c51ca42


தலைசிறந்த மேலாளர் அறிந்த 10 விசயங்கள்:
1.பிறருடைய முன்னேற்றத்திற்காக உதவுதல்,
2.எல்லோரையும் ஒரே நிலையில் பார்த்திருத்தல்,
3.அறிவுப்பூர்வமான நடத்தையை விட உணர்வுப் பூர்வமான நடத்தையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுதல்,
4.மக்கள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களையும், செயல்பாடுகளையுமே விரும்புவர்,
5.பயிற்றுவித்தல் ஒரு நுண்ணாய்வுத்திறன்,
6.தொழிலாளியின் தனித்துவத்தை மட்டுமே பார்த்தல்,
7.பொருட்படுத்தாது விடுவதனால் முரண்பாடுகள் செம்மையாகாது,
8.உணர்வுப் பூர்வமாக உற்சாகப்படுத்துதல் மிகவும் சக்தி வாய்ந்தது,
9.மாற்றங்களை கையாளுவது நிரந்தர பொறுப்பாகிறது,
10.வழிகாட்டிகளே பிறரின் தூண்டுகோள்.
அமைதியான மனநிலை வற 10 கோட்பாடுகள்:-
1.மற்றவர்களின் தேவையின்றி அவர்களது விசயத்தில் தலையிடாமை,
2.மறத்தலும், மன்னித்தலும்,
3.நமது அங்கீகாரத்திற்காக யாசியாமை,
4.பொறாமைப்படாதிருத்தல்,
5.சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறிக் கொள்ளுதல்,
6.நடக்காது என்ற செயலில் பொறுமையுடன் செயல்படுதல்,
7.மெல்ல முடிகின்ற அளவுக்குதான் கடிக்கவேண்டும்,
8.தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுதல்,
9.மனதிற்கு ஓய்வு அளிக்காதிருத்தல் ,
10.காரியத்தை தள்ளிப்போட்டு பின் வருந்தாதிருத்தல்.

தன்னம்பிக்கையாக வாழ 20 வழிமுறைகள்:-
1.பிறருடன் ஒப்பிடாதிருத்தல்,
2.தன்னுள் உள்ள விமர்சகரை அடக்குதல்,
3.மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுதல்,
4.நற்சிந்தனையுடன் அனுசரணையாக உள்ளவரிடம் நட்பாயிருத்தல்,
5.மனதிற்கு பிடித்த வேலையில் ஈடுபடுதல்,
6.உண்மையாயிருத்தல்,
7.பிறருக்கும் உனக்கும் நேர்முக உறுதியுடன் பேசுதல்,
8.நடந்து முடிந்த விசயங்களில் தன்னைப் பற்றி குறை கூறுவதை நிறுத்துதல்,
9.தடைகளை தவிர்த்து வெற்றிக் கொண்டவற்றைப் பட்டியலிடுதல்,
10.நற்பண்புகளை பட்டியலிடுதல்,
11.குறைகளில் மறைந்திருக்கும் நிறைகளை கண்டுபிடித்தல்,
12.நிறைகளில் உள்ள உறுதிப்பாட்டை கண்டறிதல்,
13.பொருட்படுத்தாதிருத்தல்,
14.வாழ்த்துரைகளை நன்றியுடன் வரவேற்றல் ,
15.அதிகம் கொடுத்துப் பழகுதல்,
16.நல்ல தலைவராக இருத்தல்,
17. சிறிய செயலை எடுத்து அதை வெற்றிகரமாக முடித்தல் ,
18.வெற்றி தோல்விகளை வகைப்படுத்திப் பார்த்தல்,
19.பயிற்சிகளை மேற்கொள்ளுதல்,
20.செயல்படுத்துதல்.
தனி நபர் மாற்றத்திற்கான வழிகள்:-
1.நம்மை மாற்றிக் கொள்ள கற்றுக் கொள்ளுதல்,
2.மாற்றங்களை நிர்ணயம் செய்தல்,
3.எதையும் புதிதாக தொடங்குவது போல ஆரம்பித்தல்,
4.நம்மையே ஆராய்ந்து கொள்ளுதல்,
5.சுயமரியாதையுடன் இருத்தல்,
6.அடக்கமாயிருத்தல்,
7.வெற்றிக்கு முன் தோல்வியை சந்திக்க தயாராயிருத்தல்.
அனைவருடன் கூடி தரமான உறவுமுறைகளை வேலையில் ஏற்படுத்துதல்:-
1.ஒரு பிரச்சினையை முடிவுகளுக்கான யோசனையுடன் அணுகுதல்,
2. குற்றம் சாட்டுதல் போல் நடவாமை,
3.உங்களது சொல்லும் செயலும் மதிப்பீட்டிற்குரியது,
4.மேலாளர், சக ஊழியர்கள் மற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் கண்மூடித்தனமாக நடந்து கொள்ளாதிருத்தல்,
5.கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்,
6.திட்டமிடுதல், பங்களித்தல், வெற்றிகரமாக செய்து முடித்ததற்கான பலன்களை பகிர்ந்து கொள்ளுதல்,
7.தொழிலாளர்கள் தங்களது சிறப்புகளை புரிந்து கொள்ள செய்தல்.

