அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 2௦ விஷயங்கள்…..

9cc27ab9aaaab847bc1958a93b67d066

1. அடுக்கு மாடி கட்ட போகும், அல்லது கட்டி இருக்கின்ற அடி மனை பரப்பு நிலத்தை முதலில் சட்ட ஆய்வு, கள ஆய்வு செய்ய வேண்டும்.

2. தற்போதைய நில உரிமையாளருக்கு அதற்கு முன் கொடுத்த கிரயங்களில் எந்தவித தடையும் இல்லாமல் சொத்து இறங்கி இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

3. பட்டா, சிட்டா, FMB, அ.பதிவேடு, TSLR பட்டா, சர்வே எண், நகர சர்வே எண், புதிய சர்வே எண் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் புதிய மற்றும் பழைய சர்வே எண்களை வருவாய் ஆவணகள் மூலம் தெளிவாக உறுதிப் படுத்தி கொள்ள வேண்டும்.

4. அடிமனைக்கும், கட்டிடத்திற்கும் (அ) வெறும் கட்டிடத்திற்கு DTCP அல்லது CMDA அப்ரூவல் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். DTCP CMDA இணைய தளத்தில் போட்டு இருப்பார்கள் அதனை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

5. ஆழமாகவும், தெளிவாகவும் உறுதி செய்ய CMDA \ DTCP அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விசாரிக்கலாம். எப்பொழுது சென்றாலும் காலை 1௦ மணிக்கு முதல் ஆளாய் விசாரிக்க சென்று விடுங்கள்.

6. காலை- 1௦ – 12 மணி வரை சென்னை தமிழகத்தின் பிற பெரு நகர, அங்கீகார அமைப்புகள் இது போன்ற விசாரணைகளுக்கு பதில் சொல்லவும். ஆவணங்களை ஒப்பிட்டு காட்டவும் கவுன்சிலிங் கவுண்டர் என்று ஒன்று வைத்து இருப்பர்.

7. தீயணைப்பு துறையில் இருந்து வாங்கப்படும் பயரிங் சான்றிதழ் ( Firing Certificate) வாங்கப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதனுடைய மெய்தன்னையை தீயணைப்பு துறை அலுவலகத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும்.

8. பில்டர்கள் 1+2 என்று கட்டிட அனுமதி பெற்று 1+3 என்று கட்டிடம் கட்டி வைத்து இருப்பர். அதனை தீர விசாரித்து அங்கீகரிக்கப்படாத வீட்டை நிச்சயம் வாங்காமல் தவிர்க்கவும்.

9. வீடு வாங்குபவர் தங்களுக்கு பத்திரம் பதிவு செய்யும் போது கிடைக்கப்படும் UNDIVEDED SHARE ( பிரிக்கபடாத பங்கை ) பற்றி முழுமையாக விவரம் தெரிந்து இருக்க வேண்டும்.

10. 5௦௦௦ சதுர அடி பரப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு 1௦ பேருக்கு கட்டுகிறார்கள் என்று வைத்து கொண்டால் ஒரு நபருக்கு 5௦௦ சதுர அடி வீதம், 1௦ பேருக்கும் 5௦௦௦ சதுர அடி நிலத்தை பிரிக்கபடாத பங்காக பத்திரம் போட்டு தருவர்.

11. உங்கள் இடம் இந்த குறிப்பிட்ட 5௦௦ சதுர அடி என்று உங்களுக்கு காண்பிக்கப்படாது. உங்களுடைய 5௦௦ ச.அடி, இந்த 5௦௦௦ சதுர அடிக்குள் இருக்கிறது. என்றே பத்திரம் போடுவது தான். பிரிக்கப்படாத பங்கு என்பர்.

12. அடுக்குமாடி வீடுகளில் கட்டபட்டு இருக்கும் அறைகளில் 1:8 என்ற விகிதத்தில் ஜன்னல் கட்டப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்யவும். 1௦௦ சதுர அடி அறை என்றால் 8 அடிக்கு ஜன்னல் இருக்க வேண்டும்.

13. வீட்டை ஒப்படைக்கும் போது வீட்டிற்கான இன்சூரன்ஸ் போடப்பட்டு இருக்கின்றதா என்று சோதித்து கொள்ள வேண்டும்.

14. உங்களுக்கான பொதுவான இடம், பார்க்கிங் போன்றவை தெளிவாக குறிப்பிடபட்டு இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும்.

15. அப்ரூவல் பிளானில் உள்ள படியே தான் நீங்கள் வாங்க போகும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருக்கிறதா என்று சோதியுங்கள் .

16. பில்டர், நிலத்தின் உரிமையாளரா, பவர் ஆப் ஆடர்னியா? அவருக்கு நிலத்தின் முழு உரிமை இருக்கிறதா என்று பாருங்கள் .

17. ஒட்டு மொத்த பிரிக்கப்படாத பங்கும், சரியாக அனைத்து வீடு வாங்குபவர்களுக்கும் சென்று விட்டதா என்று பரிசோதியுங்கள்.

18. கட்டிடம் முடிக்கப்பட்டு விட்டதா என்று நிறைவு சான்று ( COMPLTED CERTIFICATE) பெறப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யுங்கள்.

19. பிட்லர், அடுக்குமாடி குடியிருப்பின் TERRACE ல்லோ, பொது ஏரியாவிலோ இடத்தை கையிறுப்பாக வைத்து இருக்க உரிமையும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

20. கட்ட போகும் வீடுகளை வாங்கும்போது பில்டருக்கும் உங்களுக்கும் போட போகும் அக்க்ரீமென்ட்டில் தான் எல்லாம் இருக்கிறது. சிறிய எழுத்துகளாக இருக்கிறது. என படிக்கமால் விட்டு விடாதீர்கள்.

குறிப்பு
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#certificate #undivided #share #deed #dtcp #survey #a-register #power #approved

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்