கடலூர் வெள்ள நிவாரண உதவியும் தற்போதைய கேரளா வெள்ள இயற்கை பேரிடரும்!

2015 ஆண்டு இறுதியில் சென்னை மற்றும் கடலூரில் பெருவெள்ளம் வந்த போது.மீடியா கவனம் முழுக்க சென்னையில் தான் இருந்தது.
கடலூர் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் உணர்ந்து நானும் என்குழுவினரும் இரண்டாம் நாளே நிவாரண பொருட்களுடன் கடலூர் சென்றுவிட்டேன்

.8

முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு அதிகாரிகளை நிவாரண பொருட்களுடன் சந்தித்தேன்.பொருட்களை அவர்கள் காட்டிய இடத்தில் வைக்க சொன்னார்கள்.

எனக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருக்க நிவாரண பொருட்கள் எப்பொழுது போய் மக்களிடம் சேரும் என்று கேட்டதற்கு அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் அங்கிருந்து கிராம அலுவலர் அலுவலகம் போய் மக்களிடம் போகும் அதுவும் சீக்கிரம் போகாது..சாலைகள் போகமுடியதாபடி அறுந்து இருக்கின்றன.மின்சார கம்பங்கள் விழுந்து இருக்கின்றன.
அதனால் நிலைமை கொஞ்மாவது சீரான பிறகு நிவாரண பொருட்கள் சென்று சேரும் என்றார்கள்.

எனக்கு தாமதாமாக சென்று சேரும் உதவி மேல் உடன்பாடு இல்லை.அதனால் தனியாக கிராமங்ளுக்கு சென்று விடுலாம் என்று தீர்மானித்தேன்.நிவாரண உதவிகள் பெரும்பாலும் பெருநகரம் -நகரம்-சிற்றூர்-கிராமம்-குக்கிராமம் என்று மேலிருந்து கீழ் படி நிலையாக செல்லும்ஆனால் நான் முதலில் குக்கிராமத்தில் தொடங்க முடிவெடுத்து கிளம்பிவிட்டேன்.

நான் சென்ற கிராமம்
பாதைகள் எல்லாம் அறுந்து தனிதீவாக இருந்தது.போக்குவரத்து இல்லாததால் மளிகை,அரிசி,காய்கறிகள் குழந்தைகளுக்கான பால் என எந்தவித பொருட்களும் அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் உள்ள அரிசி பருப்பு காய்கறி எல்லாம் எடுத்துவந்து பொதுவாக ஊருக்கே ஒரு அடுப்புமூட்டி உலை வைத்து பட்ட சோறு செய்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அங்கு நான் சென்ற பிறகு அனைவரும் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.என்னிடம் இருந்த பால்பவுடர் அங்கு இருக்கின்ற பல குழந்தைகளுக்கு பசியாற உதவியது.இருக்கிற நிவாரண பொருட்கள் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது.
அங்கு இருக்கிற இளைஞர்களை திரட்டி பக்கத்து கிராமங்ளுக்கு உதவி செய்ய அழைத்து கொண்டேன். அக்கிராமத்திலேயே அன்று தங்கினேன்.எங்கும் தூங்க முடியவில்லை எங்கு பார்த்தாலும் ஈரம் .படுக்கும் இடத்தில் திரும்பி படுத்தால் தண்ணீரில்தான் படுக்க வேண்டிய நிலை.ஊமை மழையாக தூறி கொண்டே இருந்தது.

அங்கு இருக்கிற கூரை வீடுகள் எல்லாம் ஒழுகிகொண்டே இருந்தது.அதனை கண்ட எனக்கு இவர்களுக்கு தார்ப்பாலின் ஷீட் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உட்காரவும் படுக்கவும் வசதியாக இருக்கும் என்று தோணிற்று.

என்னுடைய முகநூலில் கடலூர் நிலவரங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு இருந்ததால் என் நண்பர்கள் பலர் உதவி செய்ய என்னை தொடர்பு கொண்டு இருந்தனர்.அவர்களிடம் தார்பாலின் ஷீட் வாங்கி பாண்டிசேரி அனுப்ப சொல்லி கேட்டு கொண்டேன்.பலர் தார்ப்பாலின் ஷீட் வாங்கி அனுப்பி இருந்தார்கள்.

