ஸ்டெர்லைட் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய களநிலவரங்கள்!

ster

பணப்பெட்டி உங்களுக்கு !
சவப்பெட்டி எங்களுக்கா !!
ஆதாயம் உங்களுக்கு !
ஆஸ்துமா எங்களுக்கா !!
காப்பர் உங்களுக்கு !
கேன்சர் எங்களுக்கா !!

இப்படி தான் கோஷம் போட்டு கொண்டு இருக்கிறார்கள் ! மீளவிட்டான், பண்டாரபட்டி , லூசியா நகர், மடத்தூர் , வீரபாண்டிபுரம், அ-குமாரரெட்டிபட்டி கிராம மக்கள் .

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், முதியவர்கள், என அனைவரும் எழுச்சியுடன் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை எதிர்த்து ஊக்கமுடன் போராடி வருகிறார்கள் .

இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்திரகாண்ட் போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகளால் விரட்டி அடிக்கப்பட்டு தமிழகத்தில் தூத்துக்குடியில் குடிகெடுக்க வந்து இருக்கிறது இந்த ஸ்டெர்லைட்.

25 வருசத்துக்கு முன்பு தூத்துக்குடியில் குடியேறிய ஸ்டெர்லைட் அரக்கன், மண்ணையும், நீரையும் , காற்றையும், அழுக்குபடுத்தி மீட்க முடியாத களங்கத்திற்கு இந்த பகுதி மண்ணை உருவாக்கி விட்டான் .

பல்லாயிரக்கணக்கான கோடி கடந்த 25 வருடத்தில் லாபம் சம்பாதித்து இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம் , வரியாக சில ஆயிரங்கோடிகள் அரசுக்கும் , சில நூறு கோடிகள் அரசியல்வாதிகளுக்கும் செலவழித்து இருப்பர். பெரும்புள்ளிகள் பலர் ஸ்டெர்லைட்டால் பெரும் பலன் அடைந்து விட்டதாக தகவல்கள் கசிகின்றன.

ஆனால் என்ன விலை கொடுத்தாலும் ,எவ்வளவு செலவு செய்தாலும் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் கெட்டுபோன மண்ணை , காற்றை , நீரை, சரி செய்ய முடியாது.

நான் நேரடியாக சென்று இரண்டு நாட்கள் அங்கு தங்கி பார்த்த பொழுது நிறைய செய்திகளை அறிய முடிந்தது.

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் பறந்து விரிந்து அமைந்து இருக்கிறது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை .
ஒரு பக்கம் தனி பவர் பிளான்ட் , இன்னொரு பக்கம் தாமிர உருக்கு ஆலை , பவர் பிளான்ட் பின்புறம், மீளவிட்டான் , பண்டாரபட்டி , மடத்தூர் கிராமங்கள் அமைந்துள்ளது. தாமிர உருக்கு ஆலை பின்புறம் , வீரபாண்டி அகுமரரெட்டிபட்டி கிராமங்கள் அமைந்துள்ளது.

இடை , கடை, நிலை மக்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள். விவசாயம், சிப்காட் & தூத்துக்குடி, நகரத்திற்கு வேலைகள் என்பது தான் அவர்களின் வாழ்வாதாரம்.

கடந்த 25 வருடமாக வாரந்தோறும் கிராம மக்களுக்கு ஸ்டெர்லைட் …… இலவச மாத்திரைகள் வழங்கி வருகிறார்கள்.

கிராம மக்களுக்கு விளையாட்டு திடல், மன்றம், வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் அமைக்கவும், என்று சில எலும்பு துண்டுகளை ஸ்பான்சர் என்று பெயரில் வீசி வருகிறார்கள்.

கிராம மக்கள் ஒருவருக்கும் வேலை …… இல்லை ! அவ்வளவு வேலையும் வட மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் ஒடுக்கப்பட்ட மக்களே!
பலபேருக்கு அமிலத்தால் விபத்துகளும் , உயிரிழப்புகளும், நடந்து கொண்டு இருக்கிறது. அவை அப்போதைக்கு அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் தான்.

மேற்படி விபத்துக்கள் தூத்துக்குடி மக்களுக்கு நடந்து இருந்தால் எதிர்வினை நிச்சயம் ஏற்பட்டு இருக்கும். வட மாநில ஆட்களுக்கு நடந்ததால் பெரிய அளவில் அலட்டி கொள்ளாமல் இருந்து விட்டனர் தமிழக மக்கள்.

மேற்படி கிராமங்களிலேயே வட மாநில இளைஞர்கள் பலர் தங்கி உள்ளனர். கிராமத்தின் வாடகை வீடு மதிப்பு உயர்ந்து நிற்கின்றது.

25ஆண்டுகளில் தற்பொழுது தான் இவர்களுக்கு இதனுடைய பக்கவிளைவுகள் தெரிகிறது. பலர் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாவதை இப்போது உணர்கின்றனர்.

