மங்களதேவி மலை ஏற்றமும் கண்ணகி கோவில் தரிசனமும்! பயணக் கட்டுரை.

Image result for மங்களதேவி மலை ஏற்றமும் கண்ணகி கோவில் தரிசனமும்! பயணக் கட்டுரை.

கேரளா மாநிலம் குமுளியில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் பளியன்குடியில் இருந்து 7கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கண்ணகி கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4380 அடி உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

மேற்கண்ட கோவிலுக்கு 7கீ.மீ. தூரம் மலை ஏறிசெல்ல விரும்பும் நண்பர்கள் அனைவரையும் தொலைபேசியிலும் முகநூல் மூலமாகவும்
ஒருங்கிணைத்தும் அதில் 10 நபர்களுக்கு மேல் வருவதாக உறுதியளித்து 7 நபர்கள் சென்னை பெருங்குளத்தூர் அரசு பேருந்து நிறுத்தத்தில் 01.05.2015 அன்று வெள்ளிகிழமை இரவு 9 மணிக்கு ஒன்றுசேர்ந்தனர். மறுநாள் காலை 8 மணியளவில் ஒருவர் தேனி புதிய பேருந்து நிலையத்தில் எங்களுடன் இணைந்துகொண்டார்.

தேனி புதிய பேருந்துநிலையத்தில் இருந்து 15கி.மீ. தூரம் உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் ஆலயத்திற்குக் அனைவரும் சென்று வழிபட்டோம். அருகில் இருந்த மதுரைக்கு புகழ்சேர்க்கும் புண்ணிய நதியான வைகையில் நீராடினோம். அங்கேயே உணவு முடித்ததுவிட்டு அங்கிருந்து அரசு பேருந்தில் கம்பம் போய் இறங்கினோம். கம்பத்தில் இருந்து மீண்டும் அரசு பேருந்தில் கூடலூர் சென்றோம்.

03.05.2015 பௌர்ணமி நாள் என்பதால் கண்ணகி கோவில் வழிபாடு அன்று நடக்கும் என்ற எண்ணப்படி முதல் நாளே (02.05.2015) அன்று நாங்கள் மலையடிவாரத்திற்க்கு செல்வதே எங்களுடைய திட்டம். கூடலூர் சென்ற பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது கேரள வனத்துறை மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் 04.05.2015 அன்று தான் வழிபாட்டிற்க்கும், மலை ஏறுவதற்க்கும் அனுமதியளிக்கிறர்கள் என்று தெரியவந்தது.

பிறகு நாங்கள் அணைவரும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம். திரும்பி போக வேண்டாம். இன்னும் ஒரு நாள் காத்திருந்து மலை ஏறி கண்ணகி அம்மனை தரிசிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

கூடலூரில் இருந்து (தானி) ஆட்டோவில் மலையடிவாரமான பளியங்குடி கிராமத்திற்குச் சென்றோம். அங்கு கூடலூரை சேர்ந்த தனிநபர் ஒருவருடைய மாந்தோப்பில் கருப்பசாமி கோவிலும் , அதனை ஒட்டி கண்ணகி கோவிலையும் கட்டியிருந்தார். அதில் அன்று தான் அன்னதானம் நடக்க ஆரம்பித்திருந்தது நாங்கள் அந்த கோவிலை வணங்கிவிட்டு அன்னதானத்தில் உணவு அருந்தி அருகில் இருக்கும் ஒரு சிறிய ஓலை விட்டில் (மாந்தோப்பு காவலாளி வீடு ) ஒய்வு எடுத்தோம்.

பிறகு லோயர் கேம்ப் வரை நடந்து சென்று சுமார் (2கி.மீ) குமுளி, கம்பம் தேசிய நெடுஞ்சாலையை பார்த்தோம். தேநீர் அருந்தி இளைப்பாறி மாந்தோப்பில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு வந்து இரவு உணவு அருந்தினோம்.

