வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் 8)

a68c3878542efbcffbcf246008bacb55.jpg

திறம்பட சந்தைப்படுத்துதல். – பகுதி -3

எப்படி அணுக வேண்டும்?

விற்பனையாளர்களுக்கு இரண்டு குணங்கள் அவசியம். முதலாவது உத்வேகம், விற்பனையை முடிக்க வேண்டும் என்கிற வேகம்.
இரண்டாவது குணம், வாடிக்கையாளர் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்? அவருடைய ஆர்வம் என்ன என்பதைப் புரிந்து கொள்கிற எம்பதி என்கிற உணர்வு.

சில வெற்றிகரமான விற்பனையாளர்களைக் கவனித்தால் தெரியும். அவர்களிடம் இந்த இரண்டு குணங்களுமே கூடுதலாக இருக்கும். அவர்களின் வெற்றிக்கு இரண்டு குணங்களுமே நிறைவாக இருப்பது தான் காரணம். இரண்டும் அவசியம்.

வேறுசில விற்பனையாளரிடம், தன்னார்வம், சுயமுனைப்பு போன்றவற்றை உள்ளடங்கிய உத்வேகம் இருக்காது. தவிர வாடிக்கையாளர்களின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் புரிந்துணர்வும் இருக்காது. பிறகு இரண்டுமே இல்லாவிடட்டால் எப்படி? இந்த இரண்டு முக்கிய குணங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்று இல்லாமலிப்பவர்களும் உண்டு. இப்படி, இந்த இரண்டு குணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, விற்பனையாளர்களிடம் எந்தக் குணம் எந்த அளவில் இருந்தால், விளைவு எப்படி இருக்கும் என்பதை ஒரு நான்கு சதுரப் படமாகப் பார்க்கலாம்.
………………………………………………………………………………………………..

விற்பனையாளரியிடம் இருப்பது :
1.விற்பனை ஆர்வமும் வேகமும் புரிந்துணர்வும் அதிகம்.
2.அதீதமான புரிந்துணர்வு வேகம் அடுத்த பட்சமே.
3. இரண்டு குணங்களுமே குறைவு.
4. தன் வேலை மட்டுமே குறி, புரிந்துவுணர்வே இல்லை.
………………………………………………………………………………………………..
விளைவு:

1. அமோக விற்பனை.
2.வேலை ஆகாது.
3.அலட்சியம்.
4.பதற்றமே மிச்சம்
………………………………………………………………………………………………..

