பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகளை வரன்முறை திட்டத்தின் கீழ் டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி?


1.கடந்த 30ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு இருந்த பஞ்சாயத்து அங்கீகார மனைகள்,NOC மனைகள்,அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் 2016அக்டோபரில் தடைசெய்தது.

2.அதன்பிறகு 2017 வரை மேற்படி மனைபிரிவுகள் வாங்கவோவிற்கவோ முடியாமல் பத்திரபதிவு அலுவலகங்களில் பதிவும் செயயமுடியாமல் அப்படியே நிலுவையில் இருந்தது.

3.2017 இறுதியில் அரசு ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்கள்,மேற்படி இடங்ளில் மனை வாங்கியவர்கள் தொடர் கோரிக்கைகளை ஏற்று வரன்முறை படுத்துதல் அரசு உத்தரவை (அரசாணை எண்.78) போட்டது.

4.மேலும் அந்த அரசாணை சில முடிவுகள் களநிலவரத்தோடு ஒத்துபோகவில்லை வரன்முறைபடுத்துதல் கட்டணமும் அதிகமாக இருந்தது.அதனையும் மக்கள்,ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்கள் தொடர் கோரிக்கைகள் ஏற்று 78 அரசாணையில் திருத்தங்களை கொண்டுவந்தது.

5.வரன்முறைபடுத்துதலுக்கான தேதியை DTCP அலுவலகம் இதுவரை மூன்று முறைகெடு வைத்து மக்களின் மனுக்களை பரிசீலிக்கிறது.தமிழகம் முழுதும் இன்னும் அதிக மனைபிரிவுகள் இருப்பதால் அவற்றை எல்லாம் வரன்முறைபடுத்த இன்னும் கால அவகாசம் டிடிசிபி அலுவலகம் கொடுக்க வேண்டும்.

6) உங்களிடம் இருக்கும் மனைகள் இரண்டு முறைகளில் வரன்முறைபடுத்தபடுகிறது.அ)புரோமொட்டர் வரன்முறைபடுத்துதல் ஆ)மக்கள் வரன்முறைபடுத்துதல்

7)மனைபிரிவுகளை உருவாக்குபவர் தன் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்தது போக விற்பனையாகாமல் மீதி இருக்கும் மனைகளை
வரன்முறைசெய்தல் புரோமோட்டர் ரெகுலேஷன் ஸ்கீம் ஆகும்.

8)மனைகளை வாங்கிய பொதுமக்கள் தங்கள் மனைகளை மட்டும் வரன்முறைபடுத்துதல் இன்னொரு வகையாகும்

9)முதலில் மக்கள் மனைகள் வரன்முறைபடுத்துதலை பார்ப்போம்.முதலில்DTCP. அலுவலகம் சென்று உங்களது மனைகளுக்கு வரன்முறைபடுத்துததல் அங்கீகாரம் கிடைக்குமா?அல்லது மேற்படி மனைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வருகிறதா(மலை,நீர்நிலை போன்று) அதனால் தற்போது மனு செய்தால் கிடைக்காது போன்ற நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

10)பிறகுஆன்லைனில் www.tnlayouts.com என்கிற இணையதள லிங்கில் ஆன்லைன் அப்ளை செய்ய வேண்டும்.மேற்படி லிங்கில் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்:

அ. தனி மனைக்கான டி.டி.சி.பி உள்நுழைவு,
ஆ. முழு மனைப்பிரிவிற்கான டி.டி.சி.பி அங்கீகார நுழைவு.
இ. தனி மனைக்கான சி.எம்.டி.ஏ உள்நுழைவு,
ஈ .முழு மனைப்பிரிவிற்கான சி.எம்.டி..ஏ உள்நுழைவு.
இதில் தங்களுக்கு தேவையான லிங்கில் சென்று அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

மேற்படி மனுசெய்தலுக்கு ஒருமனைக்கு ரூபாய் 500ஆகும்.
11) Engineer வைத்து தங்கள்மனையை மட்டும் மனைபிரிவில் இருந்து தனித்து காட்டி வரைபடம் அம்மோனியா பிரிண்டில் தாயார் செய்ய வேண்டும்.மேற்படி வரைபடம் அரசின் சர்வே எண் புலப்படத்தோடு தீர்க்கமாக பொருந்தனும்.
இந்த வரைபடத்தை A3 அளவில் 3 புளு பிரிண்ட் எடுக்க வேண்டும்.