முடிவு எடுத்தல்:-
1.முடிவு எதைப்பற்றியது என தெரிந்து கொள்ளுதல்,
2.அதற்கேற்ற செய்திகளை சேகரித்தல்,
3.மாற்றுவழிகளை தெரிந்து கொள்ளுதல்,
4.சாத்தியக்கூறுகளை அளவிடுதல்,
5.மாற்று வழிகளில் தேவையானவற்றை தேர்வு செய்தல்,
6.நடவடிக்கைகளை எடுத்தல் ,
7.முடிவுகளையும், விளைவுகளையும் ஆராய்தல்.
வேலை செய்யும் இடத்தில் நன்னடத்தைக்கான பத்துவழிகள்:-
1.ஒரு மேலாளர் அல்லது தலைவர் கடின உழைப்பு, பொறுப்பு ஆகியவற்றை அந்த நிறுவனத்திற்கு ஒப்புவிக்க வேண்டும்,
2.ஒரு தலைவர் தலைமை பொறுப்புற்குகேற்ப தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்,
3.ஒரு தலைவன் நிறுவனத்தின் இலக்கை புரிந்துகொண்டு மற்றவரை அதன்வழி நடத்த வேண்டும்,
4. நிறுவனத்தில் இலக்கை அவரவர் வேலைக்கு ஏற்ப தெளிவாக உணர்த்த வேண்டும்,
5.தொழிலாளர்கள் வெற்றிகரமாக ஒரு செயலை செய்து முடிப்பதற்கு தலைவர் தனது எதிர்பார்ப்பையும், செய்யும் போது தேவைப்படும் மாற்றத்தையும் தெளிவாக சொல்லவேண்டும்,
6.வெற்றிக்கான சூழலை அந்தந்த தொழிலாளிக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்,
7.ஒரு தலைவர் ஊக்குவிப்பதன் மூலம் நடக்காதவற்றைக் கூட நிகழ்த்த செய்யலாம்,
8.ஒரு தலைவர் தனது தொழிலாளர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்,
9.தனது செயல்கள் நல்லவையோ, தீயவையோ அது வேலை செய்யுமிடத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு தலைவர் உணர வேண்டும்,
10.வேலை செய்யுமிடத்தில் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களால் பிறரது மன உறுதியும் பாதிக்கப்படும் என்பதை ஒரு தலைவர் உணரவேண்டும்,

மாற்றத்தின் ஏழுநிலைகள்:-
1.திறன் செய்து – செய்வன திருந்த செய்தல்,
2.சரியான விசயங்களை – செயல்களை செய்தல்,
3.மேம்படுத்துவது – செயல்களை மேம்படுத்தி செய்தல்,
4.வெட்டுதல் – தேவையில்லாத செயல்களை விளக்குதல்,
5.நகல் – மக்கள் அல்லது அடுத்தவர்கள் அல்லது மற்றவர்கள் செய்யும் செயல்களை பார்த்து செய்தல்,
6.வெவ்வேறு அல்லது மாறுபடுதல் – வேறு எவரும் செய்யாத செயல்களைச் செய்தல்,
7.சாத்தியமற்றது – செய்ய முடியாத செயல்களைச் செய்தல்.

