சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

41591323_1815844251785850_232773152835371008_n

பெரும்பாலும் சொத்துக்களை வாங்கி மட்டும் போடுவது அல்லது பூர்வீக சொத்துக்களை கவனிக்காமல் அப்படியே போட்டு விடுவது என பலர் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் எழும்பி அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் கரைத்து பதங்குலைந்து கொண்டு இருக்கின்றனர்.

என அனுபவத்தில் நான் கண்ட சில விஷயங்களை எழுதுவதன் மூலம் சொத்துக்களை சும்மா வைத்து இருக்க கூடாது என்ற விழிப்பு உங்களுக்கு வர கூடும்.

ஒரு நபர் சென்னைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டார் பட்டா வாங்கி விட்டார். வேலி போட்டு விட்டார். அடிக்கடி சொத்தை நேரடியாக பார்த்து விட்டும் வருவார். இவருக்கு என்ன பிரச்சனை வர போகுது என்று நினைக்கிறீர்களா? அரசு எந்திரம் சமீபத்தில் கம்ப்யூட்டரில் இருக்கிற பட்டாவை எல்லாம் ஆன்லைன்னுக்கு மாற்றியது அப்படி இவரின் இடத்தில் பட்டாவை ஆன்லைனுக்கு மாற்றிய போது வேறு நபர் பெயருக்கு பட்டாவை மாற்றி விட்டது.

 பட்டாவில் பெயர் வந்த நபர் மேற்படி பட்டா எண்களை எல்லாம் சேர்த்து விவசாய கடனும் வாங்கி விட்டார். ஆன்லைன் ஈசி யிலும் மேற்படி நபரின் பெயர் வந்து விட்டது. அந்த நில உரிமையாளர் என்னிடம் ஒரு வேலை விசயமாக வந்த போது நான் ஆன்லைன் பட்டாவிலும் ஈசி -யும் சோதித்து பார்த்த போது இந்த விஷயம் தெரிந்தது. அவரிடம் இதனை சொன்னபோது அவர் பதறி போனார்.

அடிக்கடி ஆன்லைன் ஆவணங்களையும் சோதித்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது அதனை சரி செய்ய நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு..

இது திருப்பூர் மாவட்டத்தில் நமது நண்பர் ஒரு இடத்தை வாங்கி போட்டு , பட்டா பெயர் மாற்றி வேலிகள் போட்டு வைத்து விட்டார். இவருடைய சர்வே 17, அதே கிராமத்தில் வேறு ஒரு நபர் தனது இடத்தை அடமானம் போட்டு அது பணம் திரும்ப வராத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்காக போட்டு அந்த வழக்கு எண்ணை மற்றும் விவரங்களை சார்பதிவக ஈசி -யில் பதிய வைப்பதற்கான வேலைகளை செய்தார்.

 அப்பொழுது டாகுமென்ட் ரைட்டர் இவர்களுடைய சர்வே எண் 71 ஆனால் தவறுதலாக 17 என்று அடித்து விட்டார்கள். சர்வே எண் 17யும் ஈ.சி.யில் ஏறிவிட்டது. சர்வே எண் 17 காரர் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தார். இரண்டு வருடமாக இதனை பார்க்கவில்லை! நான் இவரை சந்தித்து பேசும் போது வருடத்துக்கு ஒரு முறையாவது ஈசி போட்டு பாருங்கள் என்று சாதரணமாக சொன்னேன்.

அவரும் நம்மை ஈசி போட சொன்னார். போட்டு பார்த்தால் மேற்படி என்ட்ரி ஈ.சியில் வந்து இருந்தது அதனை சரி செய்யஅந்த நபர் தூக்கம் இழந்து சார்பதிவகம் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்.
கோயம்புத்தூர் தெலுங்கு பாளையத்தில் ஒருவருடைய பூர்வீக சொத்து அவர்கள் சென்று அதனை பார்க்கவே இல்லை.

