அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் இறைச்சியும் பாலும் கொடுக்க கோரிக்கை!!

உணவும் அரசியலும்:
சைவ உணவு, தாவர உணவு மட்டும்தான் சிறந்த உணவு விலங்குகளின் மூலம் வரும் புரோட்டின், கொழுப்பு, போன்றவை உடலுக்கு தீங்கானது என்ற உயர் சாதி திருத்தியவை இன்று வரை அவர்கள் பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

அசைவ உணவை உண்ணும் போது காம எண்ணங்கள், பய உணர்ச்சிகள் அதிகமாகும் என்ற ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டுகளை வைக்கின்றனர்.
முட்டை,மீன்,கோழி மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் இறைச்சி தீங்கானது என்று அவ்வபோது பிரச்சாரம் செய்யபடுகிறது
891ff197c4a67ed1b192819f91658666

உண்மையில் உணவில் உயர்வு தாழ்வு என்று ஏதுவும் கிடையாது.எல்லாரும் ஒரே விதமான உணவு பழக்கத்தை கொண்டு இருந்தால் பழக்கத்தில் உள்ள உணவுக்கு பெரும் பற்றாகுறை ஏற்படும்..

உலகத்தில் நிலவும் பல்வேறு விதமான உணவு ப ழக்கத்தினால் தான் உணவு பஞ்சம் என்பதே இல்லாமல் இருக்கிறது.

அசைவ உணவுகள் ஆரோக்கியமாது என்று பல ஆய்வுகள் மற்றும் டாக்டர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர்..பேலியோ போன்ற உணவு முறைகள் இறைச்சி உணவை போற்றுகின்றன..

இந்த நிலையில் பகுத்தறிவும் அறிவியல் பார்வையுமே
உணவை உணவாக மட்டுமே பார்க்கின்ற பார்வையை தமிழத்தில சொல்லிக் கொடுத்துள்ளது.

தமிழகமும் சத்துணவும்:
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான், பகுத்தறிவும், ஆராய்ச்சியும், பரந்து விரிந்த பார்வையும் கொண்ட பெரும் தலைவர்களை கொண்ட மாநிலம் ஆகும்.இந்தியாவுக்கே வழிகாட்டி திட்டமாக விளங்கும்
மதிய உணவு திட்டத்தை முதல்வர் காமராஜர் ஏழை மாணவர்களுக்கு கொண்டு வந்தார்.

முதல்வர் எம். ஜி. ஆர். அதனை சத்துணவு திட்டமாக மாற்றினார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் அதனுடன் நல்ல புரதம், நல்ல கொழுப்பு, இருக்கின்ற வைட்டமின், கால்சியம், மினரல்ஸ் இருக்கின்ற முட்டையை தினமும் சத்துணவில் சேர்த்தார்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சத்துணவு பற்றிய கருத்துகளில் வேறு எண்ணம் இருந்ததால் கொஞ்சம் தடுமாறி போனார். ஆனால் அடித்தட்டு மக்களின் உணவு பழக்கத்தின் நாடிதுடிப்பை உணர்ந்ததால் ,உடனே பழைய முறையில் சத்துணவில் தினமும் முட்டையை அனுமதித்தார்…
இன்று கிராமப்புற மாணவர்களாக இருந்து பெரிய அரசு பெரிய நிறுவனங்களில் பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் சத்துணவு திட்டத்தில் உணவுகளை உட்கொண்டவர்களாவே இருப்பர்.

ஆரம்ப பள்ளியில் படிக்கும் இன்றைய. பள்ளி மாணவன் 25 கிலோ எடை இருந்தால் அவனுக்கு ஒரு நாளைக்கு 1கிலோ எடைக்கு 1கிராம் புரோட்டீன் தேவை என்று அறிவியல் சொல்கிறது.

எனவே அம்மாணவனுக்கு ஒரு நாளைக்கு தேவைபடும் 25கிராம் புரோட்டீனில் 5 கிராம் சத்துணவு திட்ட முட்டை மூலம் தமிழக முதல்வரால் கொடுக்கப்படுகிறது என்பதே நன்றியுடன் சொல்ல வேண்டிய உண்மை.

ஏன் இறைச்சியை சத்துணவில் சேர்க்க வேண்டும்? 9 காரணங்கள்
பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு அதிக புரோட்டின் நல்ல கொழுப்பு, விட்டம்மின், மினரல்ஸ்கள் நம் உடலுக்காக கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்
.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அதனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் தவிர்கின்றனர். அதனால் மேற்படி உணவை குறைந்த அளவே சேர்த்து கொள்கின்றனர்.

மேற்படி உணவை மாணவர்கள் சத்துணவில் எடுத்துக்கொள்ளும் போது மாணவர்களின் உள்ளுறுப்புகள், & உடல் வளர்ச்சிகள் நன்றாக இருக்கும்.

அரசு பள்ளிகளில் இறைச்சி உணவு பழக்கம் உடையவர்களே படிக்கிறார்ள்
மேற்படி உணவை மாணவர்கள் உட்கொள்வதால், கண்கள் மற்றும் மூளை நன்று வளர்ச்சி அடையும்அதனால் அறிவு கூர்மை அடையும்.
மேற்படி உணவினால், மாணவர்கள் விளையாட்டுதுறை,N.C.C,Scouts போன்ற துறைகளில்சிறப்பாக இயங்க உதவியாக இருக்கும்.

இறைச்சி உணவு மிலிட்ரி,போலிஸ்போன்ற பயிற்சிகளிலும்,அரசு மாணவர் மாணவ மாணவி விடுதிளிலும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால்
பால் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு வழங்கபட்டு கொண்டிருப்பதை பார்க்கிறோம்
பால், மீன், இறைச்சி போன்ற உணவுகளினால், மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்.மாணவர் விடுப்புகள் குறைந்து விடும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்-தீபங்கரா புத்தர் அறக்கட்டளை
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இறைச்சி  #சத்துணவு #விட்டம்மின் #முதலமைச்சர் #அரசு #பள்ளி #goverment #school #chidren #lunch  #food #Meat #request

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்