சுய பரிசோதனை கேள்விகள்:
நாம் சிறந்த விற்பனையாளரா என்பதை நாம் செய்யும் விற்பனை எண்ணிக்கை மற்றும் தொகைளை ஒப்பிட்டு முடிவு செய்யலாம். நாம் சிறந்த விற்பனையாளர் என்றால், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம்மிடம் இருந்து எப்படிப்பட்ட பதில்கள் வரவேண்டும்.
1. நீண்ட காலமாக விடாமல் நம் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. எத்தனை வாடிக்கையாளர்கள், நம் சேவைக்காக, நாம் தான் வேண்டும் என்று நம்மைத் தேட, நமக்காக காத்திருக்க, சற்றுக் கூடுதலாக செலவானாலும் பரவாயில்லை என்று இருக்கிறார்கள்.
3.எத்தனை வாடிக்கையாளர்கள் நம் சேவை குறித்து மகிழ்ந்து பரிசுகள், பாராட்டுகள் தந்திருக்கிறார்கள்? நம் மேலாளரிடம் நம்மைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள்?
4. எத்தனை வாடிக்கையாளர்கள், அவர்கள் நண்பர்களை, நம்மிடம் நல்ல சேவைக்காக பரிந்துரைத்திருக்கிறார்கள்? அனுப்பியிருக்கிறார்கள்?
5.எத்தனை வாடிக்கையாளர்கள், அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக காத்திருக்கிறார்கள்?
6.நம் பரிந்துரைகள் / ஆலோசனைகளுக்காகவே காத்திருப்போர் எத்தனைபேர்?
………………………………………………………………………………………………..
நல்ல விற்பனையாளருக்கான பத்து கட்டளைகள்:
புத்தகம் முழுவதும் தெரிவித்ததை சுருக்கமாக, நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் பின்பற்றத்தக்க கட்டளைகளாக எப்படிச் சொல்லலாம்?
………………………………………………………………………………………………..
மலர்ச்சியாக இரு முகத்திலும் மகிழ்ச்சி:
உள்ளத்திலும், உடைகள் சுத்தம், நேர்த்தி வார்த்தை நடவடிக்கையில் உற்சாகம் குறையாமலிருப்பது.
………………………………………………………………………………………………..
தேடிக்கொண்டேயிரு:
எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும், எவ்வளவு உயரம் போன பிறகும், புதிய வாவாக்கள் (பிராஸ்பெக்டஸ்) தேடுவதை நிறுத்தாது.
………………………………………………………………………………………………..
தொடர்பு கொள்:
முயன்று முடிவெடுக்கக்கூடிய சரியானவர்களை விற்பனையை தொடர்பு கொள்வது.
………………………………………………………………………………………………..
புரிந்து கொள்:
தேவை என்ன, சூழ்நிலை என்ன? எது விற்பனையை முடித்து வைக்கும் என்பதைப் புரிந்து கொள்வது.
………………………………………………………………………………………………..
தெளிவுபடுத்து:
எது சரியானதோ, பயனளிக்கும் தகவலோ அதை ஏதுவான முறையில் தெரிவிப்பது
………………………………………………………………………………………………..
அயராதே :
அலட்சியம் மற்றும் மறுப்புகண்டு அயராதிருத்தல் மனம் தளராது முயற்சித்தல்
………………………………………………………………………………………………..
தொடர்ந்து கேள் நேரத்தை முடி :
வெவ்வேறு விதங்களாக, விடாமல் விண்ணப்பித்தல் சரியான நேரத்தை, சந்தர்ப்பத்தை கண்டுணர்ந்து, விற்பனையை முடித்தல்
………………………………………………………………………………………………..
தொடர்பில் இரு :
விற்ற பின்னும், தொடர்பு கொள்ளுதல், மரியாதை, முக்கியத்துவம், தகவல் கொடுத்தல்
………………………………………………………………………………………………..
தொடர்ந்து பயில் :
தன் நிறுவனம், பொருள்கள் மற்றும் போட்டியாளர்கள் சேவை, தொழில்நுட்பம், விலைகள் வரக்கூடிய மாறுதல்கள் முதலியவற்றைத் தொடர்ந்து பயில்வது.
………………………………………………………………………………………………..
நல்ல பண்புகள், குணங்கள் எவை என்பதைத் தீர்மானியுங்கள்:
உங்கள் விற்பனை முறையில், கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விசயங்களைப் பற்றி கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது கலாசாரம், சூழ்நிலை, சந்தை சூழ்நிலை, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம்
அனுமதித்துள்ள அல்லது வழங்கியுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப கூடு கசேர்த்துக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்.
………………………………………………………………………………………………..
தகுந்த முன் தயாரிப்புகளுடன் சரியான நேரத்தில் செல்லுங்கள்:
நீங்கள் தினசரி அலுவல்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் முழு அளவில்தயாராக இருக்கின்றீர்களானன்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
……………………………………………………………………………………………
…..
வாக்குறுதியைக்காப்பாற்றுங்கள்:
உங்களால் நிறைவேற்ற முடியாத உறுதிமொழியை கொடுப்பதைவிட, என்னால் இயலாது என்று மறுத்துவிடுவதே சிறந்தது.
………………………………………………………………………………………………
..
வேலைமுடியுங்கள்:
எந்த வேலையைத் துவக்கினாலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடியுங்கள்.
………………………………………………………………………………………………
..
மரியாதை கொடுப்பதுடன், பணிவாக இருங்கள்:
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருக்கும் இன்முகத்துடன் வாழ்த்து தெருவிங்கள். எல்லோரிடத்திலும் மரியாதையாக இருங்கள். தயவுசெய்து என்ற வார்த்தையே அடிக்கடி பயன்படுத்துங்கள். அலுவலுத்துக்கு ஏற்ற உடையே அணியுங்கள்.
………………………………………………………………………………………………
..
பெருந்தன்மையுடனும் இன்முகத்துடனும் நன்றி கூறுங்கள்:
நன்றி என்ற வார்த்ததையே அடிக்கடி பயன்படுத்துங்கள் சடங்கு போல ஒப்புக்கு நன்றி கூறாமல் மனந்திறந்து கூறுங்கள். மற்றவர்கள் கூறுவதில் முழு அளவு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட அவர்கள் கூறிய கருத்துக்காக நன்றி தெரிவியுங்கள்.
……………………………………………………………………………………………
…..
மற்றவர்களை வியப்பிலாழ்த்துங்கள்:
மற்றவர்களின் எதிர்பார்ப்பை விட அதிக அளவு வேலை செய்து அவர்களை வியப்பிலாழ்த்துங்கள். நிச்சயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே செல்லுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே, ஒப்புக்கொண்ட வேலையை செய்து முடியுங்கள்.
……………………………………………………………………………………………….
.
ஊகித்துக்கொள்ளதீர்கள்:
சந்தேகத்தைக் கேளுங்கள். நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான செய்யும் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பின்னர் வருத்தம் தெரிவிப்பதை விட, பலமுறைகேட்டு உறுப்படுத்திக் கொண்டு சரியாக செய்வது சிறந்தது.
……………………………………………………………………………………
…………..
ஒவ்வொருவரிடமும் கற்றுக் கொள்ளுங்கள்:
மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. பிறருக்கு கற்றுக்கொடுப்பதை, எல்லோருமே விரும்புவார்கள். எதிராளியார் என்று பார்க்காமல், எல்லோரிடமும் கற்றுக்கொள்ளுங்கள்.
பாதகமான வார்த்தைகளுக்கு பதிலாக, சாதகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்

