உங்கள் 30வயதுகளில் குபேரனாகும் வழிகள்! (தொடர் – 2)

126c147b448ccfb8e0d4cca1bc6e9542
குபேர கண்ணோட்டம்!

ஜைன மதத்தில் ஒரு கொள்கை உண்டு சம்யிக் தர்ஷுன் என்று சொல்வார்கள். அதாவது சரியான பார்வை என்று பொருள்படும். இந்த உலகத்தை நாம் பார்க்கிற கண்ணோட்டத்தின் படி தான் நம்முடைய வாழ்க்கை அமையும், அதனால் இந்த உலகத்தை மிக சரியாக பார்க்க வேண்டும்.புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிறகு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

கடை & இடை வருவாய் நிலையில் வாழ்கின்ற மக்ககளுக்கு கண்ணோட்டம், கடை & இடை வருவாய் நிலையிலேயே இருக்கும். உடல் ரீதியாக செல்வ மனநிலைக்கு வந்துவிட வேண்டும். அப்பொழுது தான் தாங்கள் எந்த நிலையில் எங்கு இருந்தாலும், குபேர நிலையை அடைய முடியும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் பொழுது தான் செல்வம் கிடைக்கிறது.

எனவே பிரச்சனைகளை சொல்லும் நிலையில் இல்லாமல் தீர்க்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். எப்பொழுதும் தீர்வு கொடுக்கின்றவர்ள் பக்கம் இருந்து கொள்வது தீர்வுக்கான பார்வையை
பார்ப்பதே குபேர கண்ணோட்டம்.

எல்லா தடைகளையும் வாய்ப்புகளாக பார்க்க வேண்டியது.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! கொடும்பகை , கொடும் துரோகம் உங்களை நோக்கி வரும் போது கவலை படாமல், நிதானமாக அதனை வெற்றி பெற வழிகளை தேடுவது
ஒரு செயல் நடந்தால், மகிழ்ச்சியும், துக்கமும் அடையாமல் மனதை நடுநிலையில் சமநிலையில் வைத்து இருப்பது.

எப்பொழுதும் பார்வையில் நேர்மறையும் , செயலில் நேர்மையும், கொண்டு இருப்பது போன்ற எண்ணங்கள் அடிதளமாக அமைத்து அதன் பிறகு, பணம் சம்பாதித்து சேர்ப்பது தொடர் வருமானம் உருவாக்குவது என்ற எண்ண ஓட்டத்தை கொண்டு வருவதே குபேர கண்ணோட்டம்.

இங்கு இரண்டு வகையான வருமானம் இருக்கிறது!
1.Active incom ,
2.Passive income
பெரும்பாலும் ஏழைகள் ACTIVE INCOME –ல் லே வாழ்கிறார்கள். 90% நபர்கள் ACTIVE INCOME ல் இருக்கிறார்கள்

குபேரன்கள் PASSIVE INCOME ல் வாழ்கிறார்கள். 10% மக்களே தங்களை PASSIVE INCOME க்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.

ACTIVE வருமானம் என்பது கிணற்றில் இருந்து நீரிறைத்து பக்கெட்டில் நீரை வீட்டுக்கு கொண்டு வருவது போலாகும்.

PASSIVE வருமானம் என்பது கிணற்றில் இருந்து மோட்டார் போட்டு, பைப் வழியாக டேங்க் வந்து மீண்டும் நல்லி வழியாக தண்ணீர் வீட்டிற்குள் வருவது ஆகும்.

ACTIVE வருமானம், நோயுற்றாலோ லீவு எடுத்தாலோ, இறந்து விட்டாலோ நின்றுவிடும்.

PASSIVE வருமானம் என்பது லீவு, நோய் இறப்பு எது நடந்தாலும், வந்து கொண்டே இருக்கும்.

ACTIVE வருமானம் பெற ACTIVE வாக செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும். PASSIVE வருமானம் பெற உருவாக்கும் வரை கஷ்டப்பட்டால் பிறகு தலைமுறை தாண்டி வந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் ஏழைகளில் இருந்து குபேரனாக ACTIVE வருமானத்தில் இருந்து PASSIVE வருமானத்திற்கு மாறுதல் வேண்டும்.

PASSIVE INCOME என்றால் என்ன?
என் 19 வயதில் காஃப் மேயார் அவர்களின் தொடர் புத்தகங்கள் வாசிப்புக்கு பிறகு என்னுடைய கண்ணோட்டம் மாற ஆரம்பித்தது. இதன் பிறகு நான் படித்த நூலகம் எனக்கு வேறாகவே பட்டன. என்னுடன் இருந்தவர்களுக்கும், சுற்றதாருக்கும் எனக்கும் பார்வையும் கோணமும் மாறுவதை உணர்ந்தேன்.