 அது ஒரு பழைய வீடு, வீட்டுக்கு தேவையான பட்டா வரி மின்சாரம் எல்லாம் அவர்கள் பெயரில் இருக்கிறது. அதனை எல்லாம் பராமரிக்க பக்கத்து வீட்டுக்காரார் மற்றும் உறவினரான குடும்பத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் சென்று பார்த்து விடுவார்கள்.

 பக்கத்து வீட்டுக்காரர் மேற்படி வீட்டை 11 மாதத்திற்கு குத்தகைக்கு எடுத்தது போல பதிவு செய்யபடாத ஆவணத்தை அவர்களுடைய கையெழுத்தை போட்டு கோர்வையாக தொடர்ந்து பல வருஷங்களுக்கு குத்தகை ஆவணத்தை உருவாக்கி இருக்கிறார். பிறகு நீதிமன்றத்தில் எங்களுக்கு மேற்படி சொத்தை விற்றால் எங்களுக்குதான் விற்க வேண்டும் என்ற குத்தகை சட்டத்தில் வழக்கு போட்டு இருக்கிறார்கள். அவர்களும் இன்று நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

சேலம் – ஆத்தூர் அருகில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய கிராம வீடு இருந்தது. இவர்கள் சேலம் டவுனில் இருக்கிறார்கள். கிராம வீட்டை குறைந்த வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள் வாடகையை ஆறுமாதத்திற்கு ஒரு முறை மொத்தமாக கொண்டு வந்து கொடுப்ப்பார்கள். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராம வீட்டை சென்று பார்க்க வில்லை. வாடகை இருப்பவர் 6 மாதத்திற்கு ஒரு முறை வாடகையை தவறாமல் கொண்டு வந்து கட்டி விடுவார்கள். அதனால் உரிமையாளர்களும் அப்படியே இருந்து விட்டார்கள். மேற்படி வாடகை இருப்பவருக்கு கிராம வீட்டுக்கு அருகிலேயே ஒரு 15 செண்டு காலி நிலம் ஒரு சந்து வழியுடன் இருந்தது. அவர் மேற்படி இடத்தை விற்க முயற்சிக்கிறார் அவரால் விற்க முடியவில்லை! சந்து வழியாக இருக்கிறது என்று வேண்டாம் என்று சிலர் சொல்லிவிட்டார்கள்.

அதனால் இப்பொழுது வாடகை இருக்கும் வீட்டை காட்டி சந்து வழியில்
இருக்கும் பத்திரத்தை வைத்து வேறு நபருக்கு கிரயம் கொடுத்து விட்டார். அதாவது பத்திரம் ஒரு இடம், கைப்பற்றல் இடம் வேறு இடம் , மேற்படி வீட்டில் வாங்கியவர்கள் குடி வந்து விட்டார்கள். விற்ற நபர் உண்மையான உரிமையாளருக்கு இன்றுவரை 6 மாதத்திற்கு ஒரு முறை வாடகையை கொண்டு சென்று கொடுத்து கொண்டு இருக்கிறார். நான் களப்பணிக்கு சென்ற பிறகு தான் உண்மையான உரிமையாளருக்கு விசயமே தெரிய வந்தது. இப்பொழுது அவர்களை காலி செய்ய நீதிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி சொத்தையும் நேரடியாக சென்று பார்க்கவும், ஆவணங்களை எல்லாம் அடிக்கடி சோதனையிடாமலும் சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது. ஆம் நண்பர்களே STATIC சொத்துக்களை எல்லாம் ACTIVE சொத்துக்களாக மாற்றும் போதுதான் சொத்துக்கள் பாதுகாப்பாகவும் , வருமானம் தர கூடியதாகவும் இருக்கும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
www.paranjothipandian.in
குறிப்பு
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#பூர்வீகம் #சொத்து #நீதிமன்றம் # கிரயம் #வாடகை #குத்தகை #பட்டா #ஏக்கர் #acre #asset #static #court #deed #rent #lease #patta #chitta #land

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்