12).மேற்கண்ட வரைபடம் மற்றும் நம்முடைய ஆவணம், மூல ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா, புலப்படம் ஆகியவற்றில் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பம் பெற வேண்டும்.

13)மேற்படி மனைகளுக்கு தங்கள் பெயரில் பட்டா கட்டாயம் மாறி இருக்க வேண்டும்.குறைந்தது கூட்டுபட்டாவில் ஆவது தங்கள் பெயர் இருக்க வேண்டும்.

14)மனை நஞ்சையில் இருந்து இதுவரை பட்டா பெயர்மாற்றம் செய்யாமல் இருந்தால் VAO வரன்முறை அங்கீகாரம் வாங்கி வந்தால் பட்டா தருகிறேன் என்று சொல்கிறார்.பட்டா இல்லாமல் அங்கீகாரம் கொடுத்தால் சட்ட குழப்பங்கள் வரும்.இது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளின் களநிலவரம் (இதற்கு அரசு தெளிவான வழிகாட்டுதலை கொடுத்தால் நல்லது)

15)மேற்படிஆவணங்கள்அனைத்தும் வைத்து DTCP ஆபிஸில் மனு செய்ய வேண்டும்.அவர்கள் அதனை சரிபார்த்து முத்திரையிட்டு உள்ளாட்சி துறைக்கு அதாவது ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/பேரூராட்சி க்கு Forward செய்வார்கள்.

16)பிறகு உள்ளாட்சி துறை அலுவலகத்தில் நம்முடைய மனுக்களை கொடுத்து. மனைக்கான வரன்முறைகட்டணத்தை செலுத்த வேண்டும்.

17)பிறகு அங்கிருந்து மீண்டும் டிடிசிபி அலுவலகத்திற்ககு நம்முடைய மனு செல்ல வேண்டும்.அங்கு நம்முடைய வரைபடத்தில் டிடிசிபி முத்திரையிட்டு அங்கீகார எண்ணும் வழங்குவார்கள்.

18)கோவை,திருப்பூர் பகுதிகளில் ஊராட்சி பேரூரராட்சி அலுவலகங்கள் பிட் நோட்டீஸ் கொடுத்து மனைவரன்முறைபடுத்த பஞ்சாயத்து ஆபிஸ் க்கு அழைக்கிறார்கள்.மக்களும் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்த ஆவணங்களை கொண்டு செல்கிறார்கள்.

19)அங்கு ஆன்லைனில் டிடிசிபியில் ரூ500 கட்டிய இரசீதை காட்டினால் போதும் பஞ்சாயத்திற்கான சதுரடிகட்டணத்தை வாங்கி கொண்டு பஞ்சாயத்து முத்திரையிட்டு அனுப்பிவிடுகிறார்கள்.மக்களும் வரன் முறை அப்ரூவ்டு முடிந்துவிட்டது என்று வீட்டிற்கு வந்துவிடுகின்றனர்.

20)மேற்படி மனை டிடிசிபியில் தடை செய்யப்பட்ட பகுதியா? டிடிசிபியில் விசாரிப்பது இல்லை,பட்டா இருக்கிறதா என்று பார்ப்பதும் இல்லை வரைபடங்கள் வரைவதும் இல்லை.டிடிசிபி அலுவகமே அந்த மனுக்கள் செல்வதே இல்லை.கடந்த ஆறுமாதாமாக அந்த பகுதியில் இவ்வாறு நடந்துகொண்டு இருக்கிறது.(அந்த மக்கள் டிடிசிபி அப்ருவ்டு வாங்காம மீண்டும் பஞ்சாயத்து அப்ரூவ்டு வாங்குறாங்க போல)

21) புரோமட்டர் வரன்முறைஅப்ரூவல் பற்றி அடுத்து கட்டுரையில் எழுதுகிறேன்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#பஞ்சாயத்து #அங்கீகாரம்  #வரன்முறை #மனைகள் #NOC #பத்திரபதிவு #ரியல் #எஸ்டேட் #புரோமொட்டர் #அப்ரூவல் #முத்திரை #மனு #அடங்கல் #பட்டா #புலப்படம் #ஊராட்சி #signature #promoter #approved #dtcp #office #land #deed #register #fmb #document #panjayat #real #estate #plot #stamp #sale #property.

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்