இந்தப் பயிற்சி நீங்கள் இப்போது பயன்படுத்தி வரும் பாதகமான வார்த்தைகளுக்கு பதிலாக, சாதகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முதல் பிரிவில் அவற்றுக்கு பதிலாக பயன்படுத்தும் சாதகமான வார்த்தைகளை எழுதுங்கள். இரண்டாவது பிரிவில் அவற்றுக்கு பதிலாக பயன்படுத்து சாதகமான வார்த்தைகளை எழுதுங்கள்.
………………………………………………………………………………………………..

தற்போது பயன்படுத்தும் பாதகமான வார்த்தைகள்:
*என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
*நான் சோர்வுற்றதாக உணர்கின்றேன்.
*எனக்கு கோபம் வருகிறது.
*எனக்கு அவன் மீது நம்பிக்கை இல்லை.
*இந்தப் பொருளின் விலை மிக அதிகம்.
*நான் தவறான வேலையில் ஈடுபட்டுள்ளேன்.
………………………………………………………………………………………………
..
இதற்கு மாற்றாக சாதகமான பாதகமான வார்த்தைகள்:
*எனக்கு இன்னும் தெளிவு தேவை.
*நான் சக்தியை, ஆற்றலைப் பெற வேண்டும்.
*நான் அதிக உணர்ச்சிவசப்பட்டதாக எண்ணுகிறேன்
*அவன் மீதான நம்பிக்கையே அதிகரித்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறேன்.
*இது அதிக மதிப்புமிக்க பொருள்.
*நான் இன்னும் அதிக மதிப்பு வாய்ந்த வேலையில் கவனம் செலுத்தவேண்டும்.
*உங்கள் குறிக்கோளில் கவனம் செலுத்துதல்

இந்தப் பயிற்சியின் வாயிலாக, நீங்கள் சில சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உதவும், உதாரணமான தாமதமாக வராதே என்பதற்கு பதிலாக, உரிய நேரத்தில் வா கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் பிரிவில் பயன்படுத்தக் கூடாத சொற்றொடர்களும், இரண்டாம் பிரிவில் பயன்படுத்த வேண்டிய சொற்றொடர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
………………………………………………………………………………………………..