ஒரேநாளில் வெற்றி:-
1.வெற்றிகரமான மக்கள் எதிர்மறை நிகழ்வுகளை தங்களது மனதை மாற்ற விட மாட்டார்கள்,
2.மற்றவர்கள் மத்தியில் சாதகமான சூழ்நிலை அமைக்கிறார்கள்,
3.அவர்கள் ஒவ்வொரு செயலிலும் வாய்ப்புகளை அமைத்துக் கொள்கிறார்கள்,
4.எந்த ஒரு புதிய செயலையும் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படும் திறன் கொண்டவர்கள்,
5.அவர்கள் மற்றவர்களை குறை சொல்ல மாட்டார்கள்,
6.அவர்கள் எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கத்துடன்செயல்படுவார்கள்,
7.வெற்றிகரமான மக்கள், மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் கொடுத்து அவர்களை மகிழ்விக்கும் எண்ணம் படைத்தவர்கள்,
8.மக்களிடம் அக்கறை செலுத்துபவர்கள்,
9.அவர்கள் கூர்மையாக கவனிக்கும் திறன் படைத்தவர்கள்,
10.மற்றவர்களை முக்கியமாக உணர செய்கிறார்கள்,
11.அவர்கள் யோசித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள்,
12.தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையவர்கள்,
13.அவர்கள் தங்களின் வெற்றிகரமான பாதையை பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்கள்,
14.தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை முற்றிலும் நம்புவர்கள்,
15. வெற்றிகரமான மக்கள் எப்பொழுதும் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
வெற்றிவற இலக்குகளை அமைப்பது எப்படி?
1.இலக்குகளை எழுதி வைக்கவும்,
2.தெளிவான இலக்குகளை தேர்வு செய்யவும்,
3.நியாயமான மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளை அமைக்கவும்,
4.நெகிழ்வான இலக்குகளை அமைக்கவும்,
5.குறிப்பிட்ட இலக்குகளை அமைக்கவும்,
6.திட்ட நடவடிக்கையை உணர்ந்து கொள்ளவும்,
7.படிநிலைகளை பட்டியலாக உருவாக்க வேண்டும்,
8.செயல்திறனுடன் இருக்க வேண்டும்,
9.ஆலோசனைகளை கேட்டும் படித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
10.மாற்றுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளவும்,
11.அவ்வப்போது உங்கள் இலக்குகளை ஆராயவும்,
12.இலக்குகளை தொடர்ந்து உறுதிமொழியாக எண்ண வேண்டும்,
13.இலக்குகளுக்கு தோற்றம் அளிக்க வேண்டும்,
14.இலக்குகளை அடைய ஆர்வத்துடன் செயல்படவும்.

தலைமைத்துவ திறமைகள்:-
1.தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுதல்,
2.திறன்பட முடிவுகளை எடுத்தல்,
3.துணிச்சலுடன் இடர்களை சந்தித்தல்,
4. மற்றவர்களை ஊக்குவித்தல்,
5.அணிகளை உருவாக்குதல் (Team Formation)
6.சுயஅறிவுத் திறனுடன் செயலாற்றுதல்,
7.மக்களுடன் ஒருமைப்பாட்டை நம்பகமான முறையில் உருவாக்குதல்,
8.வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளும் எண்ணம்,
9.திறம்பட தொடர்பு கொள்ளுதல்,
10. மற்றவர்கள் வெற்றிபெற உதவுதல்.

தன்னம்பிக்கையும் 15 படிகளும்:-
1.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுதல் கூடாது,
2.தாழ்வு மனப்பான்மையை அகற்றவும்,
3.மறப்போம், மன்னிப்போம்,
4.நேர்மறை ஆதரவான மக்களிடம் பழகுதல்,
5. எவ்வித வேலையிலும் ஈடுபாட்டுடன் செயல்படுதல்,
6.மனதிற்கு உண்மையாக நடந்து கொள்ளுதல்,
7.மற்றவர்களுடன் உறுதியாகவும் நம்பிக்கையுடன் உரையாடுதல்,
8.உங்களின் கடந்தகால தவறுகளை சுட்டிக்காட்டுவதை தவிர்க்க,
9.உங்களின் தனிப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிடுதல்,
10.உங்களின் சாதனைகளைப் பட்டியலிடுதல்,
11.பலவீனங்களில் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வர செய்தல்,
12.உங்களின் பலத்தை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளுதல்,
13.உங்களின் பலவீனங்களை தவிர்க்க முயற்சி செய்தல்,
14.அனைத்துப் பாராட்டுகளையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுதல்,
15.அதிகமாக கொடுத்து உதவும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.

ஒரு திறமையான அணியை உருவாக்க:-

1.Vision – தொலை நோக்குப் பார்வை,
2. Commitment – அர்ப்பணிப்பு,
3.Trust – நம்பிக்கை,
4. Inclusion – சேர்க்கை, அணியினரின் திறன்களை வெளிப்படுத்துதல்,
5.Help Exchange – இலக்கின அடைய சீரான யுத்த தந்திரத்தை பயன்படுத்துதல்.