அன்னதானம் நடக்கும் இடத்தில் நாங்கள் உணவு உண்டது மட்டும்மல்லாது வருகின்றவர்களுக்கு உணவுப் பரிமாறி சிரம தானம் செய்தோம். அன்று இரவு கோவிலுக்கு அருகில் சாலையோரத்தில் கையில் கிடைக்கிற இலைதழைகளையெல்லாம் வைத்து ஒரு படுக்கையை தயார் செய்து படுத்து கொண்டோம்.

மறுநாள் 03.05.2015 அன்று காலையில் எழுந்து அங்கு வருகின்ற (மினிபஸ்) சிற்றுந்தில் ஏறி கூடலூர் சென்றோம். கூடலூரில் இருந்து தானி (ஆட்டோ) வில் சுருளி அருவிக்கு சென்று நீராடினோம். சுருளி அருவி செல்லும் வழியெல்லாம் திராட்சைத் தோட்டமும், அடர்ந்த மரங்களும் இயற்கை எழில் சூழ்ந்து அமைந்து இருந்தன. சுருளி அருவிக்கு வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி தினம் ஆதலால் குளிப்பதற்கும், வழிபடுவதற்கும் நிறைய பேர் வந்துருந்தனர். வழிபடவந்திருந்த பலர் சிறிய செம்பில் சுருளி அருவில் தண்ணீர் எடுத்து சென்று கோவிலுக்கு நீராபிஷேகம் செய்வதை பார்க்கமுடிந்தது.
அங்கேயே காலை உணவு முடித்துவிட்டு தானி (ஆட்டோ) வில் பளியங்குடி மலையடிவாரத்திற்கு சென்றோம். அங்கு அன்னதானத்தில் உணவு அருந்தினோம். சிரம தானம் செய்தோம். முதல் நாள் வெட்டவெளியில் படுத்துவிட்டோம். இரவு நல்ல இடம் தேடுவோம் என்று பளியங்குடி மலைவாழ் மக்களின் அரசு பள்ளிகூடத்தில் அனைவரும் தங்கினோம்.
விடியற்காலையில் மலையேற்ற பயணம் என்ற நினைவோடு தூங்கினோம்,04.05.2015 அன்று அதிகாலை 5 மணியெல்லாம் அனைவரும் எழுந்து தயாராகி மலையேற்ற பயணம் ஆரம்பித்தோம். மலைஅடிவாரத்தில் பளியர் இன பழங்குடியினர் குலதெய்வமான பளிச்சியம்மன் என்ற சிறிய கோவிலுக்கு சென்றோம்.

பளிசியம்மன்
அந்த அம்மன் தான் கண்ணகியை மதுரைப் படைகள் துரத்தி வரும்போது மலைக்குமேல் கூட்டி சென்று தங்கவைத்ததாக சொல்கின்றனர். பளிச்சியம்மன் 3அடி சிமின்ட் சிலையாக கைகுழந்தையுடன் காட்சியளிக்கிறாள்.

அருகிலேயே 3 அடி உயர கண்ணகி சிலையும் உள்ளது.2 சிலைகளுக்கும் சிமின்டால்அனா 6அடி உயர மண்டபம் கட்டப்பட்டுள்ளது .பளிச்சியம்மனை வணங்கி மலையேற்ற குழுவினருக்கு பாதுகாப்பையும,மனவலிமையையும் கொடுக்கும்படி கேட்டுகொண்டோம்.சுமார் 7 மணி வாக்கில் அடி வாரத்தில் நிமிர்ந்து நின்ற பெரிய மலையின் முக்கால் பாகம் ஏறிவிட்டோம்.

எல்லா பாதையும்1 அடி அகலம் உள்ள பாதையாகவே உள்ளது.discovery channel-ல் உள்ள காட்டுக்குள் நுழைவதைப் போல் உணர்தோம்.சில இடங்களில் வழி தவறவிடகூடாதுஎன தமிழக வனதுறையினர் சுண்ணாம்பால் அம்புக்குறியிட்டு வழிகாட்டியிருந்தனர்.