பயன்படுத்தக்கூடாத சொற்றொடர் :
*தவறு செய்யாதே
*ஜாக்கிரதையாக இரு.
*அதிக அளவு சிரமப்படாதே
*உனதுநலனையும் பார்த்துக்கொள்.
*கோபப்படாதே
*சத்தம் போடாதே
*அநாவசியமான பணத்தைவிரயமாக்காதே
*செய்ய முடியாது என்று கூறாதே
………………………………………………………………………………………………..

பயன்படுத்தவேண்டிய சொற்றொடர்:
*ஜாக்கிரியாதையாக இரு
*உனது நலனையும் பார்த்துக்கொள்
*அமைதியாக இரு
*அமைதியாகபேசு
*உன் எதிர்காலத்தைசேமி
*இதை எப்படி செய்யலாம் என்று பார்
………………………………………………………………………………………………..
இயலாமை குறித்த கேள்விகள்:

எப்போதும் பெரிய அளவில் பெரிய அளவில் வியாபாரம் செய்யும் வாய்ப்பு ஏன் கிடைப்பதே இல்லை.

நிறைவேற்றும் வகையிலான கேள்விகள்:
பெரிய அளவில்வியாபாரத்தை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.

இரண்டு விதமான கேள்விகனான தீர்வுகள்:

என் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.பெரிய அளவில் வியாபாரத்தை யார் முடிவு செய்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

………………………………………………………………………………………………..
FAQ – MC

1. M.C.என்பது யார்?

Marketing Chife (வியாபாரப் பிரிவிற்கு தலைவர் ஆவார்). அவர் தனக்கு கீழ் மார்கெட்டிங் மேனேஜர்களையும் excutive களையும் உருவாக்கி நிறுவனத்தின் சட்டத்திட்ட நெறி முறைகள், விதிமுறைகள் M.M களுக்கும். ME களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். MC க்கள் தங்கள் ஆளுமை திறனை வளர்த்ததுக் கொண்டு நேர்மறையான, ஒழுக்கமான வாழ்வியல் அமைத்துக் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு நல்ல தலைவர்களாக விளங்குவார்கள்.

2. M.M. என்பது யார்?
MM என்பவர் நிறுவனத்தின் வியாபார பிரிவிற்கு Manager ஆவார். MM
களுக்கு கொடுக்கப்படும் இலக்கை நேரடியாகவோ அல்லது ME க்கள்
மூலமாகவோ முடிக்க வேண்டும்.

3. ME என்பது யார்?
ME என்பவர் பகுதி நேரமாக விற்பனை செய்து MM கீழ் கட்டளையின் பேரில் இருப்பவர்கள்

4. MC களுக்கும் MM களுக்கும் கமிஷனை தவிர வேற என்னென்ன செய்கிறது. இவர்களுக்காக நிறுவனம் பெரியார் ரியல்டர்ஸ் கேர் என்ற பிரிவை ஆரம்பித்து அவர்களுக்காக வியாபார பயிற்சி வகுப்புகள், பரிசுகள் வெகுமதிகள் அவார்டுகள் ஆன்லைன் வகுப்புகள் சுற்றுலாக்களுக்கள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்கான தளங்களை உருவாக்குகிறது.

5. MC தலைமையில் M.M M.E களுக்கான ஒருகிணைப்பு ஒற்றுமையை ஏற்படுத்தி சமூக பொருளாதார குடும்பத்தின் சிறு, சிறு பிரச்சனைகளுக்கு ஆதரவாக இருக்கும்படியான ஒரு தளத்தை உருவாக்குகிறது.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

 #முகவர் #Marketing #Chife #excutive #தொழில்நுட்பம் #பிராஸ்பெக்டஸ் #success #book #ajent  #customer #seller #technalogy

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்