25 ஆண்டு குத்தகை முடிய போகும் நிலையில், புதியதாக இன்னொரு யூனிட் விரிவாக்கம்செய்ய விருக்கின்றனர். இதனால் கொதிதெழுந்த மக்கள் இதனை மூட போராடி வருகிறார்கள்.

மரங்கள், செடிகள், என்று ஆலையை சுற்றி நன்கு பராமரிக்க வேண்டும். ஆலையில் முன்பக்கங்களில் நன்று மரங்கள் இருக்கிறது. உற்பத்தி நடக்கின்ற பகுதிகளில் மரங்கள் எல்லாம் செத்து போய் , கருகி வாடி தான் இருக்கிறது.

நுழைவாயில் அலுவலகங்களில் இருக்கின்ற மரங்கள் செழிப்பாகவே உள்ளது. பின்பக்கம் ஏன் பராமரிக்கவில்லை என்றால் , அமிலங்களின் தாக்கத்தால் மரங்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை!
புல்பூண்டுகள் , செடிகள் பாறைகள், பழுப்படைந்தும் கருப்படிந்தும், காணப்படுகின்றன. “” கொஞ்சம் சிரமப்பட்டால் பச்சைகுடை உருவாக்குகின்ற பணியை செவ்வனே செய்து இருக்கலாம்.

ஸ்டெர்லைட் பின்புறம்
பூங்கா என்று போர்டு இருக்கிறது. பராமரிப்பு ஸ்டெர்லைட் என்று இருக்கிறது. ஊராட்சி பராமரிக்கும் அளவுக்கு செஞ்சால் கூட பரவாயில்லை, ஆனால் வேலிகாத்தான் முட்களாக தான் வைத்து இருக்கிறார்கள்.

முள்காடாய் இருக்கும் பூங்கா
பனை மரங்கள் மொட்டையாய் , பட்டுப்போய்நின்று கொண்டு இருக்கிறது.முள் மரங்கள் மட்டும் ஆலையை சுற்றி வளர்ந்து நிற்கிறது.
பவர் ப்ளாண்டில் சுற்றி நிற்கும் மரங்கள் போல் ஆலையை சுற்றி இல்லை என்பதில் இருந்தே கழிவாக வெளியேறும் அமிலத்தின் விளைவை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நீரோடை மஞ்சள் காமாலை யூரின் போல ஓடி கொண்டு இருக்கிறது. அதனை குடிக்கும் பறவைகள், கால்நடைகள், பிற உயிரினங்கள் பிழைக்குமா என்பதே அரிது.

மஞ்சளாய் வெளியேறும் கழிவுநீர்
நான் சென்று இருந்த நேரம் , பேக்டரி இயங்காததால் காற்றை கெடுக்கும் புகையினை…பார்க்கக முடியவில்லை. நீரும், மண்ணும், கெட்டு போய் இருப்பதை சாதாரண ஆட்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

இந்த மக்களை சோதனை எலிகளாக , தொழிலுக்கு பலிகளாக ஆக்கி கொண்டு இருக்கின்றனர். அடிமைகளின் உயிர்கள் மலிவானது என்ற எண்ணத்தில் தான் இந்த ஆலை அவர்களை பயன்படுத்தி வருகிறது.

இதனுடைய விதிமீறல்களுக்காக 30 ஆயிரம், 50 ஆயிரம் என்று மாவட்ட நீதிமன்றம் பைன் போடுவதால் , பைனை கட்டிவிடலாம் என்ற எண்ணம்.
விதிக்கு கட்டுபடுவதை விட பைன் மிக குறைவாக இருப்பதால் , விவேக் படத்தின் மைனர்குஞ்சு முன் கூட்டியே பஞ்சாயத்தில் பணத்தை கட்டிவிட்டு கற்பழிப்புகளை தொடர்வது போல் அகர்வால்கள் மைனர்குஞ்சு போலவே நடந்து கொள்கிறார்கள் .

இந்த பிரச்சனையை வெகு மக்களுக்கு முதன் முதலில்கொண்டு சேர்த்த
வைகோ அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்
இந்த மண்ணும், நீரும், காற்றும், மாசுபட யார் காரணம்.

1. மத்திய அரசு , மாநில அரசு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.
2. நீதிமன்றம்.
3. மாசு கட்டுபாட்டு வாரியம்.
4. நீரி அமைப்பு
5. பத்திரிக்கைகள்.
6. அரசியல் பிரமுகர்கள்.

மடத்தூர் கிராம மக்கள் போராட்டத்தில் நானும், என் மகனும், என் தம்பியும்

தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஸ்டெர்லைட் #நீதிமன்றம் #பேக்டரி #மகாராஷ்டிரா  #உத்திரகாண்ட் #Sterlite #polution #water #people #court #portrest #paranjothipandian #park #maintanance

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்