அதற்கு முன் வசதி படைத்தவர் என்றால் கோடிக்கணக்கான தொகையை வெறுமனே வங்கியில் வைத்து இருப்பவர். தேவைப்படும் போது எடுத்து செலவு செய்கின்றனர் என்று நினைத்தேன். அதன்படி தான் எனக்கு சொல்லி கொடுக்கப்பட்டது. பெரும் தொகை வைப்பு நிதி போல் வைத்து இருப்பதுதான் வசதி படைத்தவர்க்களுக்கான தகுதி என்பது எவ்வளவு தவறு என்று பல புத்தகங்கள் வாசிப்புக்கு பிறகு புரிந்தது.

உண்மையில் வசதி படைத்தவர்கள் என்பது PASSIVE INCOME வர கூடிய அதாவது பெரிய அளவில் செயலாற்றாமல் ஒரு தொடர் வருமானம் வருவதை போன்று வழிகளை உருவாக்கி வைத்து இருப்பவர்களே வசதி படைத்தவர்கள்.

அந்த அந்த சீசனுக்கு நெல்லை விதைத்து அறுவடை செய்வதை விட , ஒரு மாந்தோப்பை உருவாக்கி விடுவதுதான் மிகச்சிறந்த PASSIVE INCOME, தோப்பு ஆரம்ப காலங்களில் அதிக உழைப்பும், பிறகு, பெரும் உழைப்பு தேவைபடாமலேயே கனிகளை பல ஆண்டுகளுக்கு கொடுத்து கொண்டு இருக்கும்.

ஒரு மலையில் பல வழிகளில் நீர் வீழ்ச்சிகள் மூலமாக தண்ணீர் வரும் போது பெரும் நதியாக உருவாக்கி மக்களுக்கு பயன் தருவதை போல், பல PASSIVE INCOME-கள், பல வழிகளில் உங்களிடம் சேரும்போது, குபேரனாகி மக்களுக்கும் மண்ணுக்கும் பயனுர வாழ்வது நடக்கும்.

PASSIVE INCOME உருவாக்குவதுக்கு என்ன தேவை!

பெரும்பாலும் PASSIVE INCOME சொத்துக்கள் மூலம் தான் உருவாகிறது. நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஒரு சொத்தை உருவாக்குவதும் அந்த சொத்து மீண்டும் புதிய சம்பாத்தியத்தை நமக்கு கொடுப்பதுதான். அதாவது நாமும் சம்பாதிக்கிறோம். நம்முடைய சொத்தும் சம்பாதிக்கிறது. என்பதே PASSIVE INCOME கான வழிமுறை.

அதனை உருவாக்க யார் முதல் வைப்பது, என்னிடம் பணம் இல்லையே, வசதி இல்லையே என்று நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு, PASSIVE INCOME க்கு முக்கிய தேவை தெளிவான அறிவும் + கடுமையான உழைப்பும் ஆக இந்த இரண்டும் இருக்கும் இடத்தில் காந்தத்தை இரும்பு தேடி வருவதை போல் பணம் இந்த இரண்டையும் தேடி வரும்.

அது என்ன அறிவும்! உழைப்பும்!
அறிவு என்பது எல்லை இல்லாதது, வாழ்நாள் முழுவது கற்றுகொண்டே இருந்தாலும் அதனை கற்று விட்டோம் என்று சொல்ல முடியாது. கற்றது கைம்மண்ணளவு! கல்லாதது உலக அளவு!

குபேரனாக பெரிய கல்வி எல்லாம் தேவை இல்லை! கற்று கொள்ளுதலை நிறுத்தாத மாணவனை போல் உலகை படித்துக்கொண்டே இருக்க வேண்டும். மக்களை படித்து கொண்டே இருக்க வேண்டும். உலகில் நடக்கின்ற மாற்றங்களை கூர்மையாக கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.


மக்களின் ஒரு தேவையை கண்டு படித்து விட்டாலே அதுதான் குபேனாக்குவதே கல்வி அந்த தேவையும் காலபோக்கில் மாற்றம் அடைந்து புதிய தேவை உருவாக்கும் இதனை புரிந்து கொள்வதே “குபேர அறிவு”.
தேவையை நன்று தெரிந்து விட்டால் அதனை செய்து கொடுப்பதுதான் உழைப்பு ஆகும்.

உழைப்பும் சாதாரண உழைப்பு அல்ல! GET OUT FROM THE COMFORT ZONE கொஞ்சம் தூங்கலாம், கொஞ்சம் அமரலாம் என்ற சின்ன சுகம் கூட இல்லாமல் உழைப்பது சுருக்கமாக பேய் உழைப்பை தர வேண்டும்! தெளிவான அறிவையும் அப்படி பேய் உழைப்பையும் அடைய என்ன தடையாக இருக்கிறது.

அறிவை பெற கற்று கொள்ளுதலில் சேரம் பேதமை!
அறிவை பெற கற்று கொள்ளுதலில் சேரம் பேதமை!!
உழைப்பை பெற கவன சிதைவுகளும், COMFORT ZONE ஆகும்.
இரண்டையும் அடைய இரண்டு வேரையும் வெல்ல! FOCUS மட்டுமே வேண்டும்.

குறிப்பு:

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ரியல் #எஸ்டேட் #Giving #Mindset #invester  #செக்யூரிட்டி #ரிட்டியர்  #முதலீடு #lord #buddhar

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்