கிரய ஆவணம் எழுதி பதியும் போது மாதிரிகளை (TEMPLATE) பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் !

blog-1024x1024


1. பல லட்சம் அல்லது பல கோடி செலவு செய்து தேடி பிடித்து சொத்துக்களை வாங்குவார்கள், அப்படி வாங்கும் சொத்துக்களை பத்திரம் எழுதும் போது ஆவண எழுத்தர்கள் மூலம் மாதிரிகளை வைத்து பத்திரங்களை எழுதுகின்றனர் ,மாதிரிகள் என்றால் ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு பத்திரம் செய்தபோது டைப் செய்ததை ஒரு Formate ஆக வைத்து அதிலேயே புதிய ஆவணத்தை உருவாக்குவது ஆகும்.

2.இந்த நடைமுறை மிகவும் தவறானது,கொஞ்சம் கூட செலவானாலும் சரி நல்ல வழக்கறிஞர் அல்லது நல்ல ஆவண எழுத்தரை வைத்து மாதிரி இல்லாமல் உங்களுக்கு என்று பிரத்தியோகமாக ஆவணம் தயார் செய்வதே நல்லது.மேலும் முன்கூட்டியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதிக நேரம் கொடுத்து வழக்கறிஞர்/ஆவண எழுத்தர் களுக்கு கொடுத்து டிராப்ட் போட்டு கொடுக்க சொல்ல வேண்டும்.

3. பெரும்பாலும் சொத்து வாங்குபவர்கள் நல்ல நேரம் முடிய போகுது ,நல்ல நாள் முடிய போகுது என்று தங்களுக்கு உள்ளேயே ஒரு Beliefs System த்தை உருவாக்கி கொண்டு பதட்டபட்டு கொண்டு இருப்பார்கள்.அல்லது அவர்களுடைய உறவினர்கள்,ரியல் எஸ்டேட் ஏஜேண்டுகள்,இடத்தை விற்பவர்கள் இந்த நல்ல நேரம் நம்பிக்கையை பத்திரபதிவு அன்று சொல்லி அவசரபடுத்தி கொண்டு இருப்பார்கள். இப்படி அவசரபடுத்தாமல் அங்கு இருக்கும் சூழ்நிலையிலேயே FLOW லேயே பயணித்து மன அமைதியுடன் டிராப்ட் போடும் வேலையை பார்த்தால் உங்கள் கிரய பத்திரம் மிக சிறப்பாக அமையும்.

4.அவசர மனநிலையிலும் நேர நெருக்குதலிலுமே தான் நிறைய பேர் டிராப்ட் போடுகிறார்கள்.சில ஆவண எழுத்தர்கள் கடமைக்கு ஏற்கனவே இருக்கும் மாதிரியை வைத்து பத்திரம் போடுகிறார்கள்.இப்படி செய்வதால் பத்திரங்களில் அதிக பிழைகள் தவறுகள் வருகிறது.
5.தந்தைக்கு பூர்விக சொத்து , பட்டா அவர் பெயரில் இறங்கி இருக்கிறது. எந்தவித உயில் ஏற்பாடுகள் செய்யாமல் இறந்து விட்டார் . அவருக்கு ஒரு மனைவி, நான்கு பெண்கள், ஒரு ஆண் வாரிசு் , எல்லாரும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியில வசிக்கிறார்கள். ஆண் வாரிசு மகன் வாரிசு வெளிநாட்டில் இருக்கிறார் .

6.ஒரு விடுமுறையில் அனைவரும் வேக வேகமாக பத்திரபதிவு அலுவலகம் வருகிறார்கள் . சொத்தை 5 பாகமாக பிரிக்க வேண்டும் என சொல்லி , சொத்தை நீள அகலத்துடன் சார்பதிவகத்தில் இருக்கிற ஆவண எழுத்தரை பார்க்கிறார்கள் , ஆவண எழுத்தர் செட்டில்மென்ட் பத்திர டிராப்ட்டை கணினியில் இருந்து எடுத்து டிராப்ட் தயார் செய்து பத்திரம் பதிவு செய்து கொடுக்கிறார்.அதாவது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உண்டான பாகத்தை தனி தனியாக செட்டில்மென்ட் பத்திரம் எழுதி பதிந்து கொடுக்கிறார். .சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு செய்யபடுகிறது.பிறகு வேகவேகமாக அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.

7. சில மாதங்கள் கழித்து மேற்படி பத்திரங்கள் பட்டா பெயர் மாற்றத்திற்கு செல்லும் போது தான் அவர்களுக்கு மேற்படி பத்திரமே தவறு என்று தெரிய வருகிறது. ஆம் ! தந்தையின் பூர்விக சொத்து அவரின் மனைவி உட்பட 6 பேருக்கும் வாரிசுரிமை படி நேரிடையாக இறங்கி விடுகிறது. மேற்படி சொத்தில ஒரு நபருக்கு் 1/6 பங்கு வருகிறது.

8.மேற்படி தாயாருக்கு மற்ற வாரிசுகளை போல ஆறில் ஒரு பங்குதான் வருகிறது. ஆனால் சொத்து முழுதும் அவருடையது போல் அனைவருக்கும் 5 பங்காக பிரித்து எழுதி கொடுத்து விட்டார்.அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை .

9. தப்பான பத்திரம் திருத்தி வர சொல்லி விட்டார்கள்.பத்திரம் சட்ட குழப்பங்களுக்கு உள்ளாகி விட்டது. இதோடு எப்படி மீண்டும் எல்லாரும் ஒரே நாளில் கூடி ஊருக்கு வந்து பழைய பத்திரங்களை இரத்து செய்துவிட்டு புதிய பத்திரங்களை போடுவது என்றும் போக்குவரத்து அலைச்சல் செலவுகளை நினைத்து மலங்க மலங்க விழித்து கொண்டு இருக்கின்றனர்.

