வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் 5)

மனஅழுத்தம், விரக்தி, சோர்வு, கோபம் இவைகளை கையாளுதல்..

மனஅழுத்தம்:-
a116adfd8de078fe4b301c1d4379a62d.jpg

1.கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம் கோபத்திற்கு காரணம் மன அழுத்தம்.

2.குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது, மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது.

3. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரப்பரப்பின்றி அமைதியாக அணுகினால் மன அழுத்தம் நெருங்காது.

4. மொத்த வேலைகைளையும் ஒரே நேரத்தில் போட்டு குழுப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.
………………………………………………………………………………………..\
மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தத்தின் காரணங்களை நன்கு ஆராய்ந்து அதன் விளைவுகளை புரிந்து கொண்டு, அதற்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். முக்கியமான மற்றும் எளிதான தீர்வுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1. நேர்மறையாக இருக்கவும்.

2. உங்களிடம் நீங்கள் நம்பிக்கையாக இருக்கவும்.

3. உறவுகளை உருவாக்கவும்

4. திறனுடன் உரையாற்றவும்.

5. திறம்பட நேரத்தை நிர்வகிக்கவும்.

6. குறிக்கோளுடன் சிந்திக்கவும்.

7. சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளவும்,
8. எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை சந்திக்க மனதை தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

9. உடலை பாராமரித்து சீராக வைத்துக் கொள்ளவும்.

10. பணித்திட்டங்களை பட்டியலாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

11. எவ்வித செயல்களையும் சவாலாக எதிர்கொள்ள வேண்டும்

………………………………………………………………………………………..
பணியிடத்தில் ஏற்படும் விரக்தி மற்றும் சோர்வுகுறைப்பதற்கு என்ன செய்யவேண்டும்:


Business people working in an open plan office
1. மற்றவர்களின் சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நமது கடமையை தீவிரமாக செய்ய வேண்டும்.

2. தன்னைவிட சிறந்தவர்களின் உதவியையும் ஆதரவையும் நாட வேண்டும்.
3. கோபமாக இருக்கும்பொழுதும் சோகமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்கக்கூடாது.

4. சிக்கல்களுக்கு தீர்வு காண முயல வேண்டும் தவிர மற்றவர்களை குறை சொல்லக்கூடாது.

5. புதிய மாற்றங்களையும் இனக்கத்தோடு ஏற்க வேண்டும்.

6. யுகங்களுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
7. உண்மை தகவல்களுக்கேற்ப கவனம் செலுத்த வேண்டும்.

8. நம்பிக்கையுடன் சாதகமாக முடிவெடுக்க வேண்டும். பாதகமான முடிவுகள் நமது முயற்சியை தோற்கடிக்கும்.

9. சோர்வடைந்து முயற்சியை அடைவதில் சிரமமாக இருப்பின் நன்கு ஒய்வெடுத்து பின்பு மீண்டும் யோசித்து பணி செய்ய வேண்டும்.
………………………………………………………………………………………..
கோபத்தை கட்டுப்படுத்துதல்:

1. பொதுவாக நாம் கோபத்தை எப்பொழுதும் அப்படியே வெளிப்படுத்துகிறோம். ஆனால் கட்டுப்படுத்துவதே மிகச் சிறந்தது.

2. கோபம் ஏன் வருகிறது என்று யோசிப்பதை விட எதனால் வருகிறது என்று உணரவேண்டும். (டென்ஷன், தலைவலி)

3. உண்மையாக நம்மை பாதிப்பது எது என்பதை அறிய வேண்டும்.

4. கோபம் வரும்போது, அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
(அந்த இடத்தை விட்டு வெளியேறுவது அமைதியாக இருப்பது மூச்சை இழுத்து விடுவது அமைதியான இடத்திற்கு செல்வது போன்றவை)

5. கோபப்படும்போது நாம் நடந்து கொள்ளும் முறையை கண்டறிய வேண்டும்.
 நம் கோபத்திற்கு நாமே தான் காரணம் என்பதை உணர வேண்டும்.

6. உறுதியாக பேசுவதை பற்றி கற்றுக்கொள்ளவேண்டும். நம் கோபத்துக்கு காரணமானவரிடம் பேசி புரியவைக்க வேண்டும்.

7. அவர் கோபப்படும் போது நடந்து கொள்ளும் முறை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

8. நம்முடைய எண்ணங்களை வெளிப்படையாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டும்
………………………………………………………………………………………..
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#மனஅழுத்தம் #விரக்தி #சோர்வு #கோபம் #Business #honest #tenstion #mindpleasure #anger #paranjothipandian

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்