ஜெனிசன் லேண்ட் புரோமோட்டர்ஸ் உரிமையாளர்கள் அண்ணன் சங்கர் அவர்களும் நினைவில் வாழும் இஸ்ரேல் அவர்களும் நிறைய தார்பாலினும் இரண்டு 407ன் நிறைய நிவாரண பொருட்களும் அனுப்பினர்.
நான்கு நாட்கள் களப்பணி என்று நினைத்த எனக்கு இரண்டு வாரங்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஆயிற்று..எனது கோயம்புத்ததூர்,தென்காசி அலுவலக குழுவினர்கள் எனக்கு பின்புல செயல்பாடுளிலேயே ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள்.

பல கிராமங்களுக்கு சென்று உதவிகள் ஆற்றியதால் னதிருப்தியுடன் வீடு திரும்பினேன். கடலூர்பகுதியில் சந்தித்த கிராமங்களின் நண்பர்கள் பலர் இன்றுவரை தொடர்பில் இருக்கின்றனர்.

அந்த கள அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால். பேரிடர் கால உதவிகள் முதல் வாரத்துக்குள்ளேயே மக்களிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும்.அதன்பிறகு அரசு எந்திரம் சென்றுவிடும்.அரசியல்வாதிகள் பிற தொண்டு நிறுவனங்கள் சென்றுவிடும்.

இயற்கை பேரிடர் தாண்டி மக்களை சந்திக்க அதிக துணிவுமிக்க நபர்களால்தான் களஉதவி செய்ய முடியும்.எந்த உதவியும் கிடைகாத நேரத்தில் கிடைப்பது "உடுக்கை இழந்தவன் கைபோல" உதவி ஆகும்.
நான் கடலூரில் இருந்து திரும்பும்போது ஸ்டிக்கர் கலாச்சாரம் அரசியல் ஸ்டண்டுகள் நிவாரணஉதவிகள் பெயரில் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
எதற்கு இதனை பகிர்கிறேன் என்றால் தற்போது கேரள மாநிலத்தில் இருந்து வரும் பெருவெள்ள இயற்கை பேரிடர் செய்திகள் மனதை ரணமாக்குகின்றன.
உடனடியாக கேரளா சென்றுவிடலாம் என்று நினைத்தாலும் மலபார் மற்றும் இடுக்கி பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் இப்போது நீங்கள் வர சரியான நேரமல்ல.இது தமிழ்நாடு போல நில அமைப்பு உடையது அல்ல என்று தவிர்க்க சொல்லுகின்றனர்.

ஆம் கடலூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் சம்மந்தமாக பல முறை சுற்றி இருப்பதால் சாலைகளையும் அதன் தன்மையும் அறிந்து இருக்க முடிந்தது.கேரளா மாநிலம் ஒரே ஒரு முறை பைக்கில் தென்காசி-செங்கோட்டை-திருவனந்தபுரம்-கொச்சி-குருவாயூர் -மலபார் வரை சென்று பிறகு பாலக்காடு வழியாக கோவை வந்து சேர்ந்தேன்.அப்பொழுதே உணர்ந்தேன் நில அமைப்பில் கேரளா தமிழ்நாடு போல அல்ல என்று..
இருந்தாலும் சீக்கிரம் கேரளா கிளம்ப விருக்கிறேன்.நிவாரணபொருட்களை எடுத்து கொண்டு..

எனவே கேரள சகோதரரர்களுக்கு உதவ எண்ணம் கொண்டோர்.நிவாரண பொருட்களை எங்களுடைய சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை,தென்காசி,மதுராந்தகம் அலுவலத்தில் ஒப்படைக்கலாம்.
5

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நிவாரணபொருட்கள் #கடலூர் #பேரிடர் #Disaster #கோயம்புத்ததூர் #தென்காசி #மளிகை #அரிசி  #ஆட்சியர் #ஜெனிசன் #லேண்ட் #புரோமோட்டர்ஸ் #tenkasi #coiambatore #cuddlore #gift #things #land #promoter #rice #people #fund #help #praptham #paranjothipandian

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்