10. சென்னை வடபழனியில் ஒரு சொத்து கிரயம் , மேற்படி சொத்துக்கு மெயின் ரோட்டில் இருந்து 3 அடி தனி வழி , அது அவர்களுக்கு மட்டுமே ஆன வழி . அந்த வழியுடன் சேர்த்து தான் மொத்த விஸ்தீரணம் , மேற்படி வழியை ஒட்டி இரண்டு வெவ்வேறு சொத்துக்கள் இருக்கிறது. கிரய சொத்திற்கு நான்கு எல்லைகள் பத்திரத்தில் நான்குமாலில் சொல்லும் போது ஒரு எல்லையில் இந்த 3 அடி வழியும் சொத்துக்குள் வருவதால் 3 அடி வழி தொடுகின்ற மெயின் ரோடும் , வழியை ஒட்டி இருக்கிற இருபக்கத்தில் இருக்கிற வீட்டு உரிமையாளர் பெயரும் காட்ட வேண்டும்.

11. மாதிரி பார்த்து பத்திரம் அடித்ததில் வழியை ஒட்டி இருக்கும் இரண்டு பக்கத்தில் இருக்கிற வீடுகளை மட்டும் காட்டினார்கள்.அந்த 3 அடி வழியையும் காட்டினார்கள்.ஆனால் 3அடி வழி அது தொட்டு கொண்டு இருக்கும் சாலை எல்லையை காட்ட வில்லை. பத்திரம் பதிந்து விட்டார்கள் மேற்படி சொத்து கட்டிட அனுமதிக்கு போகும் போது வரைபடம ரோடோடு இணைகிறது், பத்திரம் ரோடோடு ஒட்டவில்லை என திரும்ப அனுப்பி விட்டார்கள் . மீண்டும் சொத்து விற்றவர்களை தேடு தேடு என்று அவை சரி செய்யப்பட்டது.

12. எனக்கு தெரிந்த இன்னொரு கிரைய பத்திரத்திற்கு மாதிரியில் இருந்து
சொத்துக்கள் COPY & PASTE செய்து போட்டு விட்டார்கள். பொதுவாக கிரயம் எழுதும் விதத்தில் சொத்து விற்பவர் இந்த சொத்தினுடைய அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஷரத்து எழுதப்பட்டு இருக்கிறது . ஆனால் மேற்படி சொத்தில் இவர் நகல்கள் மட்டுமே பெற்று கொள்கிறார் . அந்த பத்திரத்தில் வேறு ஒரு விற்கபடாத சொத்தும் இருப்பதால் அசல் பத்திரம் விற்பவரே வைத்து கொள்கிறார்கள் .

13. அப்படி என்றால் சொத்தில் நகல் மட்டும் பெற்று கொண்டார் என்று குறிப்பிட வேண்டும். ஏற்கனவே தாயரிக்க பட்ட மாதிரி என்பதால் அப்படியே அசல் மற்றும் நகல் என்று போட்டுவிட்டனர். மேற்படி சொத்து கொஞ்ச நாளுக்கு பிறகு வங்கி கடனுக்காக செல்கிறது. வங்கியில் தாய் பத்திரங்களின் அசலை கொண்டு வாருங்கள் என்று சொல்லி லோன் தடுக்கபடுகிறது. .அசல் பழைய உரிமையாளரிடம் இருக்கிறது என்று வங்கியில் பேசி பார்க்கிறார்கள் அப்படியென்றால் ஏன் அசல் கொடுத்து விட்டதாக பத்திர ஷரத்தில் இருக்கின்றன.

14.ஒன்று பழைய உரிமையாளரிடம் சென்று சென்று ஒரிஜினல் பத்திரம் வாங்கி வாருங்கள் அல்லது அசல் என்ற வார்த்தை அழித்து பிழைதிருத்த பத்திரம் போடடுவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டனர். அதனால் அவர்கள் பிழைதிருத்தல் போட அலைந்து கொண்டு இருந்தார்கள் . அவர்கள் பணம் செலவு செய்வதை பற்றி கூட வருத்தபடவில்லை . அவர்களின் நேரமும் அலைச்சலும் அதிகமாவதை தான் நினைத்து சலித்து கொள்கிறார்கள்.

15. இப்படி பல கதைகளை என்னால் சொல்லமுடியுமம்
கொஞ்சம் கட்டணம் அதிகம் என்றாலும் நல்ல வழக்கறிஞர்களை பார்த்து பத்திரம் போடுவது , உங்களுக்கு என்று பிரத்தியோக ஆவணங்கள் தயாரித்து இரண்டு மூன்று முறை சோதித்து பிழை திருத்தி இறுதி டிராப்ட் முடிவு செய்து பத்திரம் செய்தால் மிகவும் பாதுகாப்பான தண்ட செலவுகளும் , அலைச்சலும் இல்லாத சொத்து பரிமாற்றம் நடைபெறும்.

குறிப்பு:

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

#கிரயஆவணம் #template  #Formate #வழக்கறிஞர் #டிராப்ட் #பத்திரம் #நகல் #சொத்து  #ஆவணஎழுத்தர் #Beliefs #System #செட்டில்மென்ட் #ரியல் #எஸ்டேட் #ஏஜேண்டு #kirayam #bond #settlement #real #estate #deed #copy #paste #asset #document #land #realtor

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்