செல்வங்களை இழக்கும் 16 தவறுகள் மற்றும் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் எச்சரிக்கைகள்!

1. “வாங்கிய மற்றும் பூர்விக சொத்துக்களை பெரும்பாலானவர்கள் பராமரிப்பதும், கவனிப்பதும் இல்லை”. அதற்கு நேரமில்லை. இருக்கின்ற வேளைகளில் இதனைச் செய்ய முடியவில்லை” என்று தங்களுக்குளே சாக்குப் போக்குகளில் இருந்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களுக்குச் சொத்துக்களை பராமரிக்கத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதைத் தான் முடியவில்லை என்று சொல்கின்றனர்.”

2. “சொத்துக்கள் வெறும் “PROPERTY” சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அதனுடன் “PEOPLE” மற்றும் “PREPARATION” சம்மந்தப்பட்டது. PREPARATION க்கு மெனக்கெடவும் தயார் இல்லை.”

3. “பெரும்பாலானவர்கள் சொத்துக்களை பராமரிப்பதில் “REACTIVE MANAGEMENT” யை செய்கின்றனர். (REACTIVE MANAGEMENT என்றால் சொத்து சமந்தமாக அதனை விற்க முற்படும் போதே கடன் பெறும் போதே, அல்லது சிலர் ஆக்கிரமிக்கும் போதோ, அதற்குத் தேவையான சில பராமரிப்புகளை செய்ய முற்படுவது. ஆனால் செய்ய வேண்டியது PROACTIVE MANAGEMENT. (சொத்துக்குத் தேவையான எல்லா விசயங்களையும் நமக்கு உடனடியாக தேவைப்படாத போதும் முன் கூட்டியே தயார் செய்து கொள்வது)”.

4. “பெரும்பாலானவர்கள் தங்க சுரங்க ரியல் எஸ்டேட் முதலீடுகளைப் பராமரிப்பின்மையால் மற்றும் அக்கறையின்மையால் கற்சுரங்க விலைக்கு விற்று விடுக்கின்றனர்.”

5. “பெரும்பாலான ரியல் எஸ்டேட் முதலீட்டார்கள் சீக்கிரம் பணக்காரர்களாக வேண்டும் என்று மனப்பால் குடித்துக் கொண்டே “ JUNK ASSET” களில் முதலீடு செய்து வைத்திருக்கின்றனர். ”

6. “பல ரியல் எஸ்டேட் முதலீட்டார்கள் “WEALTH BUILDING MINDSET” இல்லாததால் சொத்துள்ள ஏழைகளாகவே இருக்கின்றனர்.”

7. சொத்துக்கள் அதிஷ்டம் இருந்தால் கூடும். ஈர்ப்பு விதியினால் அதிகரிக்கும் என்று உருவகித்துக் கொண்டு சொத்து சேர்த்து கொள்வதற்கு இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர்.”

8. “சொத்து முதலீடுகள் ஒருமுறை தோல்வி அடைந்தாலே எதனால் தோல்வி வந்தது என்று ஆராய்ந்து அதனைச் சரி செய்து மீண்டும் முயற்சி செய்ய முன் வருவதற்கு நெஞ்சில்லை.”

9. “ரியல் எஸ்டேட் முதலீட்டில் காத்திருக்கும் காலத்தை, இது தான் எதார்த்தம் என்று, கொள்ளாமல் பலா காயை விட கலா காயே சிறந்தது என்று விட்டுக் கொடுத்து விடுகின்றனர். ”

10. “நாம் வாழப்போகும் வீடுகளைத் தேர்ந்தெடுக்கும் போது நல்ல ஏரியா, மோசமான வீடு, அல்லது நல்ல வீடு, மோசமான ஏரியா என்று பலர் தேர்ந்தெடுக்கின்றனர்.”

11. “குடியிருக்க வீடு வாங்கும் போது வீட்டைப் பார்த்த உடனே அதில் சொக்கி, காதலாகி, பொறியில், மாட்டிக்கொள்கின்றனர்.”

12. “நடுத்தர மக்கள் பெரும்பாலும் சொந்த வீடு வாங்குவதாக எண்ணி யானை கட்டி தீனி போடும் செலவையே வாங்குகின்றனர்.”

13. “வீடு வாங்கும் பலர் தேர்ந்தவர்களாலேயே நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏமாற்றப் படுகின்றனர்.”

14. “முள்ளைப் பார்த்து மலரைப் பறிக்காத மூடரைப் போல உங்களைக் குபேரனாக்கும் முதலீடுகளில் இருக்கின்ற ரிஸ்க்குகளை பார்த்து முயலாமல் இருக்கின்றனர்.”

15. “குபேர முதலீடுகளில் முடிவெடுக்கும் பொழுது எப்பொழுதும் மூளையைக் கேட்டு முடிவெடுத்து தோல்வி அடைகின்றனர்.”
16. “சிறிய முதலீடுகள் என்று எதுவுமில்லை, முதலீட்டாளர்கள் தான் சிறியதாக யோசிக்கின்றனர்.”

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#property #proactive #management #preparation #junk-asset #பூர்விகசொத்து #ரியல்எஸ்டேட் #சொத்து #முதலீடு #building #mindset #நிலம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்