வெற்றிகரமான கால மேலாண்மை:-
1.உங்கள் இலக்குகளை தெளிவுபட எழுதவும், உங்கள் முன்னுரிமைகளை அமைத்துக் கொள்ளவும்,
2.நோக்கங்களை விட நடவடிக்கைகளின் மேல் அதிகம் கவனம் செலுத்தவும்,
3.ஒவ்வொரு நாளுக்கும் குறைந்த பட்சம் ஒரு முக்கிய நோக்கத்தை அமைக்க வேண்டும்,
4. பயன்படுத்திய நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்,
5. உங்கள் இலக்குகளின் அடிப்படையில் எல்லா செயல்களையும் ஆராய வேண்டும்,
6.நேரத்தை வீணடித்து செய்யும் செயல்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்,
7.ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கினை அடைய திட்டமிட வேண்டும். அவ்வார இறுதியில் அத்திட்டத்தை அடைய முடிந்ததா என்று ஆராய வேண்டும்,
8.உங்கள் பணி நாளின் முதல் மணி நேரம் உற்பத்தியாக இருக்க,
9.ஒவ்வொரு பணியும் நேர வரம்புடன் அமைக்கப்பட வேண்டும்,
10.மிகவும் முக்கியமான பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிட வேண்டும்,
11.ஆரம்பிக்கும் பணியை முடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்,
12.கால மேலாண்மையை உருவாக்க வேண்டும்,
13.உங்களுக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்,
14.நேரத்தின் தனிப்பட்ட தத்துவத்தை உருவாக்கவும்

நீங்களும் உங்கள் அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட சில குறிப்புகள்:-
1. பொதுவான குறிக்கோளை குறிப்பிடவும்,
2. பணிகளை பட்டியலிடவும்,
3. .சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கவும்,
4. அனைத்து பணிகளுக்கும் பொறுப்பின்மை அமைக்கவும்,
5. அனைத்து பணிகளுக்கும் கால வரிசையை உருவாக்கவும்,
6. அனைத்து மின்னணுக் கோப்புகளுக்கும் ஒரு மத்திய தொகுப்பகத்தை அமைக்கவும்,
7. அனைத்து தகவல் தொடர்புகளுக்கும் ஒரு மத்திய காப்பத்தை பராமரிக்கவும்,
8. அனைவருக்கும் அனைத்துக் குழுக் கூட்டங்களையும் தெரிவிக்கவும்,
9. காலக்கெடுக்கள் நெருங்கும்போது நினைவூட்டிகளை அனுப்பவும்,
10. பணிகள் முடிந்ததும் உறுதிச் சான்றிதழ்களை அனுப்பவும்.
வாதங்கள் விவாதங்களாக மாறாமல்வைத்திருக்வேண்டும்:-
1. விவாதம் செய்யாதீர்கள்,
2. உடன்பாட்டு பகுதிகளை கண்டறிக,
3. மற்றவர்களின் ஆர்வத்தில் கவனம் செலுத்துக, நிலைகளில் அல்ல,
4. மற்ற நபரின் பார்வையிலிருந்து செயல்களை பார்க்க கற்றுக் கொள்க,
5. தெளிவான கேள்விகளை கேட்கவும்,
6. தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும்,
7. நாம் சரியென்றால் மற்ற நபரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
ஒரு நல்லதொடர்புகொள்பவராக இருக்கவேண்டும்:-
1. மற்றவர்கள் பேசுவதை நன்கு கவனிக்க வேண்டும்,
2. மற்றவர்கள் பேசுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்,
3. மற்றவர்கள் வரவேற்கும் வகையில் நீங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்,
4. அனைவரையும் சமமாக கருத வேண்டும்,
5. அணிகளுக்கு இடையே ஒத்துழைப்பையும், அர்ப்பணிப்பையும் உருவாக்க வேண்டும்,
6. மற்றவர்களின் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்,
7. வேலை சூழலில் கருத்து வேறுபாடுகளை சகித்துக் கொள்ளவேண்டும்,
8. எதிர்மறை கருத்துக்களை வரவேற்கும் மனப்பக்குவம் வேண்டும்,
9. மக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் பெற வழி செய்ய வேண்டும்.
மேலாளரின் பண்புகள்:-
1.துறையை யோசித்து தேர்வு செய்யவும்,
2.நியமித்தலும் வெளியேற்றுதலும் நியாயமாக இருக்க வேண்டும்,
3.உற்பத்தியான சூழலை உருவாக்க வேண்டும்,
4.வெற்றியை குறிப்பிட வேண்டும்,
5.மக்களிடம் நல்ல தொடர்புடன் இருக்க வேண்டும்,
6.பணியாளர்களை ஊக்குவிக்க வேண்டும்,
7.மன உறுதியை கட்டமைக்கவும் திட்டங்களை நாமே அமைக்க வேண்டும்,
8.ஒரே முடிவை இருமுறை எடுப்பதை தவிர்க்கவும்,.
9.யாரை பக்குவப்படுத்த வேண்டும். என்பதை பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#மேலாளர் #Commitment #Vision #Formation #முகவர் #வெற்றி

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்