ஒரு மலை முழுவதுமாக முடிந்த பிறகு அங்கிருந்து பார்த்தால் கூடலூர் ஏரி, கூடலூர் நகரம் தெளிவாக கிழே தெரிந்தது. அதற்கு அடுத்து ஒரு சிறிய மலை ஏறி இறங்கிய பிறகு ஒரு சிறிய பள்ளத்தாக்கும், சேறு நிறைந்த நீர் நிலையும் பூச்செடிகளும் என அழகான நந்தவனமாக காட்சியளித்த இந்த இடத்தில் அதிகமாக காட்டு யானைகளின் சாணங்களை நிறைய பார்த்தோம்.

அதில் இருந்து இந்த இடம் யானைகள் உலாவும் இடம் என்பதை உணர்தோம். பிறகு மலை போல் ஒரு சம தளமாக மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் 2 கிலோமீட்டர் நடந்த பிறகு கேரளா மாநில வனத்துறை சோதனை சாவடி வந்தது சோதனை சாவடியில் பிளாஸ்டிக் கேரி பேக்,பிளாஸ்டிக் வாட்டார் பாட்டில் போன்றவற்றையெல்லாம் கண்கொத்தி பாம்பு போல் சோதனை செய்து எங்களிடம் இருந்து அப்புறபடுத்தினர்.

பிறகு நாங்கள் அனைவரும் நிற்கின்ற மலையில் இருந்து அடுத்த மலைக்கு பாலம் போல ஒரு மலை இருந்தது 1 கிலோமீட்டர் நடந்துச் சென்று அந்த மலையை ஏறினோம். ஏறி முடித்தவுடன் இன்னும் ஒரு சிறிய மலை அதில் ஏறும் பொழுது காட்டு யானை கூட்டமாக செல்வதை பார்த்தோம். இறுதியாக எங்கள் முன்னால் இருப்பது நெட்டுகுத்தான உயரமான மலை ஏறக்குறையாக மன அளவிலும்,உடல் அளவிலும் நாங்கள் சோர்ந்தே இருந்தோம்.

இருப்பதிலே இந்த மலை ஏறுவதில் தான் மிக சிரமப்பட்டு ஏறினோம்.ஏறி முடிந்தவுடன் இந்த மலையில் ஜீப் போகும் பாதையும்இணைந்து இருந்தது. இந்த பாதை 12வது வளைவு என கேரள வனத்துறையினர் சொல்கின்றனர்.

இந்த பாதை வழியாக குமுளியில் இருந்து பல பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். 12 வது வளைவில் இருந்து கண்ணகி கோவில் 2 கிலோமீட்டர் இருந்தது. நடந்து சென்றோம். கண்ணகி அம்மனைப் பார்த்தோம் அங்கு நடந்த அன்னதானத்தில் உணவருந்தி ஒய்வு எடுத்தோம்.
பிறகு ஜீப் மூலமாக குமுளி வந்தோம் குமுளியில் இருந்த வேறொரு ஜீப்பில் கம்பம் வந்தோம். கம்பத்தில் இருந்து அவரவர் அவர் வீடுகளுக்கு மன நிறைவோடு சென்றோம்.

இனி கண்ணகி கோவில் வருபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்.

1. இந்த கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு திருநாளை தமிழகத்தின் சார்பில் தேனியை சேர்ந்த கண்ணகி அறக்கட்டளை கட்டளையினர் சிறப்பாக ஒருங்கிணைக்கின்றனர். ஆலயத்திற்கு வரும் சுமார் 50,000 பேருக்கு சுவையாகவும், சூடாகவும் அன்னதானம் செய்கின்றனர் என்பது மிக சிறப்பனதாகும்.

2. கோவில் அமைந்திருக்கும் இடம் தமிழ்நாடு மற்றும்கேரள மாநிலத்தில் எல்லை பிரச்சனைகளால் இன்னும் எந்த மாநிலத்தை சேர்ந்ததுஎன்று முடிவு எடுக்கபடாமல் உள்ளது இதனால் கேரள வனத்துறையினர்,காவல்துறையினர் மலை ஏறி வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றனர் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை முழு நிலவு அன்று நடக்கும்.

இருந்தாலும் இரண்டு மாவட்ட நிர்வாகம் தேனி மாவாட்டம் (தமிழ்நாடு) இடுக்கி மாவாட்டம் (கேரளா) சேர்ந்து தேதியை முன்பின் நிர்ணயிக்கின்றனர். உதரணமாக இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி 03.05.2015 ஆனால் அவர்கள் திருவிழா நிர்ணயித்ததோ 04.05.2015.

3.தமிழக காவல் துறையினர் நடந்து வரும் பக்தர்களுக்கு நட்புடனும்,உதவியுடனும் இருகின்றனர் கேரள காவல் துறையினர் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எடுத்து வரக்கூடது என்பதற்காக அதிகஅளவில் சோதனைகளை செய்கின்றனர்.

4. கேரள அரசு சுகதரமான குடிநீரை மலை பாதையில்ஏற்பாடு செய்துள்ளனர் 5 லட்சத்துக்கு மேல் அளவு கொள்ளளவு உள்ள குடிநீர் குவளைகலை எடுத்து செல்ல அனுமதிகின்றனர்.மருத்துவ குழுவினர் கண்ணகிகோவில் அருகில் முகாம் இட்டு இருப்பது பக்தர்களுக்கு மேலும் சிறப்பானது.

5. நடந்து செல்ல விரும்புபவர்கள் தமிழகத்தில் கம்பம், கூடலூர் கடந்து பளியன்குடி மலைபகுதியின் அடிவாரத்தில் இருந்து நடந்தே செல்லலாம்.சுமார் 5 மணி நேரம் ஆகும். அதிகாலையில் புறப்பட்டால் ,மாலைக்குள் திரும்பிவிடலாம்.

6. கம்பம் நகரில் இருந்து ஜீப்பின் மூலமாக குமுளி வழியாக கண்ணகி கோவிலை அடையலாம். கம்பத்தில் இருந்து குமுளி 22 கிலோமீட்டர் குமுளியில் இருந்து கோவில் 14 கிலோமீட்டர் பெரும்பாலான கிராம மக்கள் இந்த மலைப் பாதையில் நடந்தே வந்து நடந்தே செல்கின்றனர்.

ஜீப் பாதை அடிக்கடி மழை பெய்வதால் சகதியாகி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. மலையிலும் அடிக்கடி மழை பெய்வதால் நடந்து போகின்றவர்களுக்கு மேலும் தாமதமாகிறது. எனவே எந்த பிரச்சனையில்லாமல் கோவிலுக்கு செல்ல அதிகாலை 3 மணிக்கு கிளம்பிவிடுவது நல்லது.

உலகத்தில் உள்ள ஆன்மிக அன்பர்களும் கண்ணகி கோவிலை பளியன்குடி மலைப்பாதை வழியாக தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்ப்பது நல்லது.

7. இக்கோவில் சேரன் செங்குட்டுவனால் அமைக்கப்பட்டு இலங்கை சிங்கள மன்னன் கஜபாகு சிறப்பு விருந்தினராக இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார் என்று வரலாறு சொல்கிறது. மேலும் மணிமேகலையும் கண்ணகியை இங்கு வந்து சந்தித்து அறிவுரையும் ஆசியும் பெற்று சென்றாள், என்று மணிமேகலை காப்பியம் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலேயே 100% அதரபூர்வமான 1800 நூற்று ஆண்டுகள் முன்னரான கோவில் இது ஒன்றே ஆகும்.

தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#கேரளா  #கண்ணகி #அறக்கட்டளை  #பளிச்சியம்மன் #மங்களதேவி #மலை #kerala #mountain #mangaladevi #kannagi #trust #theni